விழியே பேசு... |
- நான் சதிகாரன் என்றால் சிறையில் அடையுங்கள்: அன்னா ஹசாரே
- ஒரே கையெழுத்தில் ரூ.1.70 லட்சம் கோடி கொள்ளை: தா.பா.
- தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை டி.வி.யில் காட்ட வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
- ஜஸ்வந்த் சிங் துணை ஜனாதிபதி ஆவாரா?
- இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்தான கேலி சித்திரத்தை உடனடியாக நீக்கவேண்டும்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா
- 'பில்லா 2' - 'சகுனி' அப்டேட்ஸ்!
- ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் கட்சி 15 இடங்களை கைப்பற்றும்: கருத்துக்கணிப்பில் தகவல்
- நடிகர் வடிவேலு உயிருக்கு ஆபத்தா? சென்னையில் பரபரப்பு
- மாவீரன் நெப்போலியன் கடிதம் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்(கடிதம் இணைப்பு)
- சகுனிக்கு யு - 375 அரங்குகளில் ரிலீஸ்!!
- 'பவர் ஸ்டார்' சீனிவாசன் Vs 'நீயா நானா' கோபிநாத்(வீடியோ)
- நித்தியானந்தா தயவால் மதுரை ஆதீன மடம் மூடப்படுகிறது, பூஜைகளும் கிடையாது!
- ஜூலை 19-ல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு
- புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது: 65 சதவீதம் வாக்குகள் பதிவு
- ஜூலை முதல் கவுதம் மேனனுடன் - விஜய்
- பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகும்: நாஞ்சில் சம்பத் பேட்டி
- பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் அடுத்த நிதி மந்திரி யார்?
- கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் தொழில்!
| நான் சதிகாரன் என்றால் சிறையில் அடையுங்கள்: அன்னா ஹசாரே Posted: 12 Jun 2012 11:33 PM PDT பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே குழுவினர் ஊழல் புகார்களைக் கூறியிருந்தனர். பதிலுக்கு, ஹசாரே குழுவினர் தேச விரோதிகள் என்று மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், ஹசாரே தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே என் குழு உறுப்பினர்கள் மீது அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களை தேச விரோதிகளாகப் பார்ப்பது துரதிருஷ்டவசமானது. ஹசாரே குழுவின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். அது எந்த வெளிநாட்டு சக்தி, அது எந்த நாடு? என்பதை அவர்கள் கூறவில்லை. இப்படிப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது சரியல்ல. என்னைத் தேசத்துரோகி என்று அழைப்பது தவறானது. நான் ஒரு சதிகாரன் என்று அரசு கூறுகிறது. அது உண்மை என்றால் என்னைச் சிறையில் அடையுங்கள். ஒரு சாமானிய மனிதன் குற்றச்சாட்டுகளைக் கூறுவது என்பது வேறு. ஆனால் பிரதமர் அலுவலகம் இவ்வாறு குற்றச்சாட்டுகளைக் கூறுவது மிகவும் தீவிரமானது. எங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு இருக்கிறது என்றால் உங்களிடம் இருக்கும் உளவுப் பிரிவை வைத்து அதை நீங்கள் ஏன் கண்டுபிடிக்கக் கூடாது? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமரோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ பணம் வாங்கியதாக நான் நம்பவில்லை. எனினும் நெருப்பில்லாமல் புகையாது என்பதும் உண்மை. அந்தப் புகையைப் பிரதமர் பார்க்கவில்லையா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் பயனடைந்துள்ளதாகவும் மத்திய தணிக்கை அமைப்பு அறிக்கை கூறியுள்ளது. இதில் பயனடைந்தது யார்? இவ்வாறு ஹசாரே கூறினார். |
| ஒரே கையெழுத்தில் ரூ.1.70 லட்சம் கோடி கொள்ளை: தா.பா. Posted: 12 Jun 2012 11:16 PM PDT முன்பு ஆடு, மாடு, தானியங்களைத் தான் திருடுவார்கள். ஆனால் இன்று ஒரே கையெழுத்தில் ரூ.1.70 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சமுதாய மாற்றத்தை நோக்கிப் பயணம் செய்கிறது. எங்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. நமக்கு பதவி மீதும் ஆசையில்லை. மற்றவர்களுக்காக உழைப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம். காங்கிரஸ் கட்சி கூட 6 சின்னங்களைக் கடந்து வந்துள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஒரே சின்னத்துடன், ஒரே கொள்கையுடன் பயணம் செய்கிறது. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்பு வளர்ச்சியடைந்துள்ளது. அதே போல கொள்ளையும் அதிகரித்துள்ளது. முன்பு ஆடு, மாடு, தானியங்களைத் தான் திருடுவார்கள். ஆனால் இன்று ஒரே கையெழுத்தில் ரூ. 1.70 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என போலீசாரும், நீதிபதிகளுமே வியந்து போகின்றனர். இந்தியாவில் பெட்ரோல் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் விலையும் அதிகரித்துள்ளது. குறைந்த விலையில் ஈரான் பெட்ரோல் வினியோகம் செய்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு பயந்து ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்க மறுக்கிறது. தங்கம், டாலர் மதிப்பை உயர்த்தி, பொருளாதார ரீதியில் இந்தியாவை அமெரிக்கா வீழ்த்தி வருகிறது. இந்த நிலையை உருவாக்கிய காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு முற்போக்கு அரசு அமைய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகிறது என்றார். |
| தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை டி.வி.யில் காட்ட வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Posted: 12 Jun 2012 11:08 PM PDT லோக் சத்தா கட்சித் தலைவர் ஜெகதீஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகின்றனர். கர்நாடகாவில் தனியார் சேனல்களிலும் சட்டசபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்குத் தங்களது பிரதிநிதிகளின் சட்டசபை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் தமிழகத்திலும் சட்டசபை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு அவர்கள் மாற்றினர். விரைவில் இம்மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. |
| ஜஸ்வந்த் சிங் துணை ஜனாதிபதி ஆவாரா? Posted: 12 Jun 2012 11:01 PM PDT துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் விரும்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்து ஜஸ்வந்த் ஆதரவும் கோரினார். இந்திய ராணுவ அதிகாரியாக இருந்தவரான ஜஸ்வந்த் சிங் சர்வதேச விவகாரங்களில் பெரும் நிபுணத்துவம் பெற்றவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்தார். காந்தஹார் விமானக் கடத்தல் நடந்தபோது பயணிகளை மீட்க, தானே தனி விமானத்தில் ஆப்கானிஸ்தான் சென்ற துணிச்சல்காரர் ஜஸ்வந்த் சிங். மிகச் சிறந்த படிப்பாளி, பாஜகவில் இருந்தாலும் மதசார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்திய-அமெரிக்க நல்லுறவுக்கு ஜஸ்வந்த் சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலம் தான் ஒரு மைல் கல்லாகும். பாகிஸ்தானை ஆதரித்து வந்த அமெரிக்காவை இந்தியா பக்கமாக திருப்பிக் காட்டியவர். ஆனால், தேசிய அளவில் ஜஸ்வந்த் சிங்குக்கு நல்ல பெயர் இருந்தாலும் அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் அரசியல்ரீதியில் தனது செல்வாக்கை இழந்துவிட்டார். இதனால், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒழிய அரசியல்ரீதியில் ஜஸ்வந்த் சிங்குக்கு தொடர்ந்து ஓய்வு தான். இதனால் துணை ஜனாதிபதி பதவிக்கு ஜஸ்வந்த் சிங் குறி வைப்பதாகத் தெரிகிறது. இதற்கு தனது மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியாவின் ஆதரவையும் ஜஸ்வந்த் பெற்றுள்ளார். ஜஸ்வந்த் துணை ஜனாதிபதியாகிவிட்டால் ராஜஸ்தான் பாஜகவை வசுந்தராவால் முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் நேற்று கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக முலாயம் சிங்கின் ஆதரவைப் பெற அவரது இல்லத்துக்கு யோகா குரு ராம்தேவ் வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஜஸ்வந்த் சிங்கும் அங்கு வந்தார். மூவரும் கருப்புப் பணப் பிரச்சனை குறித்துப் பேசியதாக வெளியில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் முலாயமை தனியாக சந்தித்துப் பேசிய ஜஸ்வந்த் சிங், துணை ஜனாதிபதி பதவிக்கு தன்னை முன் நிறுத்தி அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு கோரியதாகத் தெரிகிறது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாஜக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது என்பதே உண்மை. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியையோ நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையோ தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்காது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதற்கு அந்தக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் நாங்கள் தனியே தான் முடிவெடுப்போம், பாஜகவின் முடிவையெல்லாம் ஏற்க முடியாது என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களான சரத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் கூறிவிட்டனர். அதே போல எந்தக் கூட்டணியையும் சாராத தெலுங்கு தேசம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவை பாஜகவை மதிக்கவே இல்லை. இதனால், பிறரது ஆதரவு இல்லாமல் தங்களது வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி உறுதி என்பதால் பாஜக அமைதி காத்து வருகிறது. இந் நிலையில் தான் தனது தனிப்பட்ட நட்பு, செல்வாக்கை வைத்து துணை ஜனாதிபதி பதவிக்கு ஜஸ்வந்த் சிங் முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவரது கட்சியில் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பது தெரியவில்லை. ரப்பர் ஸ்டாம்புகளுக்குப் பதில் பல்துறை நிபுணர்களான ஜஸ்வந்த் போன்றவர்கள் உயர்த்த பதவிக்கு வருவது நாட்டுக்கு நிச்சயம் நல்லதே. ஆனால், அது நடக்குமா?. |
| Posted: 12 Jun 2012 10:54 PM PDT தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டுள்ளது. அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது என்று, இங்குள்ள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் என்று கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 12-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள கேலிச் சித்திரத்தை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது- இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள கேலிச் சித்திரம் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், மாபெரும் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோரையும் அவமதிப்பதாக உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக அக்கேலிச் சித்திரத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். |
| 'பில்லா 2' - 'சகுனி' அப்டேட்ஸ்! Posted: 12 Jun 2012 10:44 PM PDT பில்லா 2' மற்றும் 'சகுனி' இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகும் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. கார்த்தி நடிக்கும் 'சகுனி' திரைப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். 'சகுனி'யின் தயாரிப்பாளரும் படம் 22ம் தேதி வெளியாகும் என்று உறுதி செய்து இருக்கிறார். ஜுன் 22 முதல் 'சகுனி' என்று நாளை முதல் விளம்பரப்படுத்த இருக்கிறார்கள். 'சகுனி' திரைப்படம் உலகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியாகிறது. அஜீத் நடிக்கும் 'பில்லா 2' படம் ஓரிரு நாட்களில் சென்சார் செய்யப்பட இருக்கிறது. சென்சார் முடிந்த உடன் 'பில்லா 2' படத்தினை வெளியிடும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்து 'பில்லா 2' காலண்டர் மற்றும் படத்தின் அடுத்த டிரெய்லரையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 'பில்லா 2' படம் 'சகுனி'க்கு ஒரு நாளுக்கு முன் ஜுன் 21ம் தேதி வெளியாகும் என்பது முடிவாகி இருக்கிறது. இவ்விரண்டு படங்களுக்கும் தியேட்டர்களை புக் செய்யும் பணி தீவிரமாகி உள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் 'பில்லா 2' படத்திற்காக முக்கிய திரையரங்குகள் அனைத்தையும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து பெரிய நாயகர்கள் படங்கள் போட்டியிடுவதால் ஜுன் 21- 24 வரை விநியோகஸ்தர்கள் காட்டில் பணமழை தான்! |
| ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் கட்சி 15 இடங்களை கைப்பற்றும்: கருத்துக்கணிப்பில் தகவல் Posted: 12 Jun 2012 10:25 PM PDT ஆந்திரா, தமிழகம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 26 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு எம்.பி.தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆந்திராவில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை, ஹெட்லைன்ஸ் டுடே என்ற தேசிய செய்தி சேனல் நடத்தியது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ள விவரங்கள் வருமாறு:- கடப்பா எம்.பி. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தேர்தல் நடந்த 18 தொகுதிகளையும் கைப்பற்றாவிட்டாலும், பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும். 13 முதல் 15 தொகுதிகள் அந்த கட்சிக்கு கிடைக்கும். அதே போல, நெல்லூர் எம்.பி. தொகுதியிலும் ஜெகன்மோகன் கட்சி வெற்றிபெறும். காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெறும். பதிவான மொத்த வாக்குகளில் ஜெகன்மோகன்ரெட்டி கட்சிக்கு 40 சதவிகித வாக்குகள் கிடைக்கும். ரெட்டி சமூக ஓட்டுக்கள், ஜெகன்மோகன் கட்சிக்கு முழுமையாக விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யம் கட்சி இணைந்ததால், காங்கிரசுக்கு எந்தப்பலனும் இல்லை. இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. விஜயவாடா காங்கிரஸ் எம்.பி.யான லகடபட்டி ராஜகோபால், தன் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை வெளியிட்டார். அதில், ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு குறைந்தபட்சம் 12 இடங்களும் அதிகபட்சம் 16 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.பி.என். ஆந்திரஜோதி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், தெலுங்குதேசம் 4 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி ஒரு இடத்திலும் வெற்றிபெறும் என தெரிய வந்துள்ளது. |
| நடிகர் வடிவேலு உயிருக்கு ஆபத்தா? சென்னையில் பரபரப்பு Posted: 12 Jun 2012 10:47 AM PDT நடிகர் வடிவேலு உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று (12.6.2012) மாலை சென்னை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதை உறுதி செய்துகொள்ளும் விதமாக நடிகர் வடிவேலுவையும், அவரது உதவியாளர்களையும் தொடர்பு கொண்டபோது அனைத்து தொடர்புகளூம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு மேலும் அதிகமாகியுள்ளது. வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள் உண்மை நிலை அறிய அவரது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். |
| மாவீரன் நெப்போலியன் கடிதம் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்(கடிதம் இணைப்பு) Posted: 12 Jun 2012 08:59 AM PDT பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். போரின் மூலம் உலக நாடுகளை வென்ற இவர் வாட்டர்லு போரில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 1816-ம் ஆண்டு பெலன்தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது இவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினார். அப்போது அவர் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்ததால் மிகவும் பிழையாக இருந்தது. அக்கடிதம் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதை பிரான்ஸ் அரசு நிறுவனம் ரூ.2 1/2 கோடிக்கு அதாவது 4 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு கூடுதல் தொகையாகும். |
| சகுனிக்கு யு - 375 அரங்குகளில் ரிலீஸ்!! Posted: 12 Jun 2012 08:30 AM PDT ![]() கார்த்தி நடிக்கும் சகுனி படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர். சமீபத்திய படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படம் சகுனி. அஜீத்தின் பில்லா 2வுடன் மோதும் இந்தப் படத்தில் கார்த்தி - பிரனிதா நடித்துள்ளனர். அரசியல் - ஆக்ஷன் - நகைச்சுவை என கார்த்திக்கே உரிய ஜனரஞ்சகத் தன்மையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்த்தியின் அரசியல்வாதி கெட்டப் அவரது ரசிகர்களை உற்சாகத்துடன் 'தலைவா' கோஷத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் நேற்று பார்த்தனர். எந்த இடத்தில் கட் கொடுக்காமல், அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர். ரூ 375 அரங்குகளில்... வரும் ஜூன் 22-ம் தேதி, பெரிய அளவில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. 375 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கார்த்தி நடித்த படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். சகுனியின் தெலுங்குப் பதிப்பும் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக வெளியாகிறது! |
| 'பவர் ஸ்டார்' சீனிவாசன் Vs 'நீயா நானா' கோபிநாத்(வீடியோ) Posted: 12 Jun 2012 07:26 AM PDT |
| நித்தியானந்தா தயவால் மதுரை ஆதீன மடம் மூடப்படுகிறது, பூஜைகளும் கிடையாது! Posted: 12 Jun 2012 06:12 AM PDT நித்தியானந்தா பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளதாலும், தலைமறைவாகி விட்டதாலும், அவரை கர்நாடக போலீஸார் தீவீரமாக தேடி வருவதாலும், மதுரை ஆதீன மடத்தை மூடி விட்டனர், பூஜைகளையும் நிறுத்தி விட்டனர்.இதனால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை ஆதீன மடத்திற்கு வந்த சோதனை இன்னும் தீரவில்லை.தொடர்ந்து ஆட்டிப்படைத்து அலைக்கழித்து வருகிறது. இந்த மடத்தின் வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்த மதுரை ஆதீனம் தற்போது ஏகப்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.இந்த நிலையில்தான் கர்நாடகத்தில் கன்னட பத்திரிக்கையாளர்களுடன் மோதி நித்தியானந்தா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். தலைமறைவாகி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.அவர் எங்கிருக்கிறார் என்பது பெரும் மர்மமாக உள்ளது. அவரது வாழ்க்கையில் இது இரண்டாவது தலைமறைவு ஓட்டமாகும். பிடதி ஆசிரத்தை மூடி சீல் வைக்க கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா உத்தரவிட்டு விட்டார். நித்தியானந்தாவையும் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுரைக்கு நித்தியானந்தா தப்பி ஓடி வந்துள்ளதாகவும், ஆதீன மடத்துக்குள்ளேயே அவர் பதுங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் மதுரை பக்கம் கர்நாடக போலீஸாரின் பார்வை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை போலீஸாரின் உதவியுடன் ஆதீன மடத்திற்குள் புகுந்து நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் கைது செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில் திடீரென ஆதீன மடத்தை பூட்டி விட்டார்கள். இரு பக்க கேட்களும் மூடப்பட்டுள்ளன.தற்காலிகமாக மடம் மூடிவைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளனர். இனால் மதுரை ஆதீன மடத்தை இன்னும் மலை போல நம்பியிருக்கும் அப்பாவி பக்தர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். |
| ஜூலை 19-ல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு Posted: 12 Jun 2012 05:36 AM PDT நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறியதாவது: நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 16-ந் தேதி தொடங்கும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 30-ந் தேதி ஆகும். வேட்பு மனுத்தாக்கல் செய்வோரை 50 எம்.எல்.ஏக்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய ஜூலை 2-ந் தேதி கடைசி நாள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூலை 19-ந் தேதி நடைபெறும். நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறும். இத்தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் ஜூலை 22-ல் வெளியாகும். இத்தேர்தலை மாநிலங்களவையின் செயலர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்து நடத்த உள்ளார் என்றார் அவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. அதிமுக, பிஜூ ஜனதா தளம் சார்பில் சங்மா போட்டியிடுகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியை தங்களது அணிக்கு விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் வேட்பாளரை பாஜக அணி ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது. |
| புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது: 65 சதவீதம் வாக்குகள் பதிவு Posted: 12 Jun 2012 05:18 AM PDT புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மரணம் அடைந்ததால் இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் உள்பட 20 பேர் போட்டியிட்டனர். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 980. இதில் ஆண்கள் 97 ஆயிரத்து 371 பேர். பெண்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 604. இதர வாக்காளர்கள் 5 பேர். தேர்தல் பிரசாரம் 10-ந்தேதி மாலையுடன் முடிவடைந்ததையடுத்து இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 37 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசுப் பணியில் உள்ள நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும் முன்பே புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஓட்டுப்பதிவு தொடங்கியதும் கூட்டம் மேலும் அதிகமானது. புறநகர் பகுதியில் மந்தமாக தொடங்கிய வாக்குப் பதிவு 9 மணிக்கு மேல் விறு, விறுப்படைந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் 65 சதவீதம் வாக்குப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து, வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே வெற்றி பெற்றவர் யார் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டு விடும். |
| ஜூலை முதல் கவுதம் மேனனுடன் - விஜய் Posted: 12 Jun 2012 04:29 AM PDT கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்துக்கு பச்சைக் கலரில் விதவிதமாக விளம்பரங்கள் வெளியானதோடு சரி. கவுதம் மேனன் தன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக, விஜய்யும் வேறு வேறு படங்களுக்காக தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸாக வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் இந்தப் படம் தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கவுதம் மேனன் தன் இலக்கில் தெளிவாக இருந்து, விஜய்யைப் பிடித்துவிட்டார். வரும் ஜூலையிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என மீண்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். யோஹன் குறித்து அவர் கூறுகையில், "எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் தரும் என்பது உறுதி," என்றார். யோஹன் படம் தொடங்கும்போதே 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்கிறார் கவுதம் மேனன். பிரேம் சாய் என்ற புதிய இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்கிறார்கள். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் 'கூரியர் பாய் கல்யான்'! |
| பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகும்: நாஞ்சில் சம்பத் பேட்டி Posted: 12 Jun 2012 03:47 AM PDT முதல்-அமைச்சர் ஜெயலலிலதாவை அவதூறாக பேசிய வழக்கு விசாரணைக்காக ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கரூர் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாம்பன் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணை கட்டினால், தமிழகத்தில் அமராவதி ஆற்றின் மூலம் நடைபெறும் விவசாயம் அடியோடு அழிந்து விடும். எனவே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 23-ந்தேதி உடுமலைப்பேட்டையில் தொடங்கும் அமராவதி ஆற்றில் இருந்து கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் வரை 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பிரசாரம் செய்து மக்களிடம் உரையாற்றுகிறார். தமிழக மக்களை 2-ம் தர குடிமகனாக மத்திய அரசு கருதுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மொழிக்காக தன் உயிரை நீத்தவர்கள் தமிழர்கள். இந்த நிலையில் சி.பி.எஸ்.சி. பாட புத்தகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உள்ள கேலி சித்திரங்கள் உள்ள பகுதியை நீக்க வேண்டும். இல்லை என்றால் அந்த புத்தகங்களை நாங்கள் தீயிட்டு கொளுத்துவோம். மாநில உரிமைகளுக்காவும், மாநில அரசின் உரிமைகளை கபளீகரம் செய்யும் மத்திய அரசை எதிர்த்தும் குரல் கொடுத்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றி தர வில்லை. பாகிஸ்தானில் நிலவும் மின்பற்றாக்குறையை போக்க 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அந்த நாட்டிற்கு தரும் மத்திய அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய மின்சாரத்தை கூட தர மறுக்கிறது. இதை ஏன் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முற்போக்கு கூட்டணியில் உள்ள கருணாநிதி ஆகியோர் தட்டி கேட்க வில்லை? திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆகியவை வருகிற செப்டம்பர் மாதம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடை பெற உள்ளது. அதற்காக இந்த மாதம் 23-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது. 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடும். காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கட்சிகளை கொண்டு புதிய கூட்டணி உருவாகும். அந்த கூட்டணியில் ம.தி. மு.கவுக்கு முக்கிய இடம் இருக்கும்.பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி நிச்சயம் இல்லை. அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்பது குறித்து இப்போதைக்கு கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். |
| பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் அடுத்த நிதி மந்திரி யார்? Posted: 12 Jun 2012 03:08 AM PDT ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகும் பட்சத்தில் மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்ய வேண்டியது வரும். இதுபற்றி சோனியாவும், மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசில் நிதி இலாகா மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் வளர்ச்சியையும், அரசின் கொள்கைகளையும் நிதி அமைச்சகம்தான் தீர்மானிக்கிறது. 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் பிரணாப் முகர்ஜி இடத்துக்கு மிகவும் தகுதியானவரை சோனியா தேடி வருகிறார். அவருக்கு திருப்தி கிடைக்காத பட்சத்தில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி இலாகா பொறுப்பை தன் வசம் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மன்மோகன் சிங் நிதி இலாகா சுமையை விரும்பாவிட்டால், தற்போதைய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் நிதி மந்திரியாக மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. ப. சிதம்பரம் ஏற்கனவே நிதி மந்திரியாக இருந்து நல்ல அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ப. சிதம்பரத்துக்கு நிதி இலாகா கிடைக்காவிட்டால் ஜெய்ராம் ரமேசுக்கு நிதி இலாகா கொடுக்கப்படலாம். தற்போது ஊரக மேம்பாட்டு மந்திரியாக இருக்கும் இவர், உலக வங்கியில் பணியாற்றியவர். மேலும் சோனியாவின் நம்பிக்கைக்குரியவராக இருப்பவர். இதற்கிடையே பிரதமர் மன்மோகன்சிங், புதிய நிதி மந்திரி பதவியை பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவருக்கு கொடுக்கலாம் என்று கூறியுள்ளாராம். அதன்படி பார்த்தால் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பிரணாப் முகர்ஜி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருக்கிறார். அந்த பதவி மத்திய மந்திரி சுசீல்குமார் ஷிண்டேக்கு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. |
| கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் தொழில்! Posted: 12 Jun 2012 03:01 AM PDT இலங்கை தலைநகர் கொழும்பில் கிழக்கு மாகாணப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிராமப் பகுதிகள் அதிகம். ஆனால் இங்குள்ள பெரும்பான மக்களுக்கு வாழ்க்கை நடத்த தேவையான பொருளாதார வசதி இல்லை. இதனால், அங்குள்ள இளம் பெண்கள் கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று தொழில் செய்ய விரும்புகின்றனர். இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் கும்பல் அவ்வாறு வரும் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து, கொழும்பில் சிறைவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகின்றது. கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களே இந்த மோசடி கும்பலின் இலக்கு என கூறப்படுகின்றது. வேலை பெற்றுத் தருவதாக கூறி, தங்களை சிலர் ஏமாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் போலீஸாரிடம் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, பதுளையில் திடீர் சோதனை நடத்திய போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சிறை வைக்கப்பட்டிருந்த 11 இளம் பெண்களை மீட்டுள்ளனர். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















