அறிவுத் தடாகம் |
| Posted: 11 Jun 2012 09:36 PM PDT ஒவ்வொரு நாளும் உன் குரல் கேட்டுத்தான் என் மனக்குயில் பாடத் துவங்கும் ***** புலரும் பொழுதுகளில் உன் குளிர் மனம்புகுந்தால் தான் என் மனத் தோட்டம் துளிர்க்கும் ***** அந்தி நேரம் அழகு நேரம் சந்திக்க சாரல் நேரும் சிந்திக்க வேறில்லாது முந்திக்கொண்டு முகம் தேடும்! ***** உன் முகப்பூ பூக்காதிருந்தால் என் அகப்பூ கருகிவிடும்! ***** நின் பற்களின் சூரியன் தெறிக்க என் எண்ணச்சந்திரன்களில் மிண்ணும் பெளர்ணமிகள்! ***** உன் செவ்விதழ் பட்டுவர செந்தமிழெல்லாம் அமுதமாகி செவிகளில் செந்தேன் மழை பொழியும்! ***** கடிகாரத்தின் மீது கடுங்கோபம், நாங்கள் பேசும் போது மட்டும் பொய்யாய் நேரங்காட்டுகிறது. ***** சன நேர ஓவியக் கூடங்களாய் ஆச்சரியத்தில் ஆழ்த்தி மறைகிறது உன் உதட்டோரப்புன்னகை! ***** உனக்கான காத்திருப்பிலெல்லாம் பூத்திருக்கும் பூவின் நிலையில் நான்! -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா |
| You are subscribed to email updates from அறிவுத்தடாகம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
