Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது எப்படி.?

Posted: 11 Jun 2012 01:15 AM PDT

மலர்கள் மலர்வதும், அதன் பின் பிஞ்சாகி, காயாகி, கனியாகி, விதையாகி, மீண்டும் விதை முளைப்பதும் நமக்குத் தெரியும். ஆனால், ஆண் செடி/மரத்தின் மகரந்தமும் (ஆண் பூவிலுள்ள மகரந்தப் பொடி) , பெண் செடி/மரத்தின் சூலகமும் (பெண் பூவின் நடுவிலுள்ள குச்சி போன்றது) வேறு வேறு இடத்தில் இருக்கின்றன.

அவை காற்று, பூச்சிகள், தேனீ மற்றும் பிற விலங்குகள் மூலம், தன் இனத்தை பெருக்குவதற்காக மகரந்த சேர்க்கை செய்து, காய் கனி உருவாகிறது. சில சமயம், ஒரே பூவில்கூட, மகரந்தமும், சூலகமும் இருக்கும். இதன் பின்னணியிலுள்ள அறிவியலை, தொடர் ஆராய்ச்சி நடத்தி கண்டறிந்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக, போர்ச்சுகலின் ஒரு நிபுணர் குழு மகரந்தத் தாள்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது யார் என்ற தேடலில் ஈடு பட்டிருந்தது. மகரந்தத் தண்டு வளர்வதை நிர்ணயிப்பது நீரில் உள்ள புரோட்டான் அயனி களா, கால்சியம் அயனிகளா என தவித்துப் போயிருந்தனர்.

எது அதன் செயல்பாட்டு மூலக் கூறு கால்வாய் என்றும், அதன் ஆட்டம், செயல் பாடு போன்றவை எது என் அறுதியிட்டுச் சொல்ல முடியாததிலும், குழப்பமான சூழல் இருந்தது. ஆனால் போர்ச்சுகலின் லிஸ்பான் பல்கலையின் சர்வதேச ஆராய்ச்சிக் குழு இதனைப் பற்றி ஜோஸ் பெயஜோ (José Feijó) என்பவரின் தலைமையில் ஆராய்ந்தது.

முடிவில் இது மகரந்தத் தாள்களின் வளர்ச்சிக்கு கால்சியம்தான் காரணம் என அறிந்தனர். இவை "குளூட்டமேட் வாங்கிகள்" என்ற வேதிப் பொருள் வாயிலாக தூண்டப்பட்டு, அரிதான அமினோ அமிலம் "D சீரின்" என்பதன் மூலமாக உள்ளே நுழைகின்றன என்பது தெரிய வருகிறது.

"குளூட்டமேட் வாங்கிகள்" மற்றும் அமினோ அமிலம் "D சீரின்" என்ற இரண்டு வேதிப் பொருட்களும்தான், விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தில் பல்வேறு அளவில், இரு செல்களுக்கான தொடர்புகளை உருவாக்க, மூலக்கூறு அளவில் செயல்படுகின்றன.

அது மட்டுமல்ல.. இவையே, மூளையின் கற்றல் திறன், நினைவகம், பல வகையான நரம்பியல் சம்பந்தமான நோய்களான Multiple sclerosi, Alzheimer, Huntington's disease போன்றவைகளிலும் தொடர்பு உள்ளவை. அதே குளூட்டமேட் வாங்கிகளும், D சீரினும்தான், தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கும் உதவுகின்றன என்ற ஆச்சரியமான தகவலை போர்ச்சுகலின் ஆய்வகக் குழு கண்டுபிடித்துள்ளது. இதனால் கடந்த 20 ஆண்டு காலமாக, தாவரவியலில் தேடிக் கொண்டிருந்த இரண்டு புதிர்களுக்கான விடையும் அறியப்பட்டுள்ளது.

அதுதான், செல்லின் வெளிச் சவ்வில்,கால்சியம் கால்வாய்களின் மூலக்கூறு பணி என்ன என்பதும், தாவரங்களில் குளூட்டமேட் வாங்கி மரபணுக்களின் வேலை என்ன என்பதும்தான். இதன் மூலம் மாதிரி தாவரமான Arabidopsisசின் முதல் மரபணு பட்டியலும் அமைக்கப்பட்டுள்ளது.

நகராத தாவரத்தின் இனப்பெருக்கம் கொஞ்சம் சிக்கலானது. இதன் மகரந்தத் துகள்கள்தான், ஆண் விந்தணுக்களுக்கு சமமானவை. இவற்றை, பெண் உறுப்பான சூலக முடிக்குக் கொண்டு சென்றால்தான், மகரந்த சேர்க்கை நடந்து, இனப்பெருக்கம் நடைபெற முடியும். இப்போதைய கண்டுபிடிப்பின் மூலம், குளூட்டமேட் வாங்கிகள் சரியாக செயல்படாவிட்டால், மகரந்தத் துகள்களின் பகுதி மலடுக்கு காரணமாகிவிடும் என்பதும் அறியப்பட்டுள்ளது. மேலும் D சீரின்தான், குளூட்டமேட் வாங்கிகளை தூண்டி கால்சியம் அயனி கால்வாயை மகரந்தத் தாள்களின் மேல் ஓட வைக்கிறது. த சீரின் சரியாக செயல்படவில்லை என்றால், மகரந்தத் தாள் உருவாக்கத்தில் குறைபாடு உண்டாகும்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக நமக்கு ஒரு உண்மை புரிய வந்துள்ளது. தாவர, விலங்குகளின் வளர்ச்சியில் மரபணுக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பணி புரிகின்றன. அதைவிட இன்றியைமையாத, பரிணாமத்தின் சாவியும் கிடைத்துள்ளது எனலாம்.

பின்தங்கிய கிராமத்துபெண்கள் கொழும்பில் கட்டாய பாலியல் தொழில்

Posted: 11 Jun 2012 12:48 AM PDT

பின்தங்கிய கிராமப் புறங்களிலுள்ள இளம் பெண்களை ஏமாற்றி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்பிற்கு அழைத்துவந்து, அச்சுறுத்தி பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சிறுவர், மகளீர் பாதுகாப்பு மேம்பாட்டு அதிகார சபைக்குக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதுகுறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவந்து பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற இளம் பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவந்த நபர், கொழும்பில் தம்மை மற்றுமொரு நபரிடம் விற்பனை செய்துவிட்டதாக அந்த இளம் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் கிழக்குப் பிரதேசத்திலிருந்து பலவந்தமாக அழைத்துவந்த சில பெண்களும் சிறைவைக்கப்பட்டு பாலியல் தொழிலியல் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்த இளம் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அவுத்துபோட்டு நடிக்க அமலாபால் ரெடி : பார்க்க நீங்க ரெடியா?

Posted: 10 Jun 2012 12:39 PM PDT

அமலா பால் தமிழில் அறிமுகமான படமே, கிட்டத்தட்ட பலான படம் ரேஞ்சுக்குதான் இருந்தது.ஆனாலும் அவர் அடுத்து நடித்த மைனாவில் குடும்பப்பாங்காக வந்து, முதல் பட பலான பட முத்திரையை துடைத்துக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார்.

இப்போதைக்கு அவர் மலையாளம், தெலுங்குப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் வரும் அனைத்துக் கதைகளையும் 'சரியில்லை' என்று கூறி தவிர்த்து வருகிறார். ஆனால் இப்போது என்ன மனமாற்றமோ… எல்லாவிதமான வேடங்களையும் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமலாபால் கூறுகையில், "சினிமா என்று வந்த பிறகு கவர்ச்சி தவறல்ல, என்னிடம் கதை சொல்லும்போது நீச்சல் உடையில் ஒரு காட்சி இருக்கிறது. ஓகேவா என்கிறார்கள். எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை. கதை, காட்சிக்கு அவசியம் என்றால் நீச்சல் உடையில் நடிப்பேன். தமிழில் உண்மையிலேயே நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. அமைந்தால் நிச்சயம் என் கால்ஷீட் தமிழ் படங்களுக்குத்தான்," என்றார்.

இத்தாலி டாக்டரின் காமலீலைகள் அம்பலம்..! (அதிர்ச்சி படங்கள்)

Posted: 10 Jun 2012 12:25 PM PDT

இத்தாலியில், உள்ள மருத்துவர் ஒருவர் தம்மிடம் வரும், பெண் நோயாளிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார். பல நாள் கள்வன் ஒரு நாள் மாட்டுவான் என்று சொல்லுவார்கள் அல்லவா ? இதேபோல இத்தாலியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, பெண் நோயாளியாக நடிக்க ஒருவரை அனுப்பியுள்ளது.





அத்தோடு மட்டும் நின்றுவிடாது அப்பெண்ணிடம் சிறிய ரக கமராவையும் கொடுத்துவிட்டுள்ளார்கள். வழமைபோல நோயாளியை பரிசோதிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் கூறி அவரை படுக்கவைத்துள்ளார். அப்பெண்ணின் மேலாடைகளை களற்றி பின்னர், மார்பகங்களில் முத்தமிட முனைந்துள்ளார். இதனை அடுத்து அப்பெண் அவரிடம் இருந்து தப்ப முயற்சித்துள்ளார்.

அவர் கொண்டுசென்ற சிறியரகக் கமராவை, அவர் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தவேளை தான் அப்பெண் ஒரு நோயாளி அல்ல ஒரு நிருபர் என்பது டாக்டருக்குத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட டாக்டர் கடுங்கோபம் கொண்டு, அப்பெண்ணையும், தொலைக்காட்சிக்கு புகைப்படம் எடுக்கும் நபர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனையும் அந் நிருபர்கள் படம் எடுக்கத் தவறவில்லை. இச் செய்தி வெளியானதால் இத்தாலியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட மருத்துவரை வேலையில் இருந்து நீக்கவேண்டும் என பெண்கள் அமைப்பினர் போர்கொடி தூக்கியுள்ளனர்.

சிறுமியர் இல்லத்தில் நடந்த நிர்வாண படம்பிடிப்பு : அதிர்ச்சி ரிப்போட்

Posted: 10 Jun 2012 12:10 PM PDT

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தம்மை நிர்வாணமாக படம்பிடிப்பதாக இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள சிறுமியர் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாரத் விகாஸ் சாங் என்ற அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நடத்தப்படும் மேற்படி சிறுமியர் இல்லமானது கடந்த மே மாதம் தேசிய சிறுவர் பராமரிப்பு ஆணைக்குழுவினால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது இந்த இல்லத்திலிருந்து 10-15 வயதுக்குட்பட்ட 90 சிறுமிகளை ஆணைக்குழுவினர் மீட்டுள்ளனர்.

மேற்படி இல்லத்தின் உரிமையாளரான ஜஸ்வன்தி தேவி மீது, கடத்தல், சித்திரவதை, கொத்தடிமையாக சிறார்களை பயன்படுத்தியுள்ளமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மும்மையிலிருந்து வந்த வெளிநாட்டவர்களால் தாம் நிர்வாணகோலத்தில் படம்பிடிக்கப்பட்டதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரிடம், அந்த இல்லத்தில் இருந்த சிறுமிகள் தெரிவித்துள்ளனனர்.

வெளிநாட்டவர்கள் வந்தால் ஜஸ்வந்தியின் மருமகன் அறிவிப்பார். அவ்விருந்தினர்கள் நன்றாக உபசரிக்கப்படுவர் என அச்சிறுமிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

'இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்களாக உள்ளன. எப்படியிருப்பினும் இவ்விடயம் தொடர்பில் தலையிடுவதற்கு எமக்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும்' என பொலிஸ் அதிகாரியான டார்னா யாதவ் தெரிவித்துள்ளார்.

வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இவ்விபரங்களை வெளியிட முடியும் என விசாரணைக் குழுவின் அதிகாரிகளில் ஒருவரான உத்;சவ் சிங் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்துக்கு வெளியே சுயாதீன விசாரணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால்தான் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பொம்மையை ஆயுதமுனையில் கொள்ளையடித்த நபர்

Posted: 10 Jun 2012 11:57 AM PDT

ஆடம்பர பாலியல் பொம்மைகள் விற்பனை கடையொன்றில் புகுந்த ஆயுதபாணி கொள்ளையன் ஒருவன், 18 கரட் தங்கமுலாம் பூசப்பட்ட பாலியல் பொம்மையொன்றை திருடி சென்ற சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது.

இந்நபர் பிரேஸில் தலைநகர் பிரெஸிலியாவிலுள்ள கடைக்கு சென்று கடையின் ஊழியரை கட்டி வைத்துவிட்டு, காட்சிப்பெட்டியில் வைத்திருந்த பாலியல் பொம்மையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவீடனில் தயாரிக்கப்பட்ட இந்த பாலியல் பொம்மை, சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியானது. இந்த பொம்மையை தவிர வேறு எதனையும் அக்கடையில் மேற்படி கொள்ளையன் திருடவில்லை.

எனினும், அப்பாலியல் சாதனத்திற்கு மின்னேற்றும் கருவியை அவன் எடுத்துச் செல்லவில்லை என கடை உரிமையாளர் வனேஸா பால்டினி தெரிவித்துள்ளார்.

'அதை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அதை அவனது கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் ஆபாசமாகப் பேசிய யாழ் இளைஞர்கள் நையப்புடைப்பு

Posted: 10 Jun 2012 11:54 AM PDT

கிளிநொச்சி, பன்னங்கடி, இரணைமடு வாய்க்கால் பகுதியில் யாழ் இளைஞர்களுக்கும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரணைமடு வாய்க்கால் பகுதிக்குச் சென்று மது அருந்துதல், அப்பகுதியால் செல்லும் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசுதல். பெண்களிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தல் என கிராம மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்த மக்கள் இன்று யாழ் இளைஞர்களிடம் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் வாய்க்கால் பகுதியில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு மறுத்த இளைஞர்கள் தொடர்ச்சியாக அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக வாய்த் தகராறு ஏட்பட்டு கைலப்பாக முடிவடைந்துள்ளது.

பன்னங்கடி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து யாழ் இளைஞர்களை தாக்கியுள்ளனர். இன்றைய தினம் யாழில் இருந்து 7 இளைஞர்கள் இரணைமடு வாய்க்கால் பகுதியில் வந்து மது அருந்தி விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

புலிகளின் ஆவிகளுக்கு உயிர் கொடுக்க எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன!

Posted: 10 Jun 2012 11:48 AM PDT

சர்வதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆவிகளுக்கு உயிர் கொடு க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக ஊடகத்துறை அமைச்சரும், அமைச் சரவைப் பேச்சாளருமான யஹகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பயங்கர வாதத்தை தோற்கடிக்கும் வேலைத் திட்டத்தில் பாரிய இராணுவ வெற்றியை இராணுவத்தினர் தாய் நாட்டுக்கு பெற்றுக் கொடுத்த சந்தர்ப்பத்தில் எவருக்கும் யுத்தம் செய்ய முடியும் எனக் கூறி தாய் நாட்டுக்கு துரோகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல, நாடாளுமன்ற தலைமை ஆசனத்திற்குக் கூட மதிப்பளிக்காது தற்போது புலிகளின் நிழல்களின் சப் பாத்துக்களை நக்கும் செயற்பாடுக ளை முன்னெடுத்து வருவதாக ஊடக த்துறை அமைச்சரும் அமைச்சர வைப் பேச்சாளருமான யஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப் பில் பேரில் அந்த நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதியும் ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் சிலர் மற்றும் பொதுநலவாயத்தின் தலைவர் ஒரு வரும் அந்த நாட்டின் வர்த்தக சமூக த்தினர் மத்தியில் உரையாற்றவிருந் தனர்.

இந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்ட மை குறித்து, முன்னாள் பிரதி வெளி விவகார அமைச்சரான லக்ஷ்மன் கிரியயல்ல நேற்று முன்தினம் நாடா ளுமன்றத்தில் செயற்பட்ட விதம் ஏற் றுக்கொள்ள முடியாதது. அந்தக் கூட் டம் இரத்துச் செய்யப்பட்டமை தொட ர்பான பொறுப்பை பிரித்தானிய அர சாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது நாடாளும ன்ற உறுப்பினர் கிரியயல்ல, விடுத லைப்புலிகளின் கடைக்குச் செல்வ தை இன்னும் நிறுத்தவில்லை.விடு தலைப்புலிகள் அமைப்பு பிரித்தானி யாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வேறு நாடுகளின் தலைவர்களுக்கு தடையேற்படுத்தி அந்த பயங்கரவாத அமைப்பினர் செயற்படுவார்களா யின் அதற்கான பொறுப்பை அந்த நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெளி விவகாரம் தொட்பில் முக்கியமான செற்பாடுகளை முன்னெடுத்துவரும் கிரியயல்ல விடுதலைப் புலிகளின் விருப்பு வெறுப்புக்களை அறியாமல் செயற்படவில்லை. அவருள் இருப் பது முழுமையான தாய் நாட்டுக்கு எதிரான துரோகத்தனமே.நாட்டில் பய ங்கரவாதத்தை ஒழித்து 3 வருடங்கள் கழிந்துள்ள போதிலும் இன்னும் அதனை பொறுத்துக் கொள்ள முடி யாதவர்களாக செயற்படும் எதிர்க் கட்சியை சேர்ந்த இவ்வாறான நபர் கள் சர்வதேசத்தில் உள்ள விடுத லைப்புலிகளின் ஆவிகளுக்கு உயிர் கொடுக்க முயற்சித்து வருவது கவ லைக்குரியது எனவும் அமைச்சர் ரம் புக்வெல கூறியுள்ளார்

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க.. நோய் வரும்!

Posted: 10 Jun 2012 11:46 AM PDT

உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக் கொடுத்து தயார் படுத்துகின்றனர். அதேபோல் இதயத்திற்கு இதம் தரும் உணவுகள் எல்லாம் தாம்பத்ய உறவுக்கு ஏற்ற நலம் தரும் உணவுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள். இதோ அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னென்ன சாப்பிடலாம்

செக்ஸ் குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் சென்று லட்சக்கணக்கில் அழவேண்டாம் வீட்டில் சரியான சத்தான உணவுகளை சமைத்து உண்டாலே போது தம்பதியரிடையே தொடர் வெற்றிதான் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள்.

தம்பதியரிடையே தடுமாற்றமில்லாத தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை அமையும் என்கின்றனர் நிபுணர்கள். அசைவத்தில் மட்டன், சிக்கன், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், சைவத்தில் பீன்ஸ், கீரைகள், ஸ்ட்ராபெர்ரீஸ், தர்பூசணி, முருங்கைக்காய், வெங்காயம் போன்ற உடலுக்கு உற்சாகம் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சாப்பிட உடனே ஆரம்பிக்காதீங்க

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாகும். இதனால் மூட்டு வலி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே உணவு உட்கொண்ட பின்னர் சிவக்க சிவக்க வெற்றிலை போட்டு தங்களை தயார் படுத்திக்கொள்ளலாம். வெற்றிலை பிடிக்காதவர்கள் பாதம் பால், அல்லது உற்சாகம் தரும் மசாலா பால் அருந்தலாம்.

பொறுமை அவசியம்

தாம்பத்ய உறவின் போது தம்பதியர் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதான் அது இனிய சங்கீதமாக மாறி சந்தோசத்தைத் தரும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எதற்கோ ஆசைப்பட்டு
எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எதற்கும் எல்லை உண்டு

தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அதனை நீடிக்க விடாமல் பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. அதேபோல் வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

இரு விழிகளும் அற்ற நிலையில் உயிர் வாழும் குழந்தை (Photos In)

Posted: 10 Jun 2012 11:43 AM PDT

சீனாவில் இரு விழிகளும் அற்ற நிலையில் எட்டு மாத குழந்தை ஒன்று வளர்ந்து வருகின்றது. முகத்திற்கு ஒளியை காண்பிக்கும் போது அக்குழந்தை சிரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அக்குழந்தைக்கு இடது கண் இருக்கலாமென நம்பப்படுகின்றது.

குழந்தையை பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, குழந்தைக்கு இடது புற கண் இருப்பதாகவும் ஆனால் அது தோல்பகுதியினால் மறைக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் கண்ணில் கண்வில்லை இல்லையென எனவும், இக்குழந்தை தற்போது சத்திர சிகிச்சைக்கு பொறுத்தமற்றது எனவும், 16 வயதை அடைந்த பின்னர் செயற்கை கண் பொருத்துவது சிறப்பானதாக அமையுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், அவன் ஒளியை பார்க்க ஆவலாக உள்ளான். பிரார்த்தனையில் ஈடுபட்டால் அவனால் ஒளியை பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் நாங்கள் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

சவப்பெட்டியிலிருந்து எழுந்து வந்து தண்ணீர் கேட்ட சிறுவன்! (Video)

Posted: 10 Jun 2012 11:40 AM PDT

இறந்த சிறுவன் ஒருவன் சடங்குகளுக்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமயம் அதனைத் திறந்து கொண்டு எழுந்து வந்து தனது இறப்புப் பற்றிய தகவல்களை வெளியிட்டதுடன் தாகத்திற்காக தண்ணீர் கேட்ட சம்பவமானது பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெல்வின் சான்டஸ் எனும் இரண்டே வயதான சிறுவனே இந்த ஆச்சரியத்துடன் கூடிய அதிசய சம்பத்தை நிகழ்த்தியுள்னான். குறித்த சிறுவன் இதய நோய் காரணமாக சுவாசிப்பதற்கு கடினமான நிலையில் சிகிச்சைகள் எதுவும் பயனளிக்காத நிலையிலேயே மரணமடைந்திருந்தான்.

தற்போது இச்சிறுவன் மீள் பரிசோதனைகளுக்காக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

வினொதங்கள் தொடரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™