மக்களின் குரல் |
- திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்
- மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் உள்வீதி வேலைகள் ஆரம்பம்.
- சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய சடங்கு உற்சபம்
- வில்லுத்தோட்ட கிராம வீதி வேலைப் பணிகள் ஆரம்பம்
- வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் பொருட்கள் வழங்கி வைப்பு
- களுவன்கேணியில் இரு வீதிகளுக்கான வேலைகளை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
- துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி
- இரத்த தானம் செய்தவர்கள் கௌரவிப்பு
- சேவா அமைப்பின் தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் பார்வையிட்டார்.
- கிராம மக்களின் குறைகளை கேட்டறியும் முதலமைச்சர்
- குறிப்பிட்ட காலத்திற்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகாது!
- மட்/பட்டிருப்பு துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய அடிக்கல் நாட்டு விழா
- கஞ்சா வைத்திருந்த காத்தான்குடியைச் சேர்ந்தவருக்கு விளக்கமறியல்
- க.பொ.சா.தரப் பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு
| திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் Posted: 15 Jun 2012 01:11 PM PDT மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணானது. இது நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான குடியேற்றங்களினாலேயே தமிழ் முஸ்லிம் இனங்களிடையே இனமுறுகலலும், கலவரங்களும் ஏற்பட்டது. இது போன்று மீண்டும் இவ்வாறான நிலையில் திட்டமிட்ட சில முஸ்லிம் குழுக்களால் தாழங்குடா, வேடர் குடியிருப்பு, ஆரையம்பதி கிழக்கு பகுதிகளில் வேலி இடப்பட்டு அரச காணிகளும் தனியார் தமிழருக்குரிய காணிகளும் சுவீகரிப்புச் செய்யப்படுவதும், பின்பு அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு வேறு பிரதேசங்களில் இருந்து மக்களைக் குடியமர்த்துவதற்கும்,br /> முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பலமுறை பிரதேச செயலாளர் பொலிசாருக்கு அறிவித்துள்ளதுடன், நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் இவை குறைந்தபாடாக இல்லை. இதனைத் தடுப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வெளிப் பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு குடியேறுவது சட்டத்திற்கு முரணானது. இது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை பிரதேச செயலாளர்களுக்கு உள்ளது என சுட்டிக்காட்டியதனை அடுத்து, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களுடாக இனங்களைக் குழப்ப நினைக்கும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு ஆணை வழங்க வேண்டும் எனவும் விஷேட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். |
| மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் உள்வீதி வேலைகள் ஆரம்பம். Posted: 15 Jun 2012 01:07 PM PDT ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலாநந்தபுரம் உள்வீதிக்;கான வேலைகள் இன்று(15.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராமிய வீதிகளை செப்பனிடுதல் எனும் விசேட திட்டத்தின் கீழ் குறித்த வீதிக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக வேலைகள் ஆரம்பித்து வைக்கபட்டன.தவிசாளர் எஸ். விசோத்தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. |
| சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய சடங்கு உற்சபம் Posted: 15 Jun 2012 01:03 PM PDT அருள்மிகு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் 49ஆவது வருடார்ந்த சடங்கு உற்சபம் கடந்த 13.06.2012 அன்று ஆரம்பமாகியது. 7நாட்கள் சடங்க உற்சபம் இடம்பெறும் இறுதிநாளான 19.06.2012 அன்று தீமிதித்தலுடன் இனிதே நிறைவு பெறும். இன்று(15.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். |
| வில்லுத்தோட்ட கிராம வீதி வேலைப் பணிகள் ஆரம்பம் Posted: 15 Jun 2012 12:58 PM PDT கிராமிய வீதி அபிவிருத்தி எனும் விசேட திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண மதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் சித்தாண்டி விநாயகர் கிராமத்திலுள்ள வில்லுத் தொட்ட கிராம வீதிக்கான Nவைலைகள் இன்று முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கபட்டது.சுமார் 23 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வேலைத்திட்டமானது வீதி மற்றும் மதகு அமைத்தலுக்காக பணன்படுத்தப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வானது ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ். வினோத் தலைமையில் இடம்பெற்றது.பிரதி தவிசாளர் தம்பிராஜா அவர்களும் கலந்து கொண்டார்கள். |
| வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் பொருட்கள் வழங்கி வைப்பு Posted: 15 Jun 2012 12:50 PM PDT போரினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வவுணதீவுப் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. நியூஸிலாந்து சிறுவர் நிதியத்தினூடாக, இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிமனையினால் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக நீர்சுத்தகிரப்பு கொள்கலன்; உள்ளிட்ட பொருட்களும் வறிய மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்ததுடன் சிறுவர் நிதியத்தின் பிராந்திய முகாமையாளர் வேர்னாட் பிரகாஸ், வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். |
| களுவன்கேணியில் இரு வீதிகளுக்கான வேலைகளை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். Posted: 15 Jun 2012 12:44 PM PDT ஏறாவூர்பற்று பிரசே செயலாளர் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்திலுள்ள களுவன்கேணி கிராமத்திலுள்ள இரு வீதிகளுக்கான வேலைகளை இன்று(15.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார். பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.வினோத் தலைமையில் இடம்பெற்ற .இந் நிகழ்வில் கிராம மக்களும் இணைந்து கொண்டார்கள். கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் விசேடதிட்டத்தின் கீழ் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடடில் களுவன்கேணி சிங்காரத் தோப்பு வித்தியாலய வீதியும் இவ் வீதியானது தளவாயுடன் இணைக்கப்படுகிறது. களுவன்கேணி நெடியமடு வித்தியால உள்வீதிகளுக்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கபட்டன. |
| துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி Posted: 15 Jun 2012 12:37 PM PDT புட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று(13.06.2012) வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ,வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் துறைநீலாவணை பிரதேச இணைப்பாளர் உட்பட பலர் கலந்த கொண்டார்கள். |
| இரத்த தானம் செய்தவர்கள் கௌரவிப்பு Posted: 15 Jun 2012 12:33 PM PDT உலக இரத்த நன்கொடையாளர் தினத்தையொட்டி இரத்த தானம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நாவற்குடா சின்ன லூர்த்து ஆலயம், நாவற்குடா புனித மரியால் ஆலயம், சிவானந்த விளையாட்டுக்கழகம், சிவானந்தா இளைஞர் கழகம், சுகாதார நல கல்வி நிலையம் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. புனித லூர்துமாதா ஆலய பங்குத்தை அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்லடி, கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேகுமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகளான டாக்டர் திருமதி யாழினி, திருமதி தேவராஜா உட்பட ஆலயங்களின் பங்குத்தந்தைகள், முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கல்லடி தொடக்கம் ஆரையம்பதி வரையிலான பகுதிகளில் உள்ள இரத்த நன்கொடையாளர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். எதிர்வரும் காலங்களில் இரத்த நன்கொடையாளர்களின் சேவைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளுமுகமாகவே இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதாக அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் தெரிவித்தார். |
| சேவா அமைப்பின் தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் பார்வையிட்டார். Posted: 15 Jun 2012 12:23 PM PDT கிழக்கு மாகாணத்திலே கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தொழில் முயற்சிக்கான பயிற்சிகளை இந்திய நாட்டின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து இந்திய சேவா அமைப்பானது மேற்கொண்டு வருகின்றது. அதாவது கிழக்கு மாகாணத்திலே யுத்தம் மற்றும் வன்செயல் காரணமாக கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான விசேட திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்த்திலே இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனொரு பயிற்கூடம் வாரழைச்சேனை பல்நேக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இங்கே ஆடைகள் தைத்தல் மற்றும் அலங்காரமிடுதல், உணவுபதனிடுதல் மற்றும் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்தல் எனப் பல்வேறு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப் பயிற்சி நிலையத்தினை (13.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனும் கலந்து கொண்டார்.குறிதத் திட்டமானது முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையிலே கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். |
| கிராம மக்களின் குறைகளை கேட்டறியும் முதலமைச்சர் Posted: 15 Jun 2012 12:18 PM PDT (12.06.2012) கோரகல்லிமடு கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளையும் தெரிந்து கொண்டார்.முதலமைச்சருடன் கலந்துரையாடும் மக்கள் அவரிடம் தங்களது மனுக்களை கையளிப்பதனை படத்தில் காணலாம். மக்களது வேண்டுகோளுக்கமைய குறித்த கிராமத்தில் சில வீதிகள் மணல் வீதிகளாக காணப்படுகின்றது. அதனை செயப்பனிடுவதற்காக முதலமைச்சர் குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிடுகின்றார்.இவருடன் பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ் உட்பட உறுப்பினர்களும் இணைந்து கொண்டார்கள். ![]() |
| குறிப்பிட்ட காலத்திற்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகாது! Posted: 15 Jun 2012 12:12 PM PDT இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார். இலங்கை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட சற்று தாமதமாகும் என்கிறார் மீள்குடியேற்ற துணை அமைச்சர் முரளிதரன். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்ற போதிலும் அவற்றை பூர்த்தி செய்ய மேலும் சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாத காரணத்தினாலும், இராணுவ முகாம்களுக்காக இடங்கள் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்குப் பதிலாக வேறு இடங்களை அடையாளம் கண்டு மக்களை அங்கு குடியேற்ற வேண்டியுள்ளதாலும் இந்த சிறிய தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் கூறினார். இருந்தபோதிலும், அதற்கு பல மாதகாலம் பிடிக்கும் என்று கூறப்படுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் அதிக அளவிலான கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாகக் கூறிய அமைச்சர் முரளிதரன், அங்கு விரைவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். |
| மட்/பட்டிருப்பு துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய அடிக்கல் நாட்டு விழா Posted: 15 Jun 2012 12:08 PM PDT மட்/பட்டிருப்பு துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய அடிக்கல் நாட்டு விழா 13.06.2012 ஆலயத்தில் பூசைகள் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரசாந்தன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி பிள்ளைநாயகம், முதலமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி செல்வேந்திரன், வலயக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள், புத்திஜீவிகள், மதகுருமார்கள் உட்பட பலர் இவ் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர். |
| கஞ்சா வைத்திருந்த காத்தான்குடியைச் சேர்ந்தவருக்கு விளக்கமறியல் Posted: 15 Jun 2012 12:05 PM PDT காத்தான்குடி பிரதேசத்தில் 2 கிலோகிரம் 425 கிராம் கஞ்சா வைத்திருந்த காத்தான் குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கைது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
| க.பொ.சா.தரப் பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு Posted: 15 Jun 2012 12:03 PM PDT கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஸி வித்தியாலயத்தில் இருந்து கல்வி 2011 ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையிலே முதற்தடவையாக சித்தியடைந்த மாணவ்களுக்கான பாராட்டு விழா (12.06.2012) கோரகல்லி மடு கணேஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வவழங்கி வைத்தார். மேலும் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தா.உதயஜீவதாஸ்,பிரதேசசபைஉறுப்பினர்ஞானமுத்து,வித்தியாலயத்தின் அதிபர் சண்முகதாஸ்,கோரகல்லிமடு பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ விஜயகுமார் குருக்கள் மற்றும் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். |
| Posted: 15 Jun 2012 12:01 PM PDT மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலுக்குனாமடு பகுதியில் சட்டவிரோதமாக முறையில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவடிவேம்பு இராணுவ முகாம் அதிகாரிகளினால் இந்நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















