Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


பெண்ணை நிற்கவைத்து ஆடைகளை கிழிக்கும் மனிதன்! (வீடியோ)

Posted: 06 Jun 2012 07:48 AM PDT

நாகரீக வளர்ச்சியில் நாம் காணும் காட்சிகள் எம்மை வியக்க வைப்பது மட்டுமல்ல சலிக்கவும் வைக்கிறது. ஆனால் இங்கே நீங்கள் காணப்போகும் காட்சி சலிக்க வைக்கிறதா இல்லை வியக்க வைக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஆடம்பர ஆடைகள் அணியும் பெண்கள் தமது ஆடைகளின் அளவை வர வர குறைத்து கொண்ட உள்ளாடைகளுடன் அலைவது மட்டுமின்றி நிர்வாணமாகவும் நடமாடுவதை நாம் செய்திகளுடாக பார்க்க முடிகிறது.

காலம் இந்தளவுக்கு கெட்டுப்போய்கிடக்கிறது. சரி இங்கே ஒரு பெண்ணை நிற்கவைத்து அவள் அணிந்திருக்கு அழகிய ரீ-சேட்டை அங்கும் இங்கும் கீறி- கிழித்து - கட்டி கடைசியில் அங்கங்கள் தெரிய ஒரு ஆடையை உருவாக்குகிறார் இந்த வடிமைப்பாளர். கேட்டால் இதுவும் புது டிசைனாம்.. ம்ம்...

உலகிலயே ஒல்லி குச்சி இடுப்புக்காரி இவள்தான்! (வீடியோ, படங்கள்)

Posted: 06 Jun 2012 07:34 AM PDT

இங்கு நீங்கள் பார்க்கப்போகும் இந்த வீடியோவில் உள்ள பெண்தான் (பெயர் – CATHIE JUNG ) உலகிலேயே மிகச்சிறிய இடைகொண்ட பெண்ணாக கருதப்படுகிறார். வெறும் 15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இவரின் இடையின் சுற்றளவாக உள்ளது.



இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம், தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 23 அரை மணித்தியாலப்படி கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார். இவரின் உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


கண்ணில் தென்படும் அனைத்தையும் உண்ணும் அதிசய சிறுவன் ( Photo In)

Posted: 06 Jun 2012 06:17 AM PDT

எல்லாப் பொருட்களையும் உணவாகக் கொள்ளும் விசித்திரமான ஓர் நோயினால் பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான். ஐந்து வயதான Zach Tahir என்ற சிறுவனே இந்த விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். இவனால் பேச முடியாது.

கட்டில், மேசை, சுவரின் வர்ணப்பூச்சு, பிளாஸ்டர் என கண்ணில் தென்படும் அனைத்து பொருட்களையும் கடித்து சாப்பிடும் விபரீதமான நோயினால் இந்தச் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான் இந்த விசித்திரமான நோய்க்கு Pica என மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். மிகவூம் அரிதாகவே இந்த வகை நோய் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பண்டங்களையும், ஏனைய பொருட்களையும் பிரித்து அறியக் கூடிய திறன் இந்தக் சிறுவனுக்குக் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் கண்ணுக்கு தென்படும் வகையில் எந்தவொரு பொருளையும் வைக்கப் போவதில்லை என்றும், விசேட அறை ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். மண், நூல், கற்கள், கார்பட், பேப்பர், முடி என எல்லாப் பொருட்களையும் தனது மகன் உட்கொண்டு விடுவதாக சிறுவனின் தயார் குறிப்பிட்டார்.


வினோதங்கள் தொடரும்

காவல்துறையினரின் கட்டுபாடுகள் உடைத்து வீதியில் இறங்கிய புலம்பெயர் தமிழர்

Posted: 06 Jun 2012 06:01 AM PDT

பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினை நோக்கி நடைபெற்றுவரும் பேரணி நடைபாதை வழியாக நகர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது லண்டன் மாநகரக் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வீதிகளில் இறங்கி பேரணியைத் தொடர்ந்து வருவதாக அங்கிருந்து உற்சாகமான செய்திகள் கிடைத்துள்ளது.

எட்டுத் திசைகள் அதிர புலத்துப் புலிப்படைகளின் படையெடுப்பால் நடைபாதை கொள்ளதாக மக்கள் வெள்ளம் திரண்டுள்ளதால் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து பிரதான வீதிகளில் இறங்கி பேரணியை தொடரந்து வருகின்றனர்.

பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவந்த லண்டன் காவல்துறையினர் கூட திரண்டு வந்துகொண்டிருக்கும் புலத்துப் புலிப்படையினை கண்டு செய்வது அறியாது திகைத்து நிற்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர்கள் அங்கிருந்து தற்போது தெரிவித்துள்ளார்கள்.

வெள்ளையினத்தவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்றதால் ஏனைய வெள்ளையினத்தவர்கள் ஆர்வமுடன் அந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கிப் படிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு துண்டுப்பிரசுரங்களை வாங்கிய வெள்ளையினத்தவர்கள் சிலர் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இந்த அதிர்ச்சிகரமான எழுச்சி ஒருபக்கம் என்றால் லண்டன் மாநகர காவல்துறையினரின் முன்னேற்பாடுகளை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான விடையமாக உள்ளது. கடந்த காலங்களில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பல்வேறு போராட்டங்களை பார்த்து அனுபவப்பட்ட லண்டன் மாநகரக் காவல்துறையினர் இன்று பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து பல்வேறு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்துள்ளார்கள.

லண்டன் மாநகர காவல்துறையினர் நிகழ்விடத்து பிரதான வீதிகளுடனான போக்குவரத்தை நிறுத்தி வீதியின் ஒரு பகுதியை போராட்டத்திற்கு ஒதுக்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பினை செய்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்தி புலத்துப் புலிகளின் வீராவேசப் போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கு முன்முயற்சிகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது. லண்டன் காவல்துறையினர் பல்லாயிரம் தமிழர்களை எதிர்பார்திருக்கையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்..?

கடந்த சில நாட்களாக பிரித்தானிய வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அரங்கக் கூட்டம் முற்று முழுதாக நிறுத்தப்பட்டுவிட்டது. மகிந்த உரையாற்றுவது நிறுத்தப்பட்டுவிட்டது இனி போய் என்ன என்று ஓய்ந்துவிடாதீர்கள்.

இன்று மதியம் பொதுநலவாய நாடுகளின் செயலகத்திற்கு அருகாமையில் வந்துள்ள நாடுகளின் அதிபர்களிற்கான விருந்துபசார நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளது. அதனையும் தடுத்து புலத்துப் புலிகளின் எழுச்சியும் புரட்சியுமான போராட்டத்தின் காரணமாக பொதுநலவாய நாடுகளின் நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது என்ற புதிய வரலாற்றை படைக்க திசைகள் அதிர புறப்பட்டு வாருங்கள் .

77 வருடங்களாக கவனிப்பாரற்று ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்கு

Posted: 06 Jun 2012 05:58 AM PDT

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பிரபல உணவகம் ஒன்றைப் புதுப்பிக்கும் நடவடிக்கையின் போது, அதனுள் 77 வருட காலமாக நியோன் மின்விளக்கொன்று அணைக்கப்படாது எரிந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிலிப்டன்ஸ் கபே ரெறியா என்ற இந்த உணவகத்தில் பெண்களுக்கான ஓய்வறையிலுள்ள தூசு படிந்த களஞ்சியசாலைச் சுவரின் பின் பகுதியில் மேற்படி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்துள்ளது.

இந்த ஹோட்டலில் 1935ஆம் ஆண்டில் இந்த நியோன் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி மின் விளக்கானது கடந்த 77 ஆண்டு காலப் பகுதியில் மேற்படி உணவகத்தின் மின் கட்டணம் 17,000 அமெரிக்க டொலரால் மேலதிகமாக அதிகரிப்பதற்கு வழி செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


வினோதங்கள் தொடரும் 

ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted: 06 Jun 2012 05:55 AM PDT

'ஆதி மனிதன் ஆசியாவில்தான் தோன்றினான். ஆப்பிரிக்காவில் இல்லை' என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. லிபியாவின் சகாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் உடல் அமைப்பை போன்ற எலும்பு கூட்டை புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்தனர்.

அது சுமார் 3 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என கணித்த அவர்கள் ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றியதாக அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது மியான்மரில் புதிதாக 4 மனித பற்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அது ஆதிகால மனிதனின் பல் என உறுதி செய்யப்பட்டது. இது குறித்து 6 வருடங்கள் நடத்திய ஆய்வுக்கு பிறகு மனிதன் ஆசியா கண்டத்தில் தான் முதன்முதலில் தோன்றினான் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

'அப்ராசியா டிஜிடே' என பெயரிடப்பட்ட புதைபடிவம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தின் மனித உடல் உறுப்புகளுடன் தொடர் புடையதாக உள்ளது. எனவே, ஆசியாவில் தோன்றிய மனிதன் இடம் பெயர்ந்து ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த தகவல் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™