Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Posted: 15 Sep 2017 09:18 AM PDT

புதுடில்லி: பள்ளி வளாகத்தில், இரண்டாம் வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்டசம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு,'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டில்லியை அடுத்துள்ள, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு மாணவன், கழிப்பறையில் கழுத்துஅறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.மாணவனிடம் தவறாக நடக்க முயன்றதுடன், கொலை செய்ததாக, பள்ளியின் வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த ...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

Posted: 15 Sep 2017 10:21 AM PDT

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையால், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவாதம் அளித்தன. நேற்று மதியம், 2:00 மணி முதல் வேலைக்குத் திரும்பவும், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ம் தேதி ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின், காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்தேன். செப்., 7ல் நீதிபதிகள், 'வேலை ...

'மகனை துன்புறுத்தாதீங்க': ‛மாஜி' அமைச்சர் ஆவேசம்

Posted: 15 Sep 2017 10:28 AM PDT

புதுடில்லி: ''ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள், என்னிடம் விசாரணை நடத்த வேண்டும்; மாறாக, என் மகன், கார்த்தியை துன்புறுத்தக் கூடாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, மத்திய அமைச்சரவையில், 2006ல், சிதம்பரம், நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் மேக்சிஸ் நிறுவன ஒப்பந்தம் தொடர்பாக, அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது.இதில், விதிமீறல் நடந்து இருப்பதாக, சி.பி.ஐ., தரப்பில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு தொடர்பு இருப்பதாக, ...

தயார் நிலையில் ராணுவம்! நிர்மலா சீதாராமன் உறுதி

Posted: 15 Sep 2017 10:46 AM PDT

வாரணாசி:''நாட்டின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன; எந்த சவாலையும் எதிர்கொள்ள, ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இந்தியாவை துாய்மை படுத்தும் திட்டத்தை, பிரதமர், நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். இதில், ராணுவமும் பங்கேற்று வருகிறது.நாட்டில் உள்ள ...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஐகோர்ட் கேள்வி

Posted: 15 Sep 2017 10:53 AM PDT

சென்னை: 'அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டதா; இல்லையென்றால், எப்போது செலுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். ஆசிரியர்களின் சம்பள விகிதம், அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும், நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் பற்றி ...

ரிசார்ட்டில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் அணி எம்.எல்.ஏ., விளக்கம்

Posted: 15 Sep 2017 10:57 AM PDT

குடகு: ''ஆசிரியர் பணியையும், எம்.எல்.ஏ.,க்கள் பணியையும் ஒப்பிடமுடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்;நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராடவில்லை. ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காககூடியுள்ளோம்,'' என, தினகரன் அணி,எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

கர்நாடகாவின் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை, 'பேடிங்டன்' ரிசார்ட்டில் உள்ள தினகரன் அணி, எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள், 19 எம்.எல்.ஏ.,க்களும், ஒற்றுமையாக இருக்கிறோம். அரசு நினைத்தால்,என்ன செய்யும். அதிகாரம் வைத்துள்ளஅரசு, எங்கள் ஒற்றுமையை குலைக்கநினைக்கும்; ஆனால், ...

சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

Posted: 15 Sep 2017 10:59 AM PDT

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்வது குறித்து, சபாநாயகர் தனபால், சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், ஆக., 22ல், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர்.அதன்பின், அவர்களை தினகரன் தரப்பினர், புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். தற்போது, கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்த, 19 , ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Posted: 15 Sep 2017 11:04 AM PDT

புதுடில்லி: பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையை தினசரி மாற்றி அமைத்துக் கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்து மூன்று மாதங்கள் முடியும் நிலையில், மூன்றாண்டுகளில் இல்லாத வகையில், இவற்றின் விலை உயர்ந்துள்ளது.

இதனால், விலையை, தினசரி மாற்றி அமைக்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோருகின்றன. ஆனால், பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன?பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக முன்னணி அரசு, 2014, மே மாதம் பதவியேற்றது. அந்தாண்டு மார்ச், 1ம் தேதியன்று, டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73.16 ரூபாயாக ...

'ஆதார்' எண்ணுடன் ஓட்டுனர் உரிமம் இணைப்பு

Posted: 15 Sep 2017 11:07 AM PDT

சண்டிகர்: வங்கி கணக்கு, பான் கார்டு ஆகிய வற்றை தொடர்ந்து, ஓட்டுனர் உரிமத்தையும், ஆதார் எண்ணுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது

ஹரியானாவில், 'டிஜிட்டல் ஹரியானா' மாநாடு, நேற்றுநடந்தது.சண்டிகரில் நடந்த இந்த மாநாட்டில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்கூறியதாவது: ஓட்டுனர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க, திட்டமிட்டு வருகிறோம். இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர், நிதின் கட்கரியுடன் பேசியுள்ளேன்.பண மோசடிகளை தடுப்பதற்காகவே, பான்கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன்ஆதார் எண்ணை இணைக்க ...

‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது': நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா

Posted: 15 Sep 2017 12:06 PM PDT

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் நிறுவனர் தீபா, அவரது கணவன் மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மக்களுக்காகவே...
நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மரியாதை செலுத்திய தீபா, பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும். நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது.
ஆட்சி ...

கோவையில் கூத்து: ஆட்டோ டிரைவருக்கு 'ஹெல்மெட்' அபராதம்

Posted: 15 Sep 2017 12:59 PM PDT

கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் 'ஹெல்மெட்' அணியவில்லை என்று, எஸ்.ஐ., அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாகன சோதனை:
கோவை, ஆலாந்துறையை சேர்ந்தவர் கருணாகரன், 40. இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த, 13ம் தேதி மாலை சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காருண்யா நகர் போலீஸ் எஸ்.ஐ., சங்கரநாராயணன், ஆட்டோவை நிறுத்தினார். பின், கருணாகரனிடம் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி ...

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: இந்தியா - பாக்., பேச்சு

Posted: 15 Sep 2017 01:59 PM PDT

வாஷிங்டன்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தியா - பாக், இடையே, 1960ல், உலக வங்கி உதவியுடன், சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரைப் பயன்படுத்த, இரு நாடுகளுக்கும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பிரச்னை :
ஜீலம் மற்றும் செனாப் ஆற்றுப் பகுதியில். 330 மெகாவாட் மின் உற்பத்திக்கான கிஷன்கங்கா, 850 மெகாவாட் மின் உற்பத்திக்கான ராட்லே, ஆகிய நீர்மின் நிலையங்களை அமைக்க, இந்தியா திட்டமிட்டது. அதற்கு பாக்., ...

மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் சாலையில் தவித்த தாய்

Posted: 15 Sep 2017 03:20 PM PDT

ஐதராபாத்: தெலுங்கானாவில், மகனின் சடலத்துடன், இரவு முழுவதும், சாலையில் ஒரு பெண் தவித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு:
தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் வசித்து வரும், ஈஸ்வரம்மா என்பவரின், 10 வயது மகன், டெங்கு காய்ச்சலால், மருத்துவமனையில் இறந்தார். ஈஸ்வரம்மா, மகனின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து, வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆனால், வீட்டின் உரிமையாளர், ஜெகதீஷ் குப்தா, உள்ளே அனுமதிக்கவில்லை.
அனுமதியில்லை:
வீட்டின் ஒரு அறை மட்டும், ஈஸ்வரம்மாவுக்கு வாடகை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™