Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


6 ஆண்டுகளில் 40 முறை பாலியல் உறவு வைத்துக்கொண்ட நித்தியானந்தா!

Posted: 16 Jun 2012 11:37 PM PDT

என் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நித்தியானந்த தியான பீடத்தின் பீடாதிபதி நித்தியானந்தர் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நீதிமன்ற உத்தரவை மீறி, எனக்கு எதிரான ஆரத்தி ராவின் பேட்டியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது.என் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி நான் பேச முடியாது. ஆனால், என் மீது ஆரத்தி ராவ் பகிரங்கமாகக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

2005-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் சுமார் 40 முறை பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக ஆரத்தி ராவ் கூறியுள்ளார். இதுபற்றி 2010-ம் ஆண்டில் போலீஸில் புகார் அளித்துள்ளார். இப்போது இந்தப் பிரச்னையை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

துரை ஆதீனத்தின் 293-வது சந்நிதானமாக நியமிக்கப்பட்டுள்ள என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, அந்தப் பொறுப்பில் இருந்து என்னை விலக்கவே, என் எதிரிகளுடன் இணைந்து ஆரத்தி ராவ் உள்ளிட்ட சிலர் எனக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

ஹர்பஸ்-2 என்ற பாலியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆரத்தி ராவ், அதைக் குணப்படுத்திக் கொள்வதற்காக 2004-ல் ஆசிரமத்திற்கு வந்தார். இந்த நோய் முன்ஜென்மப் பாவத்தில் விளைந்தது என்பதால் இதைக் குணப்படுத்த முடியாது என்று நான் கூறிவிட்டேன். அவ்வப்போது ஆசிரமத்திற்கு வந்து செல்வார்.

இதைத் தவிர, அவரது பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஹர்பஸ்-2 நோயால் பாதிக்கப்பட்டவரின் எச்சில் பட்டாலே அடுத்தவருக்கு அந்த நோய் பரவும். அந்த வகையில், உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டிருந்தால் எனக்கும் அந்த நோய் தாக்கியிருக்கும் அல்லவா.

எனவே, ஆரத்தி ராவ் மற்றும் என் ரத்தத்தை சோதித்து உண்மையறிய வேண்டும். ரத்தப் பரிசோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்றார் அவர்.

13ஐ செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த 15 கைது.!

Posted: 16 Jun 2012 12:05 PM PDT

எட்டாம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி (13), அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் சிறுவன் (15), மாணவியிடம் கடந்த 2 மாதமாக செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்து உள்ளார்.

இதுபற்றி மாணவி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கையைப் பிடித்து இழுத்து சென்ற சிறுவன், ''நீயில்லாமல் நானில்லை, நீ என்னை காதலிக்காவிட்டால் செத்துவிடுவேன்' என்று உருகி உருகி டார்ச்சர் செய்துள்ளார்.

மாணவியின் பின்னாலேயே வந்த அவரது உறவினர்கள், சிறுவனை பிடித்து செம மாத்து மாத்தினர். பின்னர் அவரை புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

I Love You என்ற வார்த்தையால் இறந்தவர் உயிர்த்த அதிசயம்! (Photos In)

Posted: 16 Jun 2012 11:49 AM PDT

இறந்துவிட்டார் என்று வைத்தியர்களால் கைவிடப்பட்ட பெண்னொருவர், அவரது கணவன் கூறிய ஐ லவ் யூ என்ற வார்த்தையால் உயிர்த்த சம்பவம் ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்று கேட்போரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

பைலி, 49 வயதாகும் பெண். இவர் தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குறித்த தினத்தில் மாரடைப்பு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிகிச்சை பலனின்றி பைலி இறந்துவிட்டதாக கூறி உடலத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்தனர்.


பைலி இறந்ததை கேள்விப்பட்டு அவரது கணவனான ஜோன் (58) பைலியின் உடலை பார்க்க வந்திருந்தார். அங்கு வந்து தமது பழைய ஞாபகங்களை நினைத்துப்பார்த்து கண்ணீர்விட்டுள்ளார். பைலியின் உடலத்தை கட்டியணைத்து, நெற்றியில் முத்தமிட்டு "ஐ லவ் யூ" என்று கூறியுள்ளார்.

உடனே ஷாக் அடித்தாற் போல பைலியின் கண்களில் அசைவு தெரிந்தது. உடனடியாக பைலி மருத்துவமனையின் ICU வில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தேறிவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் பார்த்தீர்களா காதலின் சக்தியை!!!


வினோதங்கள் தொடரும்

குறி வைச்சா இவரைப்போன்று வைக்கணும்! (சுவாரசிய காணொளி)

Posted: 16 Jun 2012 11:33 AM PDT

புராணக்கதைகளில் வில்வித்தையில் சிறந்த அருச்சுணம் குறி தப்பாமல் அம்பு விடுவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே... இதே போல்தான் இவரும் குறிபார்த்து அடிப்பதில் திறமைசாலியாக இருக்கிறார:. அதுவும் கையில் வெறும் சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு பொருட்களை வீழ்த்தும் இவரது திறமையை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.... வியக்கவைக்கும் இந்த காணொளியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்...

நாய்ப்பால் குடிக்கும் புலிக்குட்டிகள் (படங்கள் இணைப்பு)

Posted: 16 Jun 2012 11:15 AM PDT

நாய், ஆடு, பூனை போன்ற விலங்குகள் அரிய நிகழ்வாக வேறு விலங்குகளின் குட்டிகளுக்கு பாலூட்டி பாசத்தை பொலிவதை கேள்விப்பட்டிருக்கிறோம். சமீபத்தில் சீனாவில் நன்னிங் நகரில் உயிரியல் பூங்காவில் தாயினால் புறக்கணிக்கப்பட்ட 2 புலிக்குட்டிகளுக்கு நாய் பாலூட்டி வருகிறது.


வினோதங்கள்...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™