புதிய உலகம்.கொம் |
- இந்த பூனையும் பால் குடிக்குமா? மோனிக்காவின் கவர்ச்சி மோகினியாட்டம்!
- தொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை: ஐ.ஐ.டி., மாணவர் சாதனை
- நான்கு ஆண்டுகளாக பிளாஸ்டிக் சாப்பிட்டு வாழும் அதிசய சிறுவன்
- நீராடிய நடனப் பெண் மீது கடலுக்கு அடியால் சென்று காம லீலை!
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- கார் உடன் உறவு கொள்ள விரும்பும் வினோத மனிதன்! (வீடியோ)
- வீட்டில் சொகுசாக வளரும் ராட்சதப்பாம்பு! (படங்கள் & வீடியோ)
| இந்த பூனையும் பால் குடிக்குமா? மோனிக்காவின் கவர்ச்சி மோகினியாட்டம்! Posted: 20 Jun 2012 09:26 PM PDT |
| தொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை: ஐ.ஐ.டி., மாணவர் சாதனை Posted: 20 Jun 2012 09:16 PM PDT உங்களின் சட்டையோ அல்லது கவுனோ, இலைகளைப் போல, வெளியில் உள்ள கார்பன் -டை- ஆக்சைடை உள்ளே இழுத்து, உங்களின் உடலுக்கு ஆக்சிஜனை தரும் என்ற தகவலை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒளிச்சேர்க்கை போன்ற செயலைச் செய்யும் இத்தகைய உடையை கவுகாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி-ஜி) மாணவர் உருவாக்கியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது, பலர் தொட்டு விளையாடி இருக்கும் தொட்டால் சிணுங்கி இலைகளுடன் நூலை ஒன்றிணைத்து இத்தகைய ஆடையை உருவாக்கியுள்ளார். விளையாடும்போது அணிவதற்கும், மிக சிக்கலான காலநிலைகளில் அணிவதற்கும் இந்த உடை மிகவும் ஏற்றது. விருது: உயிரியல் தொழில்நுட்பத்திலான இத்தகையை ஆடையை தயாரித்ததற்காக, ராஜதேஷ் நாத் பார்பூயியா, 27, என்பவரும், கவுகாத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவு பேராசிரியர் பிரதீப் யம்மியாவரும், "சில்வர் டிசைன் விருதை' பெற்றுள்ளனர். டிசைனர்களுக்காக, ஐரோப்பிய டிசைன் சங்கம் இத்தாலியின் கோமோ நகரில் நேற்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது. 36 பிரிவுகளில் புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளவர்களும், நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "தங்களின் தயாரிப்பான "உயிரி ஆடை'யானது, தொட்டால்சிணுங்கி தாவரத்துடன் வழக்கமான நூலைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிக செலவிலானது அல்ல' என்கிறார் கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் இந்த ஆண்டு வடிவமைப்பு பிரிவில் முதுகலைப் பட்டம் முடிக்கும் பார்பூயியா. "இந்த ஆடையானது வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாறும் தன்மை கொண்டது. இந்த வகை ஆடையை அணிபவர், வியர்வையில் நனையாமல் இருப்பதோடு, ஆக்சிஜன் குறைவான இடங்களில், அதை சீர் செய்யும் வகையில், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் தரும் தன்மையும் கொண்டது' என்றும் அவர் மேலும் கூறினார். நோக்கம் என்ன? பார்பூயியாவுக்கு இந்த ஆடை தயாரிக்க உதவிய யம்மியாவர் கூறுகையில், ""மாறும் தொழில்நுட்பத்திலான இந்த ஆடையைத் தயாரிக்க எங்களுக்கு ஆறு மாதம் ஆனது. கடந்த ஆண்டு மே மாதம்தான் இதைத் தயாரித்தோம். இயற்கையான முறைகளில் உள்ள அடிப்படையான மற்றும் புதுமையான விஷயங்களையும், செயற்கையான முறையில் அவற்றை எப்படி இணைத்து அமல்படுத்துவது என்பதையும் வெளிப்படுத்துவதே தயாரிப்பின் நோக்கம்,'' என்றார். பார்பூயியாவுடன் படிக்கும் மஞ்சுநாத் பூட்டா என்பவர், தெரு வியாபாரிகள் மற்றும் பொருட்களை கூவி விற்பவர்களுக்கான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய, மடக்கும் வசதி கொண்ட சிறிய அளவிலான அலமாரி ஒன்றைத் தயாரித்து, தேசிய புதிய கண்டுபிடிப்புகள் கவுன்சிலின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| நான்கு ஆண்டுகளாக பிளாஸ்டிக் சாப்பிட்டு வாழும் அதிசய சிறுவன் Posted: 20 Jun 2012 09:07 PM PDT கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக்கை நொறுக்குத் தீனி போல் சாப்பிடும் அரசு பள்ளி மாணவன், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான். காரைக்கால், திருப்பட்டினம் மேலவீதியைச் சேர்ந்த, ஆபிரகாம் மகன் சாக்ரடீஸ்,14. திருப்பட்டினம் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் தந்தை, கூலி வேலை செய்து வருகிறார். சாக்ரடீஸ், கடந்த 10 நாட்களாக, காரைக்கால் அண்ணா கல்லூரியில் நடந்து வந்த, என்.சி.சி., முகாமில் கலந்து கொண்டான். முகாமில், சாக்ரடீஸ், பிளாஸ்டிக் ஸ்கேல், சிறிய பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டான். இதை, சக மாணவர்கள், என்.சி.சி., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். முகாமிலிருந்த மருத்துவக் குழுவினர், மாணவனை பரிசோதனை செய்த@பாது, பிளாஸ்டிக் சாப்பிடுவதால், மாணவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. மாணவனை விசாரித்ததில், அவன் நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டு வருவதும் தெரிந்தது. இதுகுறித்து, மாணவனின் தந்தை ஆபிரகாம் கூறுகையில், "பல முறை தடுத்தும், தொடர்ந்து பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வருகிறான்' என்றார். பிளாஸ்டிக் சாப்பிடுவதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இனி பிளாஸ்டிக் சாப்பிடக் கூடாது என்றும், ஆசிரியர்களும், என்.சி.சி., அதிகாரிகளும், சாக்ரடீசை கண்டித்தனர். மாணவன் சாக்ரடீஸ் கூறியதாவது: நான், ஐந்தாம் வகுப்பு பயிலும் போதே, ஸ்கேல் உட்பட சில பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டு வந்தேன். எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், உயிருக்கு ஆபத்து என, பலர் பயமுறுத்தினர். அதனால், இனிமேல் பிளாஸ்டிக்கை சாப்பிடக் கூடாது என, முடிவு செய்துள்ளேன். இனி, பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட மாட்டேன். இவ்வாறு சாக்ரடீஸ் கூறினான். மேலும் பல மருத்துவ ஆய்வுகளுக்கு, சாக்ரடீஸ் உட்படுத்தப்பட உள்ளான் என, அவன் பெற்றோர் தெரிவித்தனர். வினொதங்கள் தொடரும்.... |
| நீராடிய நடனப் பெண் மீது கடலுக்கு அடியால் சென்று காம லீலை! Posted: 20 Jun 2012 11:22 AM PDT சிங்கள பெண் நடனக் கலைஞரான அயோத்திய மிஹராவி மாத்தறை பொல்ஹேன கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயற்சித்த நபர் நேற்று (19) மாத்தறை நீதிமன்றத்தில் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்தப் பெண் கலைஞர் சில வாரங்களுக்கு முன்னர் மாத்தறை பொல்ஹேன கடலில் குளித்துக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் கடலுக்கு அடியாகச் சென்று அவரைப் பாலியல் துன்புறுத்த முயற்சித்தார் எனக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தனது தவறை ஏற்றுக் கொண்ட இளைஞன் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் இவ்வாறான செயல்களில் எதிர்காலத்தில் தான் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதியளித்தார். Thanks To– எக்ஸ் தமிழ் நியுஸ் |
| உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..! Posted: 20 Jun 2012 11:21 AM PDT அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களைகண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழு வினருக்கு மிகப் பெரிய சவா லும்,சாதனையுமாகும். இம்மாத்தூண்டு தவளையைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோ பைரினி அமானூன்சிஸ் (Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி, ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம் நாள் வெளியிடப்பட்டது. அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..! Thanks:- - பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com) |
| கார் உடன் உறவு கொள்ள விரும்பும் வினோத மனிதன்! (வீடியோ) Posted: 20 Jun 2012 11:13 AM PDT குறிப்பாக ஒரு மனிதன் தான் எந்தப்பொருளை அதிகம் விரும்புகிறானோ அதை தனது வாழ்க்கையில் அதிமாகவே நேசிப்பது மனித இயல்பு. ஆனால் வாழ்க்கை குடும்பம் திருமணம் உறவு என்று வரும் போது ஒரு மனிதன் இன்னும் ஒரு பெண்ணைத்தான் நிச்சயமாக காதலிக்கவும் குடும்பம் நடத்தவும் முடியும். மாறாக மேலைத்தேய நாடுகளில் இது தலைகீழாகவே நடக்கிறது. உயிர் அற்ற ஐடப்பொருட்களை காதலிப்பதாகவும் அதனை திருமணம் செய்வதாகவும் ஏன் அதனுடன் உடலுறுவு வைத்துக்கொள்வதாகவும் கூட வெளிவரும் செய்திகளை நாம் காணக்கூடியதாக உள்ளது. இது ஒரு வகை மனஅழுத்தமாக கருதப்படுகிறது. ஒரு மனிதன் தன்னைக்கவரும் எந்த ஒன்றாக இருந்தாலும் இதன் மேல் தீவிர காதல் கொள்வதே இதற்கு காரணமாகிறது. இது போன்று ஒன்றுதான் இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் செய்தி. ஒரு மனிதன் தனது கார் தான் தனது எதிர்காலம் என்கிறான். கார் தனது உயிர் என்று உருகுகிறான். தான் தனது காரை காதலிப்பதாகவும் காருடன் உடலுறுவு வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிடுகிறான். என்ன நம்ப முடியவில்லை தானே.வீடியோ பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இது ஒரு முட்டாள் தனமாக இருந்தாலும் கூட இவ்வாறான மனிதர்கள் உலகில் ஏரானமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொன்றாக நாம் அறிமுகப்படுத்த காத்திருக்கிறோம். |
| வீட்டில் சொகுசாக வளரும் ராட்சதப்பாம்பு! (படங்கள் & வீடியோ) Posted: 20 Jun 2012 11:12 AM PDT பாம்பு என்றால் படையும் நடங்கும் என்ற பழமொழி ரொம்ப பழசாவே போச்சு. காரணம் இன்று பல்வேறு நாடுகளில் பாம்பை அரைத்து சூப்பு வைத்து குடிப்பதும்.. சிறுவர்கள் பாப்பை பிடித்து விளையாடுவதுமான பல சம்பவங்கள் செய்திளினூடாக நாம் பார்த்து ரசித்தவை. அவ்வாறே உங்களை ரசிக்கவும் வியக்கவும் வைக்கப்போகிறது இந்த செய்தியும். நாம் வீடுகளில் பாம்பை கண்டால் விரட்டியடிப்பது நிச்சயம். ஆனால் இங்கே ஒருவர் பாம்பையே தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இதுவும் கூட்டில் அடைத்து என்று நினைத்துவிடாதீர்கள். நடுவீட்டில் சகலவசதிகளுடனும் சொகுசாக வளர்ந்து வாழ்ந்து வருகிறது இந்த ராட்சத பாம்பு. மஞ்சள் நிறத்தில் காணப்படும் மலைப்பாம்பு இனத்தை சேர்ந்த இந்தப்பாம்புக்கு தனி கட்டில் நேரத்துக்கு சாப்பாடு சொகுசு குளியல் என வசதிகள் ஏராளம். 16 அடி நீளமாகன இந்த ராட்சத்பாம்பின் சொகுசு வாழ்க்கையை நீங்களும்தான் பாருங்களேன். |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















.jpg)




