Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க.,வை கைப்பற்ற அதிரடி வியூகம் பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்கிறார் தினகரன்!

Posted: 15 Jul 2017 06:26 AM PDT

அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பொதுக்குழு உறுப்பி னர்களை, தன் பக்கம் இழுக்கும் வேலையில், தினகரன் ஈடுபட்டுள்ளார். அதை முறியடிக்க, முதல்வர் அணி முடிவு செய்துள்ளது.

சசிகலா சிறைக்கு சென்ற போது, அ.தி.மு.க., தன் குடும்பத்தின் கட்டுப்பாட்டை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக, அக்கா மகன் தினகரனை, அ.தி.மு.க., துணைபொது செயல ராக நியமித்தார். அவரை, சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் ஏற்றனர். ஆனால், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட களம் இறங்கியதை, முதல்வர் மற்றும் கொங்கு மண்டல அமைச்சர்கள் விரும்பவில்லை.தேர்தலில் வெற்றி பெற்றதும், முதல்வராக தினகரன் முடிவு ...

மலர்ந்தது புது உறவு: கழகங்கள் இடையே இனி கலகமில்லை

Posted: 15 Jul 2017 06:30 AM PDT

சட்டசபையில், தி.மு.க.,வினருடன் அமைச்சர்கள் நெருக்கம் காட்டுவதும், சிரித்து உறவாடுவதும், இரு கட்சி தொண்டர்களிடமும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., இருந்த வரை, சட்டசபையில், அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும், எலியும் பூனையுமாக இருப்பர். சட்டசபையில், ஜெ., இருக்கும் போது, தி.மு.க.,வினரை பார்த்து, ஆளும் கட்சியினர் புன்னகை புரிய மாட்டார்கள்.
கடுமையாக விமர்சிப்பர்
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேச துவங்கினாலே, அமைச்சர்கள் அனைவரும் உஷாராகி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், உடனுக்குடன் பதில் அளிப்பர். தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது ...

'பிட்காயின்' டிஜிட்டல் பண பரிவர்த்தனையை தடை செய்ய...ஆலோசனை!

Posted: 15 Jul 2017 07:04 AM PDT

புதுடில்லி:'பிட்காயின்' என்கிற 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை மூலம், பயங்கரவாத அமைப்பு களுக்கு நிதி வழங்கப்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிட்காயின் மூலம் பரிவர்த்தனை செய்வதை, முறைப்படுத் தலாமா அல்லது, தடை செய்யலாமா என, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

'பிட்காயின்' என்பது, கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். பிட்காயின் தொழில்நுட்பம் மூலம், ஒருவர் மற்றவருக்கு நேரடியாக பணம் அனுப்ப முடியும். அனுப்பியது யார் என்றும் தெரியாது, பெறுபவர் யார் என்றும் தெரியாது. இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பிளாக் செயின். இதில் ...

சமாஜ்வாதியில் முலாயம் - அகிலேஷ் ஆதரவாளர்கள்... குழப்பம்!

Posted: 15 Jul 2017 09:51 AM PDT

லக்னோ:ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால், கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டால், இருவரது ஆதரவாளர் களும் தனித் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
விரிசல் அதிகரிப்பு
மாநில சட்டசபை தேர்தலின் போது, ...

நாட்டின் 14 வது ஜனாதிபதிக்கான தேர்தல்... நாளை

Posted: 15 Jul 2017 09:58 AM PDT

நாட்டின், ௧௪வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், நாளை நடைபெற உள்ளது; இதில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர். பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம், வரும், ௨௪ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய, நாளை தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு, பா.ஜ.,தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில், ...

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன வீடியோ வெளியானதால் பரபரப்பு

Posted: 15 Jul 2017 10:43 AM PDT

பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள், நேற்று, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, கடந்த, 10ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கப் பட்ட சிறப்பு சமையல் அறை, முத்திரை தாள் மோசடி குற்றவாளி, அப்துல் கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதி, போதை பொருளான கஞ்சா கொண்டு வருவது போன்ற முறைகேடு களை கண்டுபிடித்தார்.இது தொடர்பாக, கைதிகளிடம் விசாரித்தார். கஞ்சா, சூதாட்ட அட்டைகள் ...

நடிகர் கமல் மீது வழக்கு: அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை

Posted: 15 Jul 2017 10:45 AM PDT

கோவை:''நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து அரசை ஆதாரமின்றி விமர்சித்து வருகிறார். இது தொடர்ந்தால், தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும்,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார்.

கோவை, 'கொடிசியா' வளாகத்தில் நடந்து வரும், 'அக்ரி இன்டெக் - 2017' கண்காட்சியை அமைச்சர் வேலுமணி நேற்று பார்வையிட்டார். பின், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ''தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து , நடிகர் கமல் காழ்ப்புணர்வு காரணமாக, விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள ...

ரூ.6 கோடிக்கு பன்னீர் நிலத்தை வாங்க கிராமத்தினர் முடிவு

Posted: 15 Jul 2017 10:50 AM PDT

பெரியகுளம்:தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனைவிக்கு சொந்தமான 40 ஏக்கர் விளைநிலத்தை ரூ.௬ கோடிக்கு வாங்க கிராம கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சுமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட மூன்று கிணறுகளும் வறண்டு விட்டதால், ஒன்றரை மாதமாக குடிநீர் தட்டுப் பாடு நிலவுகிறது.ஊராட்சி குடிநீர் கிணறுக்கு அருகில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழமாக கிணறு வெட்டியதால், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு வறண்டு போனதாக புகார் ...

'பிக் பாஸ்' விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி

Posted: 15 Jul 2017 10:55 AM PDT

தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப் பாகும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் காய்த்ரி ரகுராம் தெரி வித்த கருத்தால், தமிழக பா.ஜ., நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் துவங்கி, பாலிவுட்டில் கோலோச்சி, தமிழுக்கு வந்துள்ளது, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. இதில், பிரபலங்களை, வீட்டுக்குள், 100 நாட்கள் பூட்டி வைத்து, உளவியல் ரீதியாக போட்டி நடத்தப்படுகிறது.தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு, மிகவும் புதிய நிகழ்ச்சியான இதில், பா.ஜ., பிரமுகரும், நடிகை மற்றும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பங்கேற்றுள்ளார்.நிகழ்ச்சியில் ...

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் 'டெங்கு' - அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புதல்

Posted: 15 Jul 2017 12:02 PM PDT

சிவகங்கை: ''தமிழகத்தில் 12 சுகாதார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசர கால தாய், சேய் சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் உபகரணங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மொத்தம் 12 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு தடுப்பு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லுாரிகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக ...

ஜனாதிபதி தேர்தலில் மொபைல் போனுக்கு தடை

Posted: 15 Jul 2017 12:47 PM PDT

ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு, மொபைல் போன் எடுத்துச் செல்ல, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
 ஜனாதிபதி தேர்தல், ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு, மொபைல் போன் மற்றும் புகைப்படக் கருவி எடுத்துச் செல்லக் கூடாது
 ஓட்டளிக்கச் செல்லும் போது, எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்
 ஓட்டுச்சீட்டில், 'ரைட்' மற்றும், 'பெருக்கல்' குறியீடுகளை பயன்படுத்தினால், ஓட்டுச்சீட்டு செல்லாததாகி ...

'வங்கிகளை ஏமாற்றுவோர் தண்டிக்கப்பட வேண்டும்!'

Posted: 15 Jul 2017 02:33 PM PDT

சென்னை;''வங்கி கடனை செலுத்தாமல் ஏமாற்றுவோர், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்,'' என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெரிவித்தார்.பொருளாதார நிலை குறித்து, அவர் பேசியதாவது:ஜி.எஸ்.டி.,யை அறிமுகம் செய்ததும், திவால் சட்டம் கொண்டு வந்ததும் பயன் தரும். நிறுத்தப்பட்ட பல திட்டங்களை முடிக்க, மத்திய அரசு உதவ வேண்டும். நிதி முதலீட்டுக்கான நெருக்கடிகளை போக்க வேண்டும்.
வங்கிகள், மிகுந்த அழுத்தத்தில் உள்ளன. வாராக்கடன் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது, வங்கிகளின் லாபத்தை சீர்குலைப்பதுடன், பெரும் நஷ்டத்திற்கு இழுத்து செல்கிறது. இதற்கு, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™