Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

Posted: 14 Jun 2012 10:31 PM PDT

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17.06.2012 ஆரம்பமாகி 26.06.2012 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது.


பத்து நாட்களும் ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் இணையத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்


http://www.livestream.com/kaluthavalaipillayar




Watch live streaming video from kaluthavalaipillayar at livestream.com

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தராக கலாநிதி இஸ்மாயில் மீண்டும் நியமனம்

Posted: 14 Jun 2012 02:11 PM PDT


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் இன்று வியாழக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க ஜுன் 13ஆம் திகதி முதல் 2015 ஜுன் 13ஆம் திகதி வரை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கலாநிதி இஸ்மாயில் கடமையாற்றவுள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2009ஆம் ஆண்டு இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சியின் யாப்பு குறித்து சுமந்திரன் வழக்குத் தாக்கல்! இலங்கை

Posted: 14 Jun 2012 02:05 PM PDT


இலங்கை தமிழரசு கட்சியின் யாப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கெதிராக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்.
கட்சியின் யாப்பின் பிரகாரம் தனிநாட்டுக்காக குரல் கொடுக்கப்படும் என ஆங்கில மொழிப்பெயர்ப்பில் உள்ள போதிலும் தமிழில் உள்ள யாப்பின் மூலப்பிரதியில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கையின் அரசியல் சட்டத்தின்படி தனிநாடு கோருவது, அதற்காக குரல் கொடுக்கும் கட்சிகளை தடைசெய்ய முடியும்.
இதனை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், தமிழர், முஸ்லிம்கள் தமக்கான தனிநாட்டுக்காக கோரிக்கை முன்வைப்பதை தமது கட்சி அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டமையானது கட்சியை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் கைக்குண்டுகள் மீட்பு

Posted: 14 Jun 2012 01:55 PM PDT


மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் எனும் கிராமத்தில் 3 கையெறி குண்டுகளை ஆயித்தியமலைப் பொலிஸார் நேற்று புதன் மாலை கைப்பற்றியுள்ளனர்.


மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகளை அந்தப்பகுதித் தோட்டத்திலுள்ள பெண்ணொருவர் கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததின் பேரிலேயே தாங்கள் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று இந்தக் குண்டுகளை மீட்டதாக ஆயித்தியமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.



புலிகள் இந்தப் பகுதிகளை விட்டுப் பின்வாங்கிச் செல்லும்போது கைவிட்டுச் சென்ற குண்டுகளாக இவை இருக்கலாம் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். 

அம்பாறை - பொத்துவில் பகுதியில் 7 இந்தியர்கள் கைது

Posted: 14 Jun 2012 01:32 PM PDT


அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விசாவில் வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட 7 இந்திய பிரஜைகளை நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து பொத்துவில் பிரதேசத்தில் வீடு வீடாக சென்று புடவை வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இந்திய பிரஜைகள் 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் துணிகளும் மீட்கப்பட்டுள்ளன. 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று (14) வியாழக்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் 

மட்டு. பட்டதாரிகள் 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க ஜோன் செனவிரட்ன உறுதி

Posted: 14 Jun 2012 01:23 PM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற பட்டதாரிகளின் நேர்முகப்பரீட்சையின் படி தகுதியானவர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க மீள்குடியேற்ற பிரதியமைச்சரிடம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதியளித்துள்ளார். 


மட்டக்களப்பு மாவட்டத்தில் 950 பேருக்கே நியமனங்களுக்கான தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் மேலதிகமாக உள்ளவர்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. 



இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற அமைச்சர் அங்கு இடம்பெற்ற நேர்முகத்தேர்வு குறித்தும் நியமனங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். 



இதன்போது தொலைபேசியில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை தொடர்புகொண்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கோரினார். 



இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு பட்டதாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 



இந்த நியமனங்கள் யாரும் பணங்களை வழங்கி ஏமாறவேண்டாம் என தெரிவித்த பிரதியமைச்சர், அவ்வாறானவர்கள் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவருமாறும் தெரிவித்தார். 

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17 ஆம் திகதி ஆரம்பம்

Posted: 14 Jun 2012 12:00 PM PDT


கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17.06.2012 ஆரம்பமாகி 26.06.2012 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது. 




Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™