Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு பலத்த மழை... எச்சரிக்கை!

Posted: 30 Aug 2017 08:56 AM PDT

புதுடில்லி: தமிழகம், கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட, நாட்டின், 12 மாநிலங் களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் என, நாடு முழுவதும், 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பிருப்பதாக, இந்திய ...

அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த கவர்னர்... மறுப்பு

Posted: 30 Aug 2017 09:43 AM PDT

'நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட முடியாது' என,கவர்னர் வித்யாசாகர் ராவ், திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ஏமாற்றமடைந்த எதிர்க் கட்சிகள், இன்று டில்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளன.

முன்னாள் முதல்வர், ஜெ., இறப்புக்குப் பின், மூன்றணிகளாக இருந்த, அ.தி.மு.க., இப்போது, பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக உள்ளது. ஆட்சியைப் பிடிக்க, தினகரன், தீவிரமாக முயன்று வருகிறார். 'முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல். ஏ.,க்கள், சமீபத்தில், கவர்னரிடம் கடிதம் அளித்தனர்.அதையடுத்து, ...

எம்.ஜி.ஆரின் அறக்கட்டளை சொத்தை நிர்வகிக்க ஓய்வு நீதிபதியை நியமித்தது செல்லும்: ஐகோர்ட்

Posted: 30 Aug 2017 10:27 AM PDT

சென்னை:'மறைந்த, எம்.ஜி.ஆரின் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமனை நியமித்தது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறில்,100 கிரவுண்டில் சத்யா ஸ்டூடியோ; ராமாவரத்தில்,ஏழு ஏக்கரில் தோட்டம்;வடபழனியில், 126 கிரவுண்டில் சத்யா தோட்டம்; ஆலந்துார் சந்தையில் கடைகள் என, எம்.ஜி.ஆரின் சொத்துகளின் தற்போதைய மதிப்பு, பல கோடிகளை தாண்டும். எம்.ஜி.ஆர்., உயிருடன் இருக்கும் போது, உயில் எழுதி வைத்தார்.உயிலில் உள்ள சொத்துகளை நிர்வகிக்க, மூத்த வழக்கறிஞர், என்.சி.ராகவாச்சாரியை நியமித்தார். எம்.ஜி.ஆர்., ...

'ஐகோர்ட் என்ன அரசியல் மேடையா'

Posted: 30 Aug 2017 10:30 AM PDT

சென்னை:அரசியல் மேடையாக நீதிமன்றத்தை மாற்ற, தி.மு.க., முயற்சித்ததாக, சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தி.மு.க., சட்டத்துறை செயலர், கிரிராஜன் தாக்கல் செய்த மனு:சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகில் உள்ள, கச்சராயன் ஏரி துார்வாரும் பணியை ஆய்வு செய்ய, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் சென்றார். கோவை அருகில், கனியூர் சுங்கச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மனித சங்கிலி
'நீட்' தேர்வுக்கு எதிரான, மனித சங்கிலி போராட் டத்தில் கலந்து கொள்ள செல்வதால், தடுத்து நிறுத்தப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர். மனித சங்கிலி ...

துரோக சிந்தனை இல்லாதவரை முதல்வராக்குவோம்: தினகரன்

Posted: 30 Aug 2017 10:33 AM PDT

சென்னை:''துரோக சிந்தனை இல்லாத மனிதரை, முதல்வராக்க வேண்டும் என்பது தான், எங்களது விருப்பம்,'' என, தினகரன் கூறினார்.

சென்னை, அடையாறில் உள்ள வீட்டில், தினகரன் அளித்த பேட்டி:சபாநாயகர், 'நோட்டீஸ்'சுக்கு, 19 எம்.எல்.ஏ., க்களும் பதில் அளிப்பர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தவறான தகவல்களை மத்திய அரசுக்கு அளித்து, மோசடியாக செயல்படு கின்றனர்.எம்.எல்.ஏ.,க்களை, அடைத்து வைத்திருப் பதாக கூறுகின்றனர். அன்றைக்கு பன்னீர்செல்வம், 'எனக்கு ஆதரவாக, 86பேர் இருக்கின்றனர்; அவர்களை அடைத்து வைத்திருக்கின்றனர்; திறந்து விட்டால் வந்து விடுவர்' ...

டில்லியில் தமிழக மந்திரிகள் ஆலோசனை; அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் எப்போது

Posted: 30 Aug 2017 10:38 AM PDT

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், நம்பிக்கை ஓட்டெடுப்பு, பொதுக்குழு என மூன்று விஷயங் களும், ஒரே நேர்கோட்டில் வந்து நிற்பதால், இவற்றை எளிதாக கையாளுவது குறித்த அறிவுரைகளை, தமிழக அமைச்சர்கள், டில்லியில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டா ரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் மனு அளித்து விட்டு, புதுச்சேரி புறப்பட்டுச் சென்றதிலிருந்தே, முதல்வர் பழனிசாமி தலை மையிலான அரசு, ஆட்டம் காணத் துவங்கி விட்டது. இந்த திடீர் திருப்பத்தை, ...

துண்டு போட்டு விலை பேசும் வியாபாரம்; கவர்னர் மீது ஸ்டாலின் கடும் கோபம்

Posted: 30 Aug 2017 10:42 AM PDT

சென்னை:''துண்டு போட்டு வியாபாரம் செய்வது போல, கவர்னர் செயல்பட்டிருப்பது, ஜனநாயகத்திற்கு இழுக்கு,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:'உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல முடியாது' என, கவர்னர் கூறியது பற்றி?பன்னீர்செல்வம், 10 எம்.எல்.ஏ.,க்களை வைத்து, சட்டசபையை கூட்ட சொன்னபோது, அது உட்கட்சி விவகாரம் என்பது, அவருக்கு தெரியவில்லை.கவர்னர், அரசியல் செய்கிறார் என நினைக்கிறீர்களா?நிச்சயமாக. மத்திய அரசு அதிகாரத்தைப் பயன் படுத்தி, வருமான வரித்துறை, ...

ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு

Posted: 30 Aug 2017 10:48 AM PDT

வாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து, போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங் களின் நகல் பெறவும், http:/eservices.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில், இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர், இழப்பீடு தொகையை பெறவும், ...

இன்றைய அரசியல்வாதிகள் கஜானா திருடர்கள்: கோவையில் நடிகர் கமல் ஆவேசம்

Posted: 30 Aug 2017 10:54 AM PDT

கோவை:''மக்கள் கொடு, கொடு என கேட்ட தால், கஜானாவில் பெரும் பங்கை அரசியல் வாதிகள் திருடிவிட்டனர். இந்த அரசியல் சூழல் தொடர்வது அவமானம். இதை மாற்ற வேண்டி யது நமது கடமை,'' என, நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

கோவை ஈச்சனாரியில், தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:இந்த திருமணம் சாதி, மொழி கடந்த திருமண மாகும். இவர்கள் (ரசிகர்கள்), 37 ஆண்டுகளாக ரசிகர்களாக உள்ளனர். இதில், 30 ஆண்டுகள் நற்பணிகளை செய்து வருகின்றனர். அன்று இதை கண்டு வியந்தவர்கள், இன்று, 'ரத்த தானம், கண் ...

'தாவூத்துக்கு பாக்., அடைக்கலம்': இந்தியா மீண்டும் குற்றச்சாட்டு

Posted: 30 Aug 2017 11:47 AM PDT

புதுடில்லி: நிழல் உலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
அடைக்கலம்:
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, தாவூத் இப்ராஹிம், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். 1993ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு, மூளையாக செயல்பட்டான். இதன் பின், தலைமறைவான தாவூத், வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறான். அவனுக்கு, பாகிஸ்தான் அரசு அடைக்கலம் அளித்திருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார். எனினும், பாக்., ...

57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு

Posted: 30 Aug 2017 01:00 PM PDT

தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 728 பேர், அரசு வேலைவாய்ப்பு கேட்டு, பதிவு செய்துள்ளனர். 18 - 23 வயது வரையிலான பிரிவில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 681 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், 24 - 35 வயதுக்கு உட்பட்ட, 31 லட்சத்து, 6 ஆயிரத்து, 154 பேர்; 35 - 56 வயதுக்கு உட்பட்ட, 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 837 பேர், அரசு வேலை ...

டில்லி துணை நிலை கவர்னரை சந்திக்க 7 மணி நேரம் காத்திருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்

Posted: 30 Aug 2017 01:54 PM PDT

டில்லி: டில்லியில் மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கான கோப்புகளின் கையெழுத்திட தாமதித்ததால் துணை நிலைகவர்னரை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 7 மணிநேரம் காத்திருந்தனர்.டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிநடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டில்லிவாசிகளுக்கு முழு சுகாதாரத்தினை அளித்திடும் வகையில் மொகல்லா கிளினிக் என்ற பெயரில் பொது மருத்துவமனை கட்டுவதற்கான திட்டம் துவங்கப்பட்டு அதற்கான ஒப்புதலை அளிக்கும் கோப்புகள் துணை கவர்னர் அனில் பைஜால் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் துணை நிலை கவர்னர் ஒப்புதல் வழங்குவதில் ...

வெங்காய தட்டுப்பாடு நம்ம ஊருக்கு வராது!

Posted: 30 Aug 2017 03:01 PM PDT

'தமிழகத்தில், வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை' என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிரா, பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

ஆண்டுதோறும், 1.94 கோடி டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, மஹாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், மழையால் வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், டில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், வெங்காயம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தட்டுப்பாட்டை சமாளிக்க, பதுக்கலை கட்டுப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™