Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


தொடர்ந்து மூன்று மாதங்களாக தூங்கிய அதிசய சிறுமி

Posted: 15 Jun 2012 12:50 PM PDT

பிரிட்டனை சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்ற சிறுமி, கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து தூங்கி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு மிட்லாண்டின் டெல்ஃபோர்டைச் சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்பவர் அரிதான நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மாதங்களுக்கு தூங்கிக் கொண்டிருப்பார்கள். உலகில் ஆயிரத்தில் ஒருவர் தான் இந்த லெயின் லெவின் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக அந்த சிறுமி தூங்கியதால் 9 தேர்வுகளை அவர் எழுதவில்லை. மேலும் தனது பிறந்தநாளன்றும் அவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து வெளியில் சொன்னால் மக்கள் நம்புவதில்லை. இது மிகவும் சிரமமாக உள்ளது என அந்த சிறுமி வருத்தத்துடன் கூறியுள்ளார்.


வினோதங்கள் தொடரும் 

ஓட்டலில் லட்சுமி ராயின் ரூமில் இருந்த நபர் : திடுக்கிட்டு ஓடிய நடிகை!

Posted: 15 Jun 2012 12:17 PM PDT

லண்டன் ஓட்டலில் ரூம் ஒதுக்காததால் ஷூட்டிங் போக மறுத்து அடம் பிடித்தார் லட்சுமிராய். தெய்வத் திருமகள் படத்தை அடுத்து விஜய் இயக்கும் 'தாண்டவம் பட ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லட்சுமிராய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றார்.

நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேராக அங்கு சென்று மேக்அப் போட்டுக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வரும்படி இயக்குனர் கூறி இருந்தார். இதையடுத்து ஓட்டல் அறைக்கு சென்ற லட்சுமிராய் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறை வசதியாக இல்லாததால் ஷூட்டிங் செல்லாமல் தவிர்த்தார். இதனால் பிரச்னை எழுந்தது.

இது குறித்து இயக்குனர் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை அவருக்கு தருமாறு கூறினார். அதன்பிறகு லட்சுராய் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்தார் என்று பட குழுவினர் தெரிவித்திருந்தனர். இது பற்றி லட்சுமிராயிடம் கேட்டபோது, 'லண்டன் ஓட்டலில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றேன். ஆனால் அங்கு வேறு யாரோ தங்கி இருந்தார்.

இதனால் அப்செட் ஆனேன். 45 நிமிடம் ஓட்டல் லாபியிலேயே காத்திருந்தேன். இதுபற்றி தகவல் தெரிவித்தபிறகு எனக்கு வேறு அறை ஒதுக்கப்பட்டது. இதுதான் நடந்தது. மற்றபடி பிரச்னை எதுவும் செய்ய வில்லை என்றார்.

கள்ளப்புருசனுக்காக கணவனை கட்டிலில் கொன்ற "பத்தினி" கைது

Posted: 15 Jun 2012 12:05 PM PDT

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கள்ளக்காதலனோடு சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர்அலி ராஜா(32). மாற்றுத்திறனாளியான இவர் எஸ்டிடி பூத், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பீமாபானு(22). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பீமாபானுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்(19) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது அக்பர் அலிராஜாவிற்கு தெரிய வரவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்தது பற்றி, பீமாபானு தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். இதனால் கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனோடு சேர்ந்து பீமாபானு திட்டமிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்துல் ரகுமான், அவரது நண்பர்கள் கோ.தமீம் அன்சாரி(23), அ. தமீம்அன்சாரி(20) ஆகியோர் மது அருந்திவிட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் பீமா பானு வீட்டுக்கு வந்தனர். அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அக்பர்அலி ராஜாவை, மனைவியின் உதவியோடு தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டு சென்றனர்.

அதிகாலை விடிந்ததும் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்களிடம் பீமாபானு தெரிவித்தார். இதுகுறித்து அக்பர்அலி ராஜாவின் தாய் பஷீர்மா பீவி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் உடலை கைப்பற்றி மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பீமாபானு மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனோடு சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதை விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பீமாபானு, கள்ளக்காதலன் அப்துல்ரகுமான், அவரது நண்பர்கள் உள்பட 4 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

வானிலை அறிக்கை வாசிக்க பிகினி உடையில் தோன்றிய அழகிகள்

Posted: 15 Jun 2012 12:03 PM PDT

சீனா டிவியில் நீச்சல் உடையில் மாடல் அழகிகள் வானிலை அறிக்கை படிக்கும் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டிவியில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஒளிபரப்பின் போது பிகினி (நீச்சல் உடை) அணிந்து வந்த மாடல் அழகிகள் வானிலை அறிக்கை படித்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்களிடம் உடனடியாக ஆன்லைனில் கருத்து கேட்டது டிவி நிறுவனம். பிகினியில் மாடல் அழகிகளை பார்த்த பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஷாங்காய் டெய்லி பத்திரிகை கூறுகையில், 'யூரோ கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இது முடிந்தவுடன், சீனாவில் பிகினி போட்டி நடக்க உள்ளது. அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிகினி போட்டியில் பங்கேற்கும் 2 அழகிகள் டிவியில் வானிலை அறிக்கை படிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. யூரோ கால்பந்து போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், பிகினி உடையில் 2 இளம்பெண்கள் திடீரென தோன்றி வானிலை அறிக்கை படிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

யூரோ கால்பந்து போட்டிகள் நடக்கும் மைதான பகுதியில் உள்ள வானிலை குறித்து கடந்த சனிக்கிழமை முதல் இரவு 11.15 மணிக்கு ஒரு நிமிடம் ஒளிபரப்பாகிறது. பார்வையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, பிகினி உடை அழகிகளுக்கு பதில் வழக்கம் போல் முழு உடை அணிந்த பெண்கள் இப்போது வானிலை அறிக்கை படிக்கின்றனர். எனினும், பிகினி உடையில் மாடல் அழகிகள் வானிலை அறிக்கை படிப்பதற்கு பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை கவிழ்ப்பேன் : பொன்சேகா சூழுரை

Posted: 15 Jun 2012 12:02 PM PDT

இலங்கையில் அதிபர் ராஜபக்சேவின் சர்வாதிகார ஊழல் நிறைந்த ஆட்சியை, 2016 தேர்தலில் கவிழ்ப்பேன்' என்று முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா.

சண்டை முடிவுக்கு வந்த பிறகு, அதிபர் ராஜபக்சேவின் மனித மீறல்கள் குறித்தும், இலங்கை தமிழர்களுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பொன்சேகா பகிரங்கமாக பேசினார். அதனால் ராஜதுரோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அதிபர் ராஜபக்சே மன்னிப்பு வழங்கியதன் பேரில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல் முறையாக கொழும்புவில் நிருபர்களை சந்தித்த பொன்சேகா நேற்று கூறியதாவது: இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அதிபர் ராஜபக்சே சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். இதுகுறித்து விசாரிக்க தனி அதிகாரம் படைத்த நீதி விசாரணை நடத்த வேண்டும். நாட்டில் ஊழல் நிறைந்து விட்டது. வரும் 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜபக்சேவின் அரசை, மற்ற எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் கவிழ்ப்பேன்.

நான் சொந்த நலனுக்காக அரசியலுக்கு வரவில்லை. எனது கொள்கையில் இருந்து என்றும் மாற மாட்டேன். அரசில் நான் சேர்ந்து விடுவேன் என்று என்னை பற்றி வரும் யூகங்கள் தவறானவை. கொள்கைக்காக நான் எதிர்க்கட்சியில் தான் இருப்பேன். நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற எனது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு பொன்சேகா கூறினார்.

84 வயதில் பெண்ணாக மாற விரும்பும் முதியவர் : சீனாவில் பரபரப்பு!!

Posted: 15 Jun 2012 12:00 PM PDT

சீனாவில் 84 வயதாகும் முதியவர், பெண்ணாக மாற வேண்டும் என்று திடீரென முடிவெடுத்துள்ளார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக இருக்கிறார். சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் குயான் ஜின்பேன். இப்போது வயது 84.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். இவருக்கு சிறுவயதில் இருந்தே பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. ஆனால், தனது ஆசையை இதுவரை மறைத்து வந்துள்ளார். இப்போது பகிரங்கமாக அதை வெளிப்படுத்திய குயான், மார்பகங்களை பெரிதாக்கும் ஹார்மோன் மாத்திரைகளையும் சாப்பிடுகிறார். பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் தயாராகிவிட்டார்.
இதுகுறித்து குயான் கூறியதாவது:

எனக்கு 14 வயதிருக்கும் போதே பெண்ணாக வேண்டும் என்ற நினைப்பு வந்தது. பெண்ணாக இருப்பத மிகவும் சிறந்தது என்று நினைத்தேன். தனியாக இருக்கும் போது இடுப்பை வளைத்து வளைத்து நடந்து பார்பேன். ஆனால், பெண்ணாக மாறுவதற்கு பல நடைமுறைகள் சிக்கலாக இருந்தன. கடந்த 2009ம் ஆண்டு எழுத்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தைரியமாக போஷன் கலாசார மையம், ரேடியோ, டிவி உள்பட எல்லா மீடியாக்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினேன்.

இப்போது என் பெயர் குயான் ஜின்பேன் இல்லை. என் பெயர் யிலிங். என் பெற்றோர், மனைவி, மகன், என்னுடன் பணிபுரிந்த ஒருவருக்கும், நான் பெண்ணாக இருப்பவன் என்று தெரியாது. இத்தனைக்கும் பெண்களை போலவே நான் நீண்ட தலைமுடி, பேன்ட், இறுக்கமான ஆடைகளை அணிந்துதான் எல்லா இடத்துக்கும் செல்வேன். ஆனால், யாரும் என்னை சந்தேகப்படவில்லை. இவ்வாறு யிலிங் கூறினார்.

இப்போது பெண்களை போலவே நடை, உடை, பாவனைகளை மாற்றிவிட்டார். வெளியில் சென்றால் பெண்கள் கழிவறையைதான் பயன்படுத்துகிறார். பெண் உடை அணிந்து வரும் தன் கணவனுடன் தைரியமாக வெளியில் செல்லவும் இவரது மனைவி விரும்புகிறார். இவர்களை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™