மக்களின் குரல் |
| ஆரையம்பதி கல்வீட்டுத் திண்ணையடி ஸ்ரீ பரமநயினார் ஆலய உற்சவம்-2012 Posted: 22 Jun 2012 05:07 AM PDT I.Suken ஸ்ரீ பரமநயினார் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா ஆனித்திங்கள் 06 ம் நாள் (20.06.2012) புதன்கிழமை பிரதமைத் திதியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய சுபவேளையான இரவு 07.00 மணிக்குத் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, ஆனித்திங்கள் 09 ம் நாள் (23.06.2012) சனிக்கிழமை அதிகாலைச் சடங்கு இடம்பெற்று நோர்ப்பு எறிதலுடன் இனிதே நிறைவுபெறும். ஆனித்திங்கள் 08 ம் நாள் 22.06.2012 வெள்ளிக்கிழமை : அதிகாலை நோற்பு கட்டுதல் இடம்பெற்று அதிகாலைச் சடங்கு இடம்பெறும். உபயம் : ஸ்ரீ கந்தசுவாமி, ஸ்ரீ கண்ணகை அம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலய பரிபாலன சபை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் வைபவம் இடம்பெறும். உபயம் : பொதுமக்கள் பிற்பகல் 5.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து மடப்பெட்டி எடுத்து வரப்பட்டு மாலைச் சடங்கு இடம்பெறும். உற்சவ காலத்தில் சகல அடியார்களும் ஆலயம் நாடி ஸ்ரீ பரமநயினாரின் பேரருளை பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம். |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
