Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


நிந்தவூரில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted: 05 Jun 2012 11:17 AM PDT


அம்பாறை - சம்மாந்துறை - நிந்தவூர் பிரதேச வீடொன்றில் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவுடன், இரண்டு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் இன்று (05) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநாயக்க தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டினை சோதனை செய்தபோது விற்பனைக்கு தயாராகவிருந்த கஞ்சாவினை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™