புதிய உலகம்.கொம் |
- 50 பெண்களிடம் முதலிரவு கொண்டாடிய கில்லாடி மாட்டினார்.! (வீடியோ இணைப்பு)
- தனிமனிதனாக இருந்து காட்டையே உருவாக்கிய சாதனை மனிதர்!
- மனுகொடுக்க "மெகாசைஸ்' விரல்களுடன் வந்த பெண்! (Photo In)
- அரசியல் படத்தில் நடித்தது ஏன்?: நடிகர் கார்த்தி விளக்கம்
- உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெயர் மாற்றம்
- இனி யாரும் குளிக்கவேண்டாம் : வந்தாச்சு பாத் ஜெல்.!
- விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி-கனடாவில் பரபரப்பு!
- QUIZ என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
| 50 பெண்களிடம் முதலிரவு கொண்டாடிய கில்லாடி மாட்டினார்.! (வீடியோ இணைப்பு) Posted: 26 Jun 2012 11:09 AM PDT |
| தனிமனிதனாக இருந்து காட்டையே உருவாக்கிய சாதனை மனிதர்! Posted: 26 Jun 2012 11:03 AM PDT உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!! கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ? அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் . 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...! மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு 200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !! இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. குடும்பம் மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார். டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !! இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள். மரங்கள் மட்டும் அல்ல தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது. மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம். உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!! நன்றி :- surpriseulagam |
| மனுகொடுக்க "மெகாசைஸ்' விரல்களுடன் வந்த பெண்! (Photo In) Posted: 26 Jun 2012 10:33 AM PDT பிறவியில் "மெகா சைஸ்' விரல்களுடன் வலம் வரும் பெண், மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் மனு கொடுத்தார். மதுரை வாடிப்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் சேகர் மகள் லட்சுமி, 24. பத்தாம் வகுப்பு முடித்த இவரது வலது கை, ஆண்களின் கையைப் போல பெரியதாக, பலம்மிக்கதாக உள்ளது. பெருவிரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல்கள் ஆண்களைக் காட்டிலும் அசாதாரணமானதாக, பல மடங்கு பெரியதாக உள்ளது. மற்ற இரு விரல்களும் ஆண்களின் விரல்களைப் போல உள்ளது. அதேசமயம் இடது உள்ளங்கை அகலமாக இருந்தபோதும், விரல்களில் பெரியளவில் மாற்றம் இல்லை. லட்சுமி, ""பிறவியிலிருந்து இப்படி உள்ளது. இதனால் வலி, மடக்கி நீட்டுவதில் பாதிப்பு இல்லை. எழுத இடதுகையை பயன்படுத்துகிறேன். இதுசம்பந்தமாக அரசு மருத்துவமனையில் டாக்டர்களை அணுகினோம். அவர்கள் ஆப்பரேஷன் செய்யலாம் என்றனர். இதனால் ஏதாவது கையில் புதிதாக பிரச்னை வந்துவிடக் கூடாது என்று கருதி, தந்தை மறுத்துவிட்டார். தற்போது அங்கன்வாடி மைய வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். தந்தை கூலி வேலை செய்கிறார். வேலை வாய்ப்புக்கு செலவு செய்ய வழியில்லை,'' என்றார். மனுவை பெற்ற கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, ""தகுதியை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார். |
| அரசியல் படத்தில் நடித்தது ஏன்?: நடிகர் கார்த்தி விளக்கம் Posted: 26 Jun 2012 10:29 AM PDT கார்த்தி நடித்த 'சகுனி' படம் கடந்த 22-ந்தேதி ரிலீசானது. மொத்தம் 1,154 தியேட்டர்களில் 'சகுனி' திரையிடப்பட்டு 'சிறுத்தை' படத்தின் வசூலை 3 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 'சகுனி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் வள்ளியப்பன் பேசும்போது, சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் கார்த்தி அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அதற்கு முன்னோட்டமாக அரசியல் படமான 'சகுனி'யில் நடித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும்போது, கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருகிறார். அதற்காக அவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. கார்த்தி அரசியலுக்கு வரக்கூடாது என்றார். நடிகர் நாசர் பேசும்போது, கார்த்தியை அரசியலுக்கு அழைக்க வேண்டாம் என்றார். பின்னர் கார்த்தி பேசிய தாவது:- 'சகுனி' படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிரித்து ரசித்து பார்க்கிறார்கள். வசூலில் எனது முந்தைய படத்தை விட பெரிய அளவில் சகுனி போய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சகுனி அரசியல் கதையாக இருந்தாலும் வலுவாக அரசியலுக்குள் செல்லாமல் காமெடியாக நகர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த உணர்வில்தான் இந்த படத்தில் நடிக்கவும் செய்தேன். படத்தில் ரஜினி, கமல் என பெயர் சொல்லி அழைப்பது ரசிக்கும்படி இருந்தது. ராதிகா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக அமைந்தன. ஆக்ஷன் இல்லாமல் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டோம். அப்படியே கதை அமைந்தது. வெற்றியும் பெற்றுள்ளது. இவ்வாறு கார்த்தி பேசினார். |
| உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெயர் மாற்றம் Posted: 26 Jun 2012 10:24 AM PDT உலகப் புகழ்பெற்ற லண்டன் பிக் பென் கடிகாரத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் மகுடம் சூட்டி இந்த ஆண்டோடு அறுபது ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாகவும், ராணியை சிறப்பிக்கும் விதமாகவும் பிக்பென் கடிகாரம் 'எலிசபெத் டவர் கடிகாரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; 88 வயதாகும் எலிசபெத் ராணி மகுடம் சூட்டி,இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவரை சிறப்பிக்கும் விதமாக ஹவுஸ் ஆப் காமன்ஸ் எனப்படும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிக்பென் கடிகாரத்தின் பெயர் இனி எலிசபெத் டவர் கடிகாரம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை ஏகமனதாக வரவேற்று, ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி விரைவில் இப்பெயர் மாற்றம் குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பிக் பென் டவர் என்பது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூண்டு ஆகும். நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும். இம்மணிக்கூண்டு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனத்தில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு 'பிக் பென்'னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் பிரபல குத்துச் சண்டை வீரரான பென் கான்ட் என்பவரின் புனைப் பெயர் பிக் பென் ஆகும். அவரது நினைவாகவே இம்மணிக்கூண்டிற்கு 'பிக் பென்' என அக்காலத்தில் பெயரிடப்பட்டதாம். |
| இனி யாரும் குளிக்கவேண்டாம் : வந்தாச்சு பாத் ஜெல்.! Posted: 26 Jun 2012 09:26 AM PDT பெரும்பாலும், பொதுவாக, பரவலாக எல்லாரும் குளிப்பது எதற்கு தெரியுமா? அழுக்கு போக்கி சுத்தமாக வேண்டும் என்பதல்ல. அதைவிட முக்கிய காரணம் இருக்கிறது. கப்ஸ் தாங்காமல் 'அய்ய.. இன்னிக்கு குளிக்கலியா' என்று மற்றவர்கள் கேட்டுவிட கூடாதே என்பதுதான். ஆபீஸ் போய்த் தொலைய வேண்டும் என்பதற்காக திங்கள் முதல் வெள்ளி வரை சின்சியராக அதிகாலையில் குளிப்பவர்கள் வீக்எண்டில் மட்டும் சாயந்திரம் வரை குளியலை ஒத்திப்போடுவது கண்ணுக்கு தெரிந்த உதாரணம். குளியல் மீது வெறுப்பு வருவதற்கு இன்னொரு காரணம் தண்ணீர் தட்டுப்பாடு. ஒரு வாளி தண்ணீரில் மொத்த குடும்பமும் காக்கா குளியல் போட வேண்டிய கட்டாயம். இந்த சங்கடங்களுக்கு எல்லாம் விடிவு கிடைக்கும் வகையில் 'பாத் ஜெல்' என்ற புது ஐட்டத்தை கண்டுபிடித்திருக்கிறார் தென்ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் பல்கலைக்கழக மாணவர் லுட்விக் மரிஷேன் (22). ஷாம்பு போல இருக்கிறது. இதை உடல் முழுக்க தடவிக்கொள்ள வேண்டும். அவ்ளோதான்.. குளியல் ஓவர். இதுபற்றி லுட்விக் கூறியதாவது: குளியல்னா என்ன சார்? உடல்ல இருக்கிற கிருமிகள் போகணும். தோலில் எண்ணெய்ப் பசை நீங்கி ஈரப்பதம் கிடைக்கணும். மனதை வருடும் சோப் வாசனை வீசணும். அவ்வளவுதானே.. இத்தனை வேலைகளையும் பாத் ஜெல் செய்துவிடுகிறது. ஆப்ரிக்க நாடுகள் உள்பட பல நாடுகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குளிக்காமல் இருந்து பல்வேறு தோல் நோய்கள், வாந்தி பேதி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை மனதில் கொண்டே பாத்ஜெல் உருவாக்கினேன். பாத் ஜெல் போட்டு குளிப்பதால் பல லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு லுட்விக் கூறினார். கம்ப்யூட்டர் இல்லாததால், தனது ஸ்மார்ட் போன் வழியாகவே இன்டர்நெட்டை 6 மாதமாக அலசி ஆராய்ந்து, பாத் ஜெல்லை அவர் உருவாக்கியுள்ளார். வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு பாட்டில் ரூ.29-க்கும் விமானங்கள், கப்பல் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ரூ.87-க்கும் விற்க இருப்பதாக தெரிவித்தார். 'ஹெட்பாய் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் ஒரு கம்பெனியையும் தொடங்கியுள்ளார். ஏழைகளுக்கு தேவையான பொருட்களை தயாரித்து வழங்குவதே என் நோக்கம் என்கிறார் லுட்விக். மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் லுட்விக்கின் பாத் ஜெல் கண்டுபிடிப்பு முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. |
| விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி-கனடாவில் பரபரப்பு! Posted: 26 Jun 2012 08:58 AM PDT கனடாவின் ஒட்டாவோ மாகாணத்தில் இளம் சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு பெண்ணை அந்த ஊர் போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 16 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமிகளை கடத்தி வந்து ஒரு வீட்டில் அடைத்து வந்து இந்தப் பெண் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு உதவியாக இருந்து வந்த 15 வயது மதிப்புடைய மேலும் இரு பெண்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் சிறுமிகளாக இருப்பதால் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை போலீஸார். பேஸ்புக், டி்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களின் மூலமாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளார் அப்பெண். தனது மகளின் செயல் குறித்து அறிந்த அந்தப் 16 வயது பெண்ணின் தாயார் தனது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். |
| QUIZ என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? Posted: 26 Jun 2012 04:57 AM PDT டப்ளின் நகரில் ஒரு நாடகக் கொட்டகை. அதன் மேனேஜர் டாலி. அவர் தன் நண்பருடன், மொழி தொடர்பாக ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆவேசமாகி, "இன்னும் 24 மணி நேரத்தில் அர்த்தமே இல்லாத ஒரு சொல்லை பிரபலமாக்கிக் காட்டுகிறேன், பார்!" என்று சவால் விட்டார். மறுநாள் காலை, டப்ளின்வாசிகள் கண் விழித்தபோது, டப்ளின் நகரச் சுவர்கள் எல்லாவற்றிலும் QUIZ என்ற வார்த்தை காணப்பட்டு, அப்படியென்றால் என்ன என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டு தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். இந்தச் சொல் அன்று மாலைக்குள் டப்ளின் நகரம் முழுக்கப் பிரபலமான சொல்லாகிவிட்டது. டாலி ஜெயித்துவிட்டார். அன்றிலிருந்து, கேள்வி கேட்டு பதில் வரவழைப்பதற்கு 'க்விஸ்' என்கிற சொல் பயன்பட ஆரம்பித்தது. 1780-ல் உருவான சொல் இது! |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







