Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ நிகழ்வுகளின்போது (படங்கள்)

Posted: 23 Jun 2012 08:22 AM PDT








பெரிய புல்லுமலையில் தற்காலிக சந்தை அமைப்பதற்கு ஏற்பாடு

Posted: 22 Jun 2012 01:29 PM PDT

மட்டக்களப்பு, பதுளை வீதியிலுள்ள மிள்குடியேற்றக் கிராமமான பெரிய புல்லமலையில் 'சோவா' நிறுவனத்தினால் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள சந்தைக்கான காணியை வழங்குவதற்கு ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வினோத் உறுதி வழங்கியுள்ளார்.
சோவா நிறுவன பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெரிய புல்லுமலை மக்கள் இணைந்து நேற்று வியாழக்கிழமை பிரதேச சபைத் தவிசாளருடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவினை தவிசாளர் தெரிவித்தார்.

பெரிய புல்லுமலை பிரதேசத்தில் குடியேறிவரும் மக்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சோவா நிறுவன பிரதிநிதிகள் அப்பிரதேசத்தில் தங்கியிருந்து அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் மீள்க் குடியேறியுள்ள மக்களின் சந்தை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சோவா நிறுவனம் இந்தத் தற்காலிக சந்தையை அமைக்கவுள்ளது.

இதுவரை 95 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். காடுகள் வளர்ந்து மிக மோசமாக உள்ளதனால் இன்னமும் 500இற்;கும் அதிகமான குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மீளகுடியேற முடியாத நிலை காணப்படுகிறது.
அத்துடன் இருப்பிட வசதிகள் இன்மையாலும் மக்கள் குடியேறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் வினோத், அரசியலுக்கப்பால் தன்னாலான அனைத்து உதவிகளையும் மீளக்குடியேறும் பெரிய புல்லுமலை மக்களுக்காக செய்து தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

பெரியகல்லாறு சூரியா விளையாட்டுக்கழகத்தின் 'கற்பனைக்கும் அப்பால்' கண்காட்சி

Posted: 22 Jun 2012 01:24 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட பெரியகல்லாறு சூரியா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் 'கற்பனைக்கும் அப்பால்' எனும் தொனிப்பொருளிலான தொழில்நுட்ப, விஞ்ஞான, கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மாணவர்களின் கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கியதான மாபெரும் கண்காட்சியாக இது நடைபெற்று வருகின்றது.

பெரியகல்லாறு, உதயபுரம் தமிழ் வித்தியாயத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை பிரதம அதிதியாக கலந்துகொண்ட பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் என்.புள்ளநாயகம் திறந்துவைத்தார். 

சிறப்பு அதிதிகளாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி.பாலச்சந்திரன், பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் பேரின்பராசா, உதயபுரம் தமிழ் வித்தியாலய அதிபர் சி.பேரின்பராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் பொறியியல், நில அளவைகள் திணைக்களம், பனைபொருள் திணைக்களம் என்பன தமது காட்சிக்கூடங்களை அமைத்திருந்தன.

இன்று தொடக்கம் ஆரம்பமாகும் இந்த கண்காட்சி 24ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளதாகவும் மாணவர்களின் எதிர்கால கல்விச்செயற்பாட்டுக்கு மிகவும் உந்துசக்தியாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக சூரியா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கமல்ராஜ் தெரிவித்தார்.

இக்கண்காட்சியை காண்பதற்காக இன்று காலை முதல் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருகைதந்தவண்ணமுள்ளனர்






வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு சந்நிதானத்தின் வருடாந்த உற்சவம்

Posted: 22 Jun 2012 01:18 PM PDT

மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ உற்சவம் நேற்று வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இவ், உற்சவம் ஜுலை மாதம் 3ஆம் திகதி களுவன்கேணி கடற்கரையில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளதுஃ
இரண்டாம் நாள்முதல் சுவாமி உள்வீதி வலம் வருதல், வெளிவீதி வலம் வரதலுடன் நடைபெறும் உற்சவ நாள் விழாக்களில் பத்தாம் நாள் திருவேட்டை, கருட வாகன திருவிழா நடைபெறும்.

எதிர்வரும் 29ஆம் திகதி சயன திருவிழாவும், 2ஆம் திகதி இரவு, பகல் சங்காபிசேகமும், உறியடி உற்சவமும், தீமிதிப்பும் நடைபெறவுள்ளது.

வாழைச்சேனையில் பஸ் விபத்து! ஐவர் படுகாயம்

Posted: 23 Jun 2012 12:47 AM PDT

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில், கிண்ணையடிச் சந்தியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து வந்து பேரூந்தும் வீதி வேலையில் ஈடுபடுவதற்காக வேலையாட்களை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோதியதில் ஐந்து பேர் காயப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும், மற்றைய இருவரையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை விரைவில்! பரீட்சார்த்தம் பார்க்க மட்டு வாவியில் இறங்கிய சீபிளேன் (பட இணைப்பு)

Posted: 22 Jun 2012 12:58 PM PDT

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்தப் பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு இன்று மட்டக்களப்பு வாவியில் வந்து தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார். 

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.




"கருணா அம்மானின் கபடநாடகம்" கிழக்குப் பல்கலை. பேரவைக்கு உறுப்பினர் டாக்டர் எம். எஸ். ஜாபீர் பெயரை கருணா அம்மான் சிபாரிசு செய்தார் - ஹிஸ்புல்லா பேரவைக்குஅருட்தந்தை ஒருவரை நியமிக்க உயர்கல்வி அமைச்சு உறுதி- கருணா அம்மான்

Posted: 22 Jun 2012 12:09 PM PDT

கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் அருட்தந்தை கலாநிதி சில்வெஸ்ரர் சிறிதரனின் இறப்பால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய பாதிரியார் ஒருவரை நிமிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதாக உயர்கல்வி அமைச்சர் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
பேரவை நியமனப் பிரச்சினை தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவுடன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் நேற்று வியாழக்கிழமை மாலை நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைவாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன கருணா அம்மானின் கபடநாடகம் ஒன்றை நடத்தியது தெரிய வருகின்றது .

மாணவர்களின் தொடர் போராட்டம் நடைபெறும் நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் டாக்டர் எம். எஸ். ஜாபீர் பெயரை பேரவை ஆரம்பிக்கும் போதே பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்திருந்ததாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார் அவர் மேலும் தெரிவித்த அறிக்கையின் படி கிழக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூடுதலான அக்கறை எடுத்து செயற்பட்டு வருகின்றார்.

அவரே கிழக்கு பலக்லைக்கழக விவகாரங்களில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். பின்னர் அதில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டாக்டர் ஜாபீர் கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இவரது பெயர் அண்மையில் ஏற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் வெற்றிடத்தின் போது சிபாரிசு செய்யப்படவில்லை. இவரின் பெயர் ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. எனக்கு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட விடயம் தெரியாது. அதில் மரணித்த கௌரவ சிறிதரன் சில்வஸ்டர் உறுப்பினராக இருந்த விடயம் என்பது தொடர்பாகவும் எனக்கு தெரியாது.
ஆனால்இ நானும் டாக்டர் ஜாபீரின் பெயரை பின்னர் சிபரிரிசு செய்திருந்தேன். இவரின் நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் உயர் கல்வியமைச்சரை சந்தித்து வினவினேன். எந்தவொரு பல்கலைக்கழகமும் இன ரிதியான பல்கலைக்கழகமல்ல. அவ்வாறு இன ரீதியாக இயங்கவும் முடியாது.
புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஜாபீரின் பெயரை நீக்க முடியாது. எனவும் இன ரீதியாக இதை யாரும் பார்க்கத்தேவையில்லை என உயர் கல்வியமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன ரீதியான கருத்தக்களை விதைத்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயலுகின்றனர். இவற்றுக்கு அரசாங்கம் ஒரு போதும் ஆதரவளிக்காது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார். இந்த நிலையில் அதை மறுக்காமல் சிபாரிசு செய்து விட்டு எந்தவித மறுப்பறிக்கையும் தெரிவிக்காமல் இன்று ஊடகங்களுக்கு வேடிக்கையான அறிக்கையை அனுப்பிவைத்துள்ளார் 

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தனது அறிக்கையில் இப்பிரச்சினை தொடர்பிலான விளக்கங்களை கேட்டறிந்து கொண்ட உயர்கல்வி அமைச்சர் உடனடியாக பேரவையில் ஏற்பட்ட பாதிரியார் ஒருவரின் இடத்திற்கு எங்களால் முன்மொழியப்பட்டுள்ள அருட்தந்தை கிறைஸ்டன் அவுட்ஸ்கோனை நியமிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார் எனத் தெரிவிப்பது யாரை எமாற்றும் செயல் 

பேரவையில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிரியார் ஒருவரை மீண்டும் பேரவையில் நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி வந்தறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம் மற்றும் மட்டக்களப்பு நகரிலுள்ள சௌக்கிய பராமரிப்பு பீடம் என்பவற்றின் மாணவர்கள் விரிவுரைப்பகிஸ்கரிப்பில் கடந்து 3 வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே பேரவையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அதே நேரம் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கத்தில் ஒரெயொரு தமிழரே உள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமரர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அமைச்சராக இருந்த வேளை 94 - 95 காலப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தினை ஒலுவிலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மாணர்கள் பல்கலைக்கழக மாவணர்கள் என அனைவரும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருந்தனர்.
அதையடுத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவிலில் உருவாக்கப்பட்டது. அங்கு தற்போது ஒரு தமிழரே பேரவையில் உள்ளார். இவ்வாறான நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஏற்படுத்திவிட்டு அதை முடித்து விட்டேன் என கபட நாடகம் நடத்துவது நியாயமா இதனால் வங்குரோத்து அரசியலால் பாதிக்கப் படுபவர்கள் மாணவர்களே என்பது மட்டும் உண்மை
 
 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™