புதிய உலகம்.கொம் |
- முதல் முத்தம் எப்படி இருக்கணும் தெரியுமா?
- கைவிலங்கிட்டு செக்ஸ்...கை மாட்டிக் கொண்டதால் '999' ஐ அழைத்த பெண்!
- அதிவேக பைக்கில் ஊர் சுற்றும் நமீதா
- மாட்டின் முகத்தோற்றத்துடன் அதிசய மீன்.! (படங்கள் இணைப்பு)
- கிளாமர் காட்டாவிட்டால் ஏற்பார்களா? டாப்ஸி கேள்வி
- புறாக்கள் தற்கொலை செய்து கொள்ளும் ரகசியம் தெரியுமா..?
- கோழிகள் சிறு சிறு கற்களை உண்ணுவது ஏன் தெரியுமா.??
| முதல் முத்தம் எப்படி இருக்கணும் தெரியுமா? Posted: 23 Jun 2012 11:41 PM PDT முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முதல் இரவிலோ முத்தம் கொடுத்திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலிக்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். படியுங்களேன். பசுமையான சோலை, அடர்ந்த வனப்பகுதி, தனிமையான சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்க அதுதான் ஏற்ற இடம். முதல் முதலாக கொடுக்கப்படும், பெறப்படும் முத்தம் சிறப்பு வாய்ந்தது. உங்களின் காதலியோ, மனைவியோ அதை நிச்சயம் எதிர்பார்ப்பார். முத்தம் கொடுக்க நண்பர்களுடன் குரூப்பாக செல்லும் இடங்களில் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். தனியாக இருவரும் செல்லும் இடமே ஏற்றது முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது பதற்றம் ஏற்படுவது இயல்புதான். மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அவசரத்தில் உங்களின் துணையை காயப்படுத்திவிடவேண்டாம். அப்புறம் முதலே முடிவாகிவிட வாய்ப்புள்ளது. உங்கள் துணை முத்தம் கொடுக்க விரும்பினால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்களேன். முத்தம் கொடுப்பதற்கு முதலில் மூச்சுக்காற்று சுத்தமானதாக, புத்துணர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். எனவே துணையுடன் டேட்டிங் என்று முடிவு செய்த உடன் சுவாச புத்துணர்ச்சிக்கு வேண்டியவைகளை தயாராக செய்து விட்டு கிளம்புங்கள். புதினா சுவிங்கம் சாப்பிட்டால் மூச்சு புத்துணர்ச்சியோடு இருக்கும். தனியாக சந்திக்க இடம் கிடைத்து விட்டதே என்று உடனே தொடங்கிவிட வேண்டாம். கொஞ்சம் நேரம் பேசுங்கள். கண்களின் மூலம் சம்மதம் கிடைத்த உடன் அப்புறம் முத்தமிட தயாராகுங்கள். சரியான உடல் மொழி அவசியம். கொஞ்சம் நெருங்கினாலும் உங்கள் துணைக்கு நீங்கள் முத்தமிட விரும்புகிறீர்கள் என்பது உணர்த்தி விடும். முதல் முத்தம் என்பது மென்மையானதாய் மயிலிறகில் வருடுவதைப் போல இருக்கவேண்டும். அதற்காக போராட வேண்டாம். இயல்பாய் இருக்கட்டும் என்கின்றனர் நிபுணர்கள். |
| கைவிலங்கிட்டு செக்ஸ்...கை மாட்டிக் கொண்டதால் '999' ஐ அழைத்த பெண்! Posted: 23 Jun 2012 11:39 PM PDT Woman handcuffed to bed rescued by firefighters,இங்கிலாந்தில் நார்த்தாம்படனில் ஒரு பெண் கை விலங்கிட்டுக் கொண்டு செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கை மாட்டிக் கொண்டு விட அவர் தீயணைப்புப் படையினரை வரவழைத்து கை விலங்கிலிருந்து மீள வேண்டியதாயிற்று.இந்த சம்பவத்தால் அப்பெண் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நார்த்தாம்படன் தீயணைப்புப் படையினருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பெண் தான் பெட்ரூமில் கை விலங்குடன் ஏடாகூடமான நிலையில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும், தன்னை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அங்கு விரைந்தனர் தீயணைப்புப் படையினர். 22 வயதுள்ள அந்தப் பெண்ணின் கைகள் கட்டிலுடன் இணைத்து கைவிலங்கிடப்பட்டிருந்தன. கைவிலங்கை தீயணைப்புப் படையினர் கழற்ற முயன்றனர். ஆனால் அதன் சாவி கிடைக்காததால் கட்டிங் மெஷினைக் கொண்டு வந்து கைவிலங்கை துண்டித்து அப்பெண்ணை மீட்டுள்ளனர். மேலை நாடுகளில் போலீஸார் பயன்படுத்துவது போன்ற கைவிலங்கை மாட்டிக் கொண்டு விவகாரமான செக்ஸ் நடவடிக்கைகளில் சில ஜோடிகள் ஈடுபடுவதுண்டு. அது போன்ற செக்ஸ் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்தபோதுதான் இப்படி எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டாராம். ஆனால் அவருடன் இருந்த ஆண் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்., |
| அதிவேக பைக்கில் ஊர் சுற்றும் நமீதா Posted: 23 Jun 2012 11:37 PM PDT நமீதாவுக்கு அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். வழக்கமாக ஆண்கள் தான் அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக நமீதா அப்படி ஊர் சுற்றுகிறார். நமீதா கையில் அவ்வளவாக படங்கள் இல்லை. ஆனாலும் அம்மணி கடை திறப்பு விழா, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கை நிறைய பணம் சம்பாதிக்கிறார். நமீதாவின் பொது சேவையை நம்மாட்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அவரைப் புகழந்து தள்ளுகிறார்கள். நமீதா போல வருமா என்கிறார்கள். இந்நிலையில் நமீதா பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது நமீதா ஷூட்டிங் இல்லாத நேரங்களி்ல் சூரத் மற்றும் ஹம்பிவேலியில் அதிவேக பைக்கில் பறக்கிறாராம். நமீதாக்குள் இப்படி ஒரு வீரியா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளார். நீங்கள் சூரத் அல்லது ஹம்பிவேலியில் இருக்கிறீர்களா? பார்த்து, ரோட்டில் பைக்கில் யாராவது பறந்தால் அது நமீதாவாக கூட இருக்கலாம். |
| மாட்டின் முகத்தோற்றத்துடன் அதிசய மீன்.! (படங்கள் இணைப்பு) Posted: 23 Jun 2012 12:28 PM PDT நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர் நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன் விற்பனை சந்தையில் விலை கொடுத்து வாங்கியுள்ளார். ஒரு கிலோகிரேம் நிறை கொண்ட இந்த மீனின் கண்கள், வாய், மூக்கு, கொம்புகள் மாட்டின் முகத் தோற்றத்தை கொண்டதாக உள்ளது.காண்பவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த மீனை பார்க்க பலரும் வருகை தருவதாக அந்த மீனை கொள்வனவு செய்துள்ள எம். அஸ்ரப் தெரிவித்தார். செய்தியாளர் – எம்.இஸட்.ஷாஜஹான் |
| கிளாமர் காட்டாவிட்டால் ஏற்பார்களா? டாப்ஸி கேள்வி Posted: 23 Jun 2012 11:49 AM PDT கிளாமர் காட்டாவிட்டால் ரசிகர்கள் ஏற்பார்களா? என கேட்கிறார் டாப்ஸி. 'ஆடுகளம், 'வந்தான் வென்றான் படங்களில் நடித்தவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்த ஆண்டு எனக்கு இதுவரை 'தருவுÕ என்ற ஒரு தெலுங்கு படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆனாலும் ஓய்வில்லாமல் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறேன். இதன் பிறகு வரிசையாக 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 'சஷ்மே பத்தூர்Õ இந்தி படம் ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நடித்துள்ள 'மறந்தேன் மன்னித்தேன்Õ பட ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதில் கிளாமர் காட்டாமல் நடித்திருக்கிறேன். இதை ரசிகர்கள் ஏற்பார்களா? அவர்கள் இதை எப்படி ஏற்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் Ôமதகஜ ராஜாÕ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து பொள்ளாச்சியில் நடக்க¤றது. இது அச்சு அசல் சுந்தர்.சி முத்திரையுடன் கூடிய படமாக இருக்கும். என்னுடைய சொந்த குணாதசியங்களை உள்ளடக்கிய கேரக்டராக இது அமைந்திருக்கிறது. நேரடி தமிழ் பட ஷூட்டிங்கில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் நடுக்கமாக உள்ளது. பட குழுவில் உள்ள அனைவருக்கும் தமிழ் நன்றாக தெரியும். தமிழ் தெரியாத ஒரே ஆள் நான்தான். விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். சுந்தர் சி., விஷால், வரலட்சுமி என செட்டில் இருப்பவர்கள் ஜோக் ¢அடித்து பேசும்போது அதை புரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார். |
| புறாக்கள் தற்கொலை செய்து கொள்ளும் ரகசியம் தெரியுமா..? Posted: 23 Jun 2012 11:48 AM PDT புறா போன்ற சிறியப் பறவைகள் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள கற்களை உண்ணுவதாக விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள். உயர்ந்த மரக்கிளையில் வாழும் புறா போன்ற பறவைகள் தங்களின் வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் உயரமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து சிறு சிறு கற்களை சேமித்து வைத்துக்கொள்கின்றனவாம். இதற்கு காரணம் பறவைகளின் இளமை முடிந்து முதுமை ஏற்பட்டு, இனி தங்களால் பறந்து சென்று இறை தேட இயலாது என்ற நிலை வரும்பொழுது அந்தக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி வருகின்றன. இறுதியில் இரைப்பையில் அதிக கற்கள் சேர்ந்து பாரம் அதிகமான நிலையில் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பறக்க முயற்சி செய்யாமல் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், பறவையின் அடிப்படை இயற்பியல் அறிவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. |
| கோழிகள் சிறு சிறு கற்களை உண்ணுவது ஏன் தெரியுமா.?? Posted: 23 Jun 2012 11:26 AM PDT பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப் பார்த்தால் அதில் சிறு சிறு கற்களாக பல கற்கள் இருப்பதை பார்க்கலாம். இதற்கு காரணம் நமக்குத் தெரிந்து கோழிகள் இரை என்று நினைத்து கற்களையும் சேர்த்து விழுங்கிவிடுவதாக்கத்தான் இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் கோழிகள் மற்றும் பறவைகள் உணவுடன் சேர்த்து கற்களை தெரிந்தே உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதற்காக இந்த கோழிகள் மற்றும் பறவை இனத்தில் சில கற்களையும் சேர்த்து விழுங்குகிறது என்ற ஆராய்ந்துப் பார்க்கையில் மிகவும் விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கோழிகள் தாங்கள் உண்ணும் தீனி நன்கு ஜீரணமாவதற்கு சற்று அதிக உறைவுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிக் கற்களை உணவுடன் சேர்த்து உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த கோழிகள் தான் தங்களின் உணவு ஜீரணத்திற்காக கற்களை உண்கிறது என்றால் நம்புவீர்களா ? |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


