Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


கிழக்கு மாகாண சபை அ.இ.மு.கா. உறுப்பினர் ஜவாஹிர் சாலி முஸ்லிம் காங்கிரஸில் இணைவு!

Posted: 17 Jun 2012 04:49 AM PDT


கிழக்கு மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஜவாஹிர் சாலி நேற்று சனிக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார். 

கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக நேற்று இரண்டாவது நாளாக பொத்துவிலில் இடம்பெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் சகிதம் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜவாஹிர் சாலி, கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சுப் பதவியை 2010 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்தததை அடுத்து ஏற்பட்ட அமைச்சுப் பதவி வெற்றிடத்திற்கு கூடிய விருப்பு வாக்கு பெற்ற தன்னை நியமிக்காமல் சுபைரை நியமித்தமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் அமீர் அலி ஆகியோருடன் முரண்பட்டு அக்கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்து வந்தார். 

இந்நிலையில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கான உத்தரவாதத்தை அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பெற்றுக் கொண்டு ஜவாஹிர் சாலி அக்கட்சியில் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்களான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.ஹக்கீம் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொத்துவிலில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

6 வயது சிறுவன் மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!

Posted: 17 Jun 2012 04:32 AM PDT


கலவான - வத்துராவ பகுதியில் 6 வயது சிறுவன் 13 வயது சிறுவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சமூக சீர்கேட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் குறித்த 6 வயது சிறுவன் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய 13 வயது சிறுவன் நேற்று சனிக்கிழமை கலவான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று கலவான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

Posted: 17 Jun 2012 02:35 AM PDT


கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17.06.2012 ஆரம்பமாகி 26.06.2012 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது. 



பத்து நாட்களும் ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் இணையத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

pillayar on livestream.com. Broadcast Live Free

திண்மக்கழிவகற்றும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு

Posted: 16 Jun 2012 12:48 PM PDT


கிழக்க மாகாணத்தில் திண்மக்கழிவகற்றும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சரித்த ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அராசங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அதன் செயலாளர்கள், சுற்றாடல் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திண்மக்கழிவுகளை செயற்பாட்டுக்குட்படுத்தி மண்வளத்தினை அதிகரிப்பதுடன்,  மரம் செடி கொடிகளின் வளர்சிச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவுகளை அகற்றி அவற்றினை மீள் சுழற்சி செற்வதற்கான இடங்களினைக் கண்டுபிடித்தல், உள்ளூராட்சி நிறுவனங்கள் கழிவுகளை வெறியேற்றுதல் தொட்ர்பான தகவல்களை திரட்டுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல் தொடர்பானதும் ஒன்றுசேர்த்தல் தொடர்பானதுக்குமான மத்திய நிலையத்தினை உருவாக்குதல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

இச் செயற்திட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகள் வழங்கி நிறுவன ரீதியான பலத்தனை ஏற்படுத்தும் வகையில் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலில், நகர சபை, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயற்திட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 164 தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்படுகின்ற நிலையில் அவற்றினை மீள் சுழற்சி அடிப்படையில் பசளையாக்கி குப்பைகளற்ற சூழலை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தினை  நடைமுறப்படுத்துவதற்கான முதல்கட்ட கொடுப்பனவும் இதன்போது வழங்கப்பட்டது.

அரசுடன் இணைந்து போட்டியிடுவதாயின் சில நிபந்தனைகளை மு.கா. விதிக்கும்: ஹக்கீம்

Posted: 16 Jun 2012 12:35 PM PDT


எதிர்வரும் தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் தேர்தல்களின் போதும் தமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளே தற்போது காணப்படுகின்றன என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™