Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


மகள் என்றும் பாராமல் உல்லாசத்திற்கு அழைத்தவர் எனது தந்தை-முருகனின் மகள் பார்கவி

Posted: 06 Jun 2012 08:21 PM PDT


எனது தந்தை முருகன் மோசமான நடத்தை கொண்டவர். பெற்ற மகள் என்று கூடப் பார்க்காமல் என்னை பலமுறை உல்லாசத்திற்கு அழைத்தவர் என்று குமுறியபடி கூறியுள்ளார் விழுப்புரத்தில் நண்பர், அவரது மகள், மருமகன் ஆகியோரைக் கொலை செய்து புதைதது சிக்கியுள்ள முருகனின் மகள் பார்கவி.
பார்கவிதான், முருகனை ஜீ தமிழ் டாக் ஷோ மூலம் அம்பலப்படுத்தியவர். தனது தந்தை குறித்து அவர் போலீஸாரிடம் கூறுகையில்,

எனது தந்தை முருகன் நல்லவர் கிடையாது. அவர் பலமுறை மகள் என்றும் பாராமல் என்னையே உல்லாசத்திற்கு அழைத்தவர். இதனால் எனது தந்தையுடன் வீட்டில் இருக்கவே எனக்கு பிடிக்காது.

எனது தந்தையை நம்பி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா, சிலம்பரசன் ஆகியோர் அடைக்கலம் தேடி வந்தனர். சிலம்பரசன் வெளியூருக்கு வேலைக்கு சென்றபோது லாவண்யாவிடமும் எனது தந்தை தவறாக நடக்க முயன்றார்.

இந்நிலையில் தான் லாவண்யாவுக்கும், சிலம்பரசனுக்கும் எனது தந்தை ஆப்பிள் ஜுஸில் ஏதோ கலந்துகொடுத்து சிலம்பரசனின் தலையில் பலமாக தாக்கி அவரை கொலை செய்தார். மயக்கத்தில் இருந்த லாவண்யாவை குரல்வளையை இறுக்கி சாகடித்து விட்டார்.

பின்னர் மகளையும், மருமகனையும் பார்க்க வந்த சேகருக்கும் எனது தந்தை மதுபானத்தில் ஏதோ கலந்துகொடுத்து அவரது தலையிலும் பலமாக தாக்கி கொலை செய்தார்.

இதனால் தான் நான் சதீசை காதலித்து வந்த விவகாரத்தையும் எனது தந்தையிடம் மூடி மறைத்தேன். அவருக்கு தெரிந்தால் எங்களையும் கொலை செய்து விடுவார் என்று கூறியுள்ளார்.




அஜீத்தின் பில்லா 2, கார்த்தியின் சகுனி: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted: 06 Jun 2012 08:28 PM PDT


அஜீத்தின் 'பில்லா 2' கார்த்தியின் 'சகுனி' படங்கள் ரிலீசாகும் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. 'பில்லா 2' வருகிற (ஜூன்) 22-ந்தேதி வெளியாகிறது. சகுனி இரண்டு வாரம் இடைவெளியிட்டு ஜூலை 6-ல் வருகிறது.

இரு படங்களுமே மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாகவும் உள்ளன. கடந்த சில மாதங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் வரவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டால் அவற்றை நிறுத்தி வைத்து இருந்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் 'பில்லா 2', 'சகுனி' படங்கள் வருகிறது. 'பில்லா 2'-வில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். சாதாரண இளைஞன் பயங்கர தாதாவாக மாறுவதே இப் படத்தின் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துள்ளது.

சகுனியில் கார்த்தி ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார். சங்கர் தயாள் இயக்கி உள்ளார். 'இசை இளவல்' ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அரசியல் கதையாக சகுனி தயாராகி உள்ளது.



ஜீ டிவி 'டாக் ஷோ' மூலம் அம்பலத்திற்கு வந்த 3 பேர் படுகொலை-விழுப்புரத்தில் பரபரப்பு!

Posted: 06 Jun 2012 07:47 PM PDT


விவசாயி ஒருவர் நகை, பணத்திற்காக தனது நண்பரையும், அவரது மகள் மற்றும் மருமகனையும் கொன்று புதைத்தார். இந்தத் தகவலை அந்த விவசாயியின் மகள், டிவி டாக் ஷோ ஒன்றில் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் எலும்புக் கூடுகளையும் தோண்டி எடுத்தனர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் டிவி டாக் ஷோ மூலம் வெளியானதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சென்று விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு பார்கவி (17) என்ற மகள் இருக்கிறார்.

பார்கவி அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு முருகன் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். இதை பார்கவி தனது காதலன் சதீஷிடம் கூறினார். இந்த காதல் குறித்து பஞ்சாயத்தார் முன்னிலையிலும் பேசப்பட்டது. அங்கும் பார்கவி தான் திருமணம் செய்தால் சதீஷை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டார்.

சதீஷ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் இங்குள்ள சில நண்பர்கள் மூலம் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு தனது காதலியை அழைத்துக்கொண்டு சென்றார். தனது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு பார்கவியை அழைத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பார்கவியின் தந்தை முருகனையும் தொலைக்காட்சி நிலையத்தார் அழைத்திருந்தனர்.

அப்போது நிகழ்ச்சி நடத்துபவரிடம் பார்கவி, தனது தந்தை நல்லவர் இல்லை. அவர் ஏற்கனவே சில வருடங்கள் முன்பு நகை பணத்துக்காக 3 பேரை கொலை செய்து குச்சிப்பாளையம் கிராமத்தில் புதைத்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த முருகனின் நண்பரான சேகர் என்பவரின் மனைவி ஜீவா (35) இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோர் 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை.

தனது கணவர் உள்பட 3 பேரும் எங்கேயோ தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள் என்றே ஜீவா நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது தாலியை கூட கழற்றாமல் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், டிவி நிகழ்ச்சியில் முருகனின் மகள் தனது தந்தை ஏற்கனவே 3 பேரை கொலை செய்திருக்கிறார் என்று கூறியதை கேட்டதும் ஜீவாவுக்கு அந்த 3 பேரும் தனது கணவர் மற்றும் மகள், மருமகனாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக ஜீவா விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பார்கவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நேற்று மதியம் பார்கவி போலீசாரிடம் 3 பேரின் பிணங்களை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். விழுப்புரம் தாசில்தார் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் குச்சிப்பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தரைக்கிணற்றை தோண்ட ஆரம்பித்தனர்.

3 அடி தோண்டியதுமே ஒவ்வொன்றாக 3 எலும்புக்கூடுகள் கிடைத்தன. இதில் ஒன்று பெண் எலும்புக்கூடு என்றும், மற்ற 2 எலும்புக்கூடுகளும் ஆணின் எலும்புக்கூடுகள் என்றும் தெரியவந்தது. அதோடு அந்த எலும்புக்கூடுகள் ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோருடையது தான் என்பதும் தெரியவந்தது.

ஏன் இந்தக் கொடூரக் கொலை?

2008-ம் ஆண்டு முருகனின் உறவினரும், அவரது சொந்த ஊர்க்காரருமான சேகரின் மகள் லாவண்யா சிலம்பரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணத்திற்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே சேகர் தனது மகளையும், மருமகனையும் குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் வீட்டுக்கு அடைக்கலமாக அனுப்பிவைத்தார். சிறிது காலம் இவர்கள் 2 பேரும் இங்கு இருக்கட்டும், பிரச்சினை முடிந்ததும் அவர்களை அழைத்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

முருகனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே லாவண்யாவையும், சிலம்பரசனையும் முருகன் வீட்டில் விட்டுவிட்டு சேகர் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிகிறது.

லாவண்யா திருமண நகைகள் ஏராளமாக அணிந்திருந்ததாக தெரிகிறது. அதோடு மணமக்கள் கையில் பணமும் அதிகம் இருந்தது. இந்த நகை, பணத்தின் மீது முருகனுக்கு ஒரு கண் இருந்தது. தக்க சமயம் பார்த்து முருகன், சிலம்பரசனையும், லாவண்யாவையும் கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிகிறது.

இந்த விவரம் தெரியாமல் சில நாட்கள் கழித்து தனது மகளையும், மருமகனையும் பார்க்க முருகன் வீட்டுக்கு சேகர் வந்தார். வீட்டில் அவர்கள் இருவரும் இல்லாததால் அவர் பலரிடமும் விசாரித்தார். இதில் சேகருக்கு நடந்த சம்பவம் தெரியவரவே முருகனிடம் தகராறு செய்தார். இதனால் சேகரையும் முருகன் கொலை செய்து அதே இடத்தில் புதைத்துவிட்டார்.

மனைவியுடன் டாக் ஷோவில் கலந்து கொண்ட முருகன் அதன் பி்ன்னர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகி்ன்றனர். தலைமறைவாவதற்கு முன்பு தனது மனைவியிடம் இனிமேல் நீ என்னை உயிருடன் பார்க்க முடியாது என்று கூறி விட்டுச் சென்றுள்ளார் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.



விஜய் நடிக்கும் 'தலைவன்' பட தலைப்பு மாற்றம்

Posted: 06 Jun 2012 07:26 PM PDT


இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'தலைவன்' எனப் பெயரிடப் பட்டிருந்தது.

ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் 'தலைவன்' படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.எல்.விஜய் முன்பு இயக்கிய 'தெய்வத்திருமகள்' படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றும் பின்னர் தெய்வமகன் என்றும் பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக அவர் தெய்வத்திருமகள் என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டார்.

இந்த சென்டிமெண்ட் காரணமாக 'தலைவன்' படத்தின் தலைப்பையும் இவர் மாற்றுகிறார் என்று இயக்குனரின் நெருக்கமான தரப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.



ஜூலை 1-ந் தேதி முதல் மேலும் மக்களை கொடுமைபடுத்துவோம்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 06 Jun 2012 07:15 PM PDT



2012-2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த வரி உயர்வு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

தற்போது சேவை வரி விதிக்கப்படும் சேவைகளின் பட்டியலில் 119 சேவைகள் உள்ளன. வெளிநாடுகளில் எதிர்மறை பட்டியல் என்ற, சேவை வரி விதிக்கப்படாத சேவைகளின் பட்டியல் நடைமுறையில் உள்ளது. அதேபோல் இந்தியாவிலும் எதிர்மறை பட்டியல் நடைமுறைப்படுத்தப்படுவதாக பட்ஜெட் உரையின் போது அறிவித்த பிரணாப் முகர்ஜி, அந்த எதிர்மறை பட்டியலில் மழலையர் கல்வி மற்றும் பள்ளி கல்வி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி கல்வி, குடியிருப்புகளை வாடகைக்கு விடுதல், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை சேவைகள், மீட்டர் பொருத்தப்பட்ட டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷா, லாட்டரி, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட 17 வகையான சேவைகள் இடம் பெற்று இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இந்த எதிர்மறை பட்டியலில் இடம் பெற்றுள்ள 17 வகையான சேவைகளை தவிர, கிட்டத்தட்ட பிற அனைத்து சேவைகளும் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

அதன்படி, பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்விக்கு சேவை வரி கிடையாது என்ற போதிலும் பயிற்சி வகுப்புகள் (கோச்சிங் கிளாஸ்), பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை சேவை வரியின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

ரெயிலில் முதல் வகுப்பு பயணம், குளிர்சாதன வசதி பயணம் ஆகியவற்றுக்கும் இனி சேவை வரி விதிக்கப்படும். அதாவது இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவு, இறுதிச்சடங்கு தவிர கிட்டத்தட்ட அனைத்து சேவைகளும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன.

இந்த 2012-2013-ம் நிதி ஆண்டில் சேவை வரியின் மூலம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.  

 ஜூலை 1-ந் தேதி முதல் மேலும் மக்களை கொடுமைபடுத்துவோம் என்று அறிவித்து இருக்கலாமே! அதை தானே வாரி என்ற பெயரில் அரசுகள் இப்போதெல்லாம் செய்து கொண்டிருக்கிறது





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™