Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


திருமண சர்ச்சைக்கு பிறகு நடிக்க வந்தார் அனன்யா

Posted: 18 Jun 2012 01:16 AM PDT

திருமண சர்ச்சைக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தும் அனன்யா, 3 கிளைமாக்ஸ் கொண்ட படத்தில் நடிக்கிறார். நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் அனன்யா. இவருக்கும் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அவரை மணப்பதில் பிடிவாதமாக இருக்கிறார் அனன்யா. இதையடுத்து திருமண தேதி முடிவாவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த பிரச்னையால் படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

இதற்கிடையில் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் அனன்யா. மலையாளத்தில் ரத்தா ராக்ஷா என்ற 3 டி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். பேஷன் டிசைனராக ஒரு வேடம். மோகினியாக மற்றொரு வேடம். 8 நாட்கள் தொடர்ந்து மாறி மாறி இருவேடங்களிலும் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடிக்கும் சன்னி வனேயை பேய் வேடம் போட்டு பயமுறுத்த எண்ணினேன். முதல் நாள் ஷூட்டிங்கில் அந்த சம்பவம் நடந்தது. அதுவரை நான் பேய் கெட்டப் போட்டு சன்னி பார்க்கவில்லை. எனவே அவருக்கு ஷாக் கொடுக்க எண்ணினேன்.

இரவில் அவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது விளக்குகள் அணைந்திருந்தது. மொபைல் போனில் என் கண்களுக்கு மட்டும் வெளிச்சம் காட்டி அவரை குரல் மாற்றி அழைத்தேன். அவர் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து அலறியபடி கட்டிலிலிருந்து கீழே விழுந்தார். இப்படத்துக்கு 3 விதமான கிளைமாக்ஸ் படமாக்கப்படுகிறது. இவ்வாறு அனன்யா கூறினார்.

மீண்டும் தமிழில் நடிப்பது ஆண்டவன் கையில் உள்ளது : தமன்னா

Posted: 18 Jun 2012 01:06 AM PDT

மீண்டும் தமிழில் நடிப்பது ஆண்டவன் கையில்தான் உள்ளது என்றார் தமன்னா. பிரபல நடிகர், நடிகை திருமணங்களில் சமீபகாலமாக நடிகைகள் நடனம் ஆடுவது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நடந்த ரீமா சென் திருமண விழாவில் ஸ்ரேயா நடனம் ஆடினார்.

அதேபோல் சில தினங்களுக்கு முன் நடந்த தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா திருமண விழாவில் தமன்னா, ஸ்ரேயா நடனம் ஆடி விருந்தினர்களை உற்சாகப்படுத்தினார்கள். இதற்காக இருவரும் பெரிய தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தமன்னா கூறியதாவது:

பணத்துக்காக நடனம் ஆடினேன் என்பது அடிப்படை இல்லாத தகவல். இது வருத்தம் அளிக்கிறது. என் குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடந்திருந்தால் நான் நடனம் ஆடியிருப்பேன். அதுபோல்தான் ராம் சரண் திருமணத்தில் ஆடியதும். அவரை எனது குடும்பத்தை சேர்ந்தவராகவே கருதுகிறேன். அந்த எண்ணத்துடன்தான் அவரது திருமண விழாவில் நடனம் ஆடினேன். என்ன பாடலுக்கு நடனம் ஆடினேன் என்பதையும் சொல்ல விரும்பவில்லை.

இதன் மூலம் எனக்கு எந்த பப்ளிசிட்டியும் தேவை இல்லை. தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். தமிழில் மீண்டும் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நான் கடவுளை நம்புகிறவள். நான் தமிழில் நடிப்பதும் எனக்கு நல்லது நடப்பதும் எல்லாமே ஆண்டவன் கையில்தான் இருக்கிறது.
இவ்வாறு தமன்னா கூறினார்.

பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடு கனடா - உலகளாவிய கருத்துக்கணிப்பு

Posted: 18 Jun 2012 01:02 AM PDT

உலகின் மிகப்பெரிய போருளாதாரத்தை கொண்ட ஜி-20 நாடுகளில் பெண்கள் வாழவதற்கு சிறந்த நாடு எது என சமீபத்தில் உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நிபுணர்கள் 370 பேரிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வாக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது கனடா. சமநீதி , பாதுகாப்பு , பெண்களுக்கெதிரான கொடுமைகள் இல்லாத தன்மை , அடிமைத்தனமற்ற வாழ்க்கை முறை , ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றில் சிறந்த கொள்கைகள் பின்பற்றபடுவதால் கனடா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் மேற்கூறிய அம்சங்கள் அனைத்திலும் பின்தங்கி இருப்பதாலும் குழந்தைக்கொலை, குழந்தைத் திருமணம் , பெண்ணடிமைத்தனம் முற்றிய நிலை ஆகியவற்றினால் இந்தியா பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடல்ல, மோசமான நாடு என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகியவை கனடாவிற்கு அடுத்த நான்கு இடங்களையும் பிடித்து சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக தேர்வாகியுள்ளன. அமெரிக்கா ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா பின்பற்றும் இனப்பெருக்க உரிமைகள், பெண்களுக்கான ஆரோக்கிய நலவாழ்வுத் திட்டங்கள் ஆகியவற்றில் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மோசமான நாடுகள் வரிசையில் இந்தியாவிற்கு அடுத்த இடங்களை சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. சவுதி அரேபியாவில் பெண்கள் அதிகம் படித்துள்ளதுடன் , வளமையான நாடு என்ற போதிலும் கூட சில முக்கிய உரிமைகள் மறுக்கப்படுவதால் பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நான்கு கண்களுடன் பிறந்த விசித்திரக்குழந்தை.! (அதிர்ச்சி படங்கள்)

Posted: 18 Jun 2012 12:49 AM PDT

உலகின் விசித்திரங்கள் ஏராளம் அதில் புதியஉலகில் தாராளம்... இன்று நாம் உங்களுக்காக தரப்போகும் செய்தி விசித்திரம் மட்டுமல்ல சற்று ஆச்சரியத்தையும் உண்டுபண்ணும் என்பது நிச்சயம். ஆம் மனிதப்பிறப்புகளில் எத்தனை விதமான விசித்திர பிறப்புக்களை நாம் அறியத்தந்துள்ளோம். அவற்றும் இது ரொம்பவும் விசித்திரம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை என்பது வரம். இப்படித்தான் ஒரு பெண்ணும் 16 வருடங்களாக குழந்தையின்றி வேதனைப்பட்டுள்ளார். 36 வயது நிரம்பிய குறித்த பெண்மணி பல் ஆண்டுகள் காத்திருப்புகள் பலனின்றி செயற்கை கருவை உருவாக்கி குழந்தை பெற முடிவு செய்தார். வைத்தியர்களை அணுகி அதற்குரிய சலக ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.



காலப்போக்கில் பெண்ணின் வயிற்றில் இரட்டை கருக்கள் வளர்வது அவதானிக்கப்பட்டது. டாக்டர்களும் அவ்வப்போது குழந்தை கருக்களை அவதானித்துக்கொண்டனர். இறுதியில் ஒரு குழந்தை நலமாகவும் மற்ற குழந்தை வித்தியாசமான தோற்றத்திலும் இருப்பது அவதானிக்கப்பட்டது. பிரசவ தேதி நெருங்கியது. பெண்ணுக்கு பிரசவம் பார்த்து டாக்டர்கள் ஒரு குழந்தையை வெற்றி கரமாக வெளியே எடுத்தார்கள் . குறித்த குழந்தை 1800 கிராம் எடையுடன் நலமான ஒரு ஆண் குழந்தையாக அவதரித்தான். மற்ற குழந்தையும் வெளியே எடுக்கப்பட்டது. டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆழந்தார்கள்...

மற்றயை குழந்தை விசித்திரமான தோன்றத்துடன் பிறந்தது அதிச்சியை ஏற்படுத்தியது. ஒரு விலங்கு அல்லது வேற்றுக்கிரகவாசி போன்றே அது காணப்பட்டது. நான் கண்கள் மற்றும் அகன்ற வாய் என விகாரமாக தோன்றமளித்தது அந்த குழந்தை. கால் ஒற்றே காணப்பட்டது. பார்ப்பதற்கு ஒரு தேரை அல்லது தவளை போன்றும் காணப்படுகிறது. இப்படியும் நடக்கிறது உலகில்......


வினோதங்கள் தொடரும்....

கரடி பொம்மையுடன் உடலுறுவு : இளைஞன் 4வது தடவை கைது!

Posted: 17 Jun 2012 12:33 PM PDT

சார்லஸ் மார்ஷல் எனும் 28 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் அண்மையில் விசித்திரமான ஒரு சம்பவத்தையொட்டி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த இளைஞன் கரடி பொம்மையுடன் உடலுறு கொள்ள முயற்சி மேற்கொண்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். அதுவும் பொது இடத்தில் தனது வேலையை காட்டியிருக்கிறான் இந்த கண்றாவி மனுசன்.

இவர் இதற்கு முன்னரும் மூன்று தடவை கரடி பொம்மையை தன்னுடன் கொண்டுவந்து பொது இடத்தில் சுயஇன்பம் கண்டு பொம்மையுடன் உடலுறவு கொண்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளான். இவன் மனநிலை குன்றியவனாக இருக்க கூடும் எனவும் குறித்த இளைஞனுக்கு கரடியுடன் உறவாட விருப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்....ஏண்டா.... ஊர் உலகத்துல உனக்கு பொண்ணா கிடைக்கல...???

தவளைகளுக்கு நடந்த வினோத திருமணம்! (படங்கள் இணைப்பு)

Posted: 17 Jun 2012 11:48 AM PDT

பொதுவாக ஆதிகாலங்களில் மழை இன்றி காணப்பாட்டால் பிராமணர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய யாகம் நடத்துவார்கள். இதன் மூலம் கொஞ்சமாவது மழை பொழிவதுண்டு. இதற்கான சரியான விஞ்ஞான காரணங்களும் உண்டு. ஆனால் இந்தியாவில் மழை வேண்டி இன்னும் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. அதில் தவளைகள் திருமணம்.

இரு தவளைகளுக்கு ஊரார் ஒன்று கூடி சம்பிரதாய பூர்வமாக சடங்கு வைத்து திருமணம் நிகழத்தி தவளைகளை ஒன்றுக்கொன்று முத்தங்களை பரிமாற வைத்து அவற்றை வாழ்த்தி மழைவேண்டி பிரார்த்திப்பார்கள். இது தொடர்பாக இந்தியாவின் தக்காபூர் எனும் தொலை கிராமத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஒட்டிய புகைப்படங்களே நாம் உங்களுக்காக தந்துள்ளோம்... நீண்ட நாட்கள் மழை இன்றி மிகவும் வரட்சியாக இக்கிராமம் காணப்பட்ட போதே ஊர் மக்கள் ஒன்று கூடி இத்தவளைகள் திருமணத்தை நிகழ்த்தியுள்ளார்.





தவளைகள் திருமணம் மட்டுமல்ல எருமை.. கழுதை என மிருகங்களுக்கும் இவ்வாறு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு இந்தியாவில் அதிகம் காணப்படுகிறன்றமை குறிப்பிடத்துக்கது.

வினோதங்கள் தொடரும்.....

உலகசாதனை படைத்து மிகப்பெரிய "கெவாப்" உணவு.!

Posted: 17 Jun 2012 11:41 AM PDT

துருக்கி நாட்டில் அண்மையில் உலகின் மிகப்பெரிய கெவாப் செய்யப்பட்டு உலகசாதனையாக பதியப்பட்டுள்ளது. குறித்த கெவாப் உணவானது துருக்கியின் தலைநகரில் லிப்ட் மூலம் கொண்டுவரப்பட்டது. இது சுமார் 1198 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.




Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™