புதிய உலகம்.கொம் |
- கண்ணிற்கு புலப்படாத மாயக் கார் (வீடியோ இணைப்பு)
- சுண்டிக்குளத்தில் குண்டு வெடித்ததில் சிறுவன் காயம்!
- கொழும்பில் லெப்.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலர் கொலை
- இதெல்லாம் பரம ரகசியம் உங்களுக்குள்ளே இருக்கட்டும் ஓகேவா?
- ஓவர் செக்ஸ் உடம்புக்கு ஆகாதாம் : ஐயோ வடை போச்சே..!
- கடவுள் ஆசீர்வதித்தால் அடுத்த குழந்தை! : ஐஸ்வர்யா
| கண்ணிற்கு புலப்படாத மாயக் கார் (வீடியோ இணைப்பு) Posted: 03 Jun 2012 11:46 AM PDT தற்காலத்தில் கண்ணிற்கு புலப்படாத கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கார் தனது ஒரு பக்கத்திலுள்ள காட்சியினை மறுபக்கத்தில் படம் பிடித்துக்காட்டுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பமானது டிஜிட்டல் கமராக்களையும் சிறிய பல எல். ஈ . டி மின்குமிழ்களையும் காரின் மீது பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்தொழில்நுட்பம் பென்ஸ் காரிலேயே முதன்முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையான கார்கள் வீதியோரமாக அல்லது ஒதுக்குப்புறமாக தரிக்கப்பட்டிருக்கும் வேளையில் இதனை இனங்காண்பது மிகக் கடினமாகும். |
| சுண்டிக்குளத்தில் குண்டு வெடித்ததில் சிறுவன் காயம்! Posted: 03 Jun 2012 11:36 AM PDT முல்லைத்தீவு பகுதியில் குண்டொன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான். சுண்டிக்குளம் களப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவனின் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, களப்பு பகுதியில் கரையொதுங்கிய குண்டொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கிறார்... 14 வயதுடைய மாணவனொருவன் தனது வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள, சாலை வாவியில் நண்டு பிடித்துக் கொண்டிருந்தபோது மர்மப் பொருளொன்று வெடித்ததால் அவனது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். இதேவேளை, மழை பெய்ததன் காரணமாக புதையுண்டிருந்த வெடிபொருள் வெளியே வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார். |
| கொழும்பில் லெப்.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலர் கொலை Posted: 03 Jun 2012 11:33 AM PDT கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார். மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் கருணா குழுவினரால், வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| இதெல்லாம் பரம ரகசியம் உங்களுக்குள்ளே இருக்கட்டும் ஓகேவா? Posted: 03 Jun 2012 09:37 AM PDT எந்த விசயத்தையும் யாரிடம் எதற்காக சொல்கிறோம் என்பது இருக்கிறது. காதலிப்பவர்களாகட்டும், திருமணமானவர்களாகட்டும் தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இருப்பதால் பல பிரச்சனைகள் வரக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சில ஒளிவு மறைவுகள் இருந்தால்தான் சிக்கல்கள் இன்றி இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் மனைவியானவர் தங்கள் கணவரிடம் சில விசயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். என்னென்ன விசயங்களை மறைக்கவேண்டும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். படியுங்களேன். பேஸ்புக் அக்கவுண்ட் பேஸ்புக் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த பேஸ்புக்கின் மூலம் நிறைய பேர் நண்பர்கள் ஆவார்கள். எந்த ஒரு ஆணும் தன் துணைவிக்கு ஆண் நண்பர் இருப்பதையும், ஒரு பெண்ணும் தன் துணைவனுக்கு பெண் நண்பர் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே தனது கணவருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறைப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள். மெசேஜ் சாட்டிங் நண்பர்களுடன் இணையதளத்திலோ, மொபைலிலோ சாட் பண்ணும் போது, அதைப் பற்றி தங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் இதுவே சில சமயங்களில் கணவரின் மனதில் தவறான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். பின்னர் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும். ஆகவே அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நலம். நண்பர்களின் போன் நம்பர் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ரொம்ப ரிஸ்க். ஏனென்றால் நண்பர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். நாம எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதுல ரொம்பவே கவனமா இருக்கணும். மறைத்த தகவல்கள் தெரிந்தோ, தெரியாமலோ முதலில் நாம் செய்த தவறை பற்றி கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால், இதைப் பற்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். மீறி கூறினால், வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். ஆகவே இவற்றை பற்றி பகிர்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கையானது இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை. ஆகவே, மேலே சொன்ன எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். |
| ஓவர் செக்ஸ் உடம்புக்கு ஆகாதாம் : ஐயோ வடை போச்சே..! Posted: 03 Jun 2012 09:32 AM PDT அளவிற்கு அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும், பெண்மைக்கு ஆதாரமாக விளங்கும் கருப்பையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் உடல் அமைப்பிலும் ஹார்மோன் சுரப்பதிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. கணவரின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அதிக அளவில் தாம்பத்ய உறவு மேற்கொள்ளும் பெண்கள் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனராம். மேலும் இளமை காலத்திலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிக அளவு தாம்பத்திய உறவு மேற்கொள்ளும் பெண்களுக்கு பலவகையான நோய்களும், அமைதியில்லாமையும், அதிருப்தியும், எரிச்சலும், விரக்தியும், சிடுமூஞ்சித்தனமும் அடைகின்றனராம். இதனால் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கூட அவர்களுக்கு அக்கறை குறைகிறது. எனவே எதிலும் கட்டுப்பாடு வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். அதேபோல் ஆடைகள் அணியும் போதும் இறுக்கமாக எதையும் இடுப்பில் கட்டக்கூடாது. கனமான உள் பாவாடைகளை அணியக்கூடாது. குதிகால் உயர செருப்புகளை அணியக்கூடாது என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இடுப்புவலி, முதுகுவலி, ஆகியவை வராமல் தடுக்கலாம். நரம்புக் கோளறுகள், கருப்பைக் கோளாறுகள் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். |
| கடவுள் ஆசீர்வதித்தால் அடுத்த குழந்தை! : ஐஸ்வர்யா Posted: 03 Jun 2012 09:29 AM PDT குண்டாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஏனெனில் இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார் அழகு அம்மா ஐஸ்வர்யா. கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 10 ஆண்டுகளாக பங்கெடுத்து வரும் ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பின்னர் இந்த ஆண்டு பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது குழந்தையுடன் பங்கேற்றார் ஐஸ்வர்யா. தாய்மையின் பூரிப்பு முகத்தில் தெரிய ஃபிப்டி கேஜி தாஜ்மகால் சற்றே எடை கூடி 60 கேஜியாக மாறியிருந்தார். ஐஸ்வர்யா குண்டானதைப் பற்றிதான் மீடியா உலகில் பேச்சாக இருந்தது. ஆனால் ஐஸ்வர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இதுதான் உண்மை. நான் ஒரு குழந்தையின் அம்மாவாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறேன். என் உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக நான் டயட்டில் எல்லாம் இல்லை. எனக்கு பிடித்த உணவை நன்றாக சாப்பிடுகிறேன் அப்பொழுது தானே குழந்தையை நன்றாக கவனிக்க முடியும். என் மீது அக்கறை எடுத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி என்று கூறிய ஐஸ்வர்யா கடவுள் ஆசீர்வதித்தால் அடுத்த குழந்தைக்கு தாயாராவேன் என்று கூறியுள்ளார். இந்தியாவின் நிரந்தர அழகிக்கு அடுத்து பிறக்கப்போவது ஆணா, பெண்ணா இப்பவே ஜோசியம் சொல்ல ஆரம்பிங்கப்பா ! |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










