Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


டிடிஎச்சில் படம் வெளியீடு முடிவுஎடுக்கப்பட வில்லை:விஷால்

Posted:

டிடிஎச்சில் படம் வெளியிடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கப்பட வில்லை என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறினார் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

திரைத்துறை திரைப்பட உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி என்பது சுமை தான்.திங்கள் கிழமை முதல் காட்சிகள் ரத்து என்ற முடிவு வருத்தம் அளிக்கிறது. ...

காமெடி ஷோவுக்கு நடுவராகிறார் அக்ஷை குமார்

Posted:

காமெடி ஷோ ஒன்றிற்கு நடிகர் அக்ஷை குமார் நடுவராக போவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது காமெடி ஷோவுக்கு அவர் நடுவராக வர போவது உறுதியாகி உள்ளது.

தி கிரேட் இந்தியன் லாப்டர் சேலஞ்ச் என்ற காமெடி ஷோவின் 5வது சீசன் நிகழ்ச்சிக்கு அக்ஷை குமார் வர போகிறாராம். அதிரடி ஆக்ஷன் ஹீரோவான அக்ஷை குமார், காமெடியன்களை ஜட்ஜ் செய்ய உள்ளதை பார்க்க ...

கோல்ட் படத்தில் அக்ஷையின் பர்ஸ்ட்லுக் வெளியானது

Posted:

கோல்ட் படத்தில் நடிகர் அக்ஷை குமார் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த அனைவரும், அக்ஷையின் தோற்றம் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இத படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோல்ட் படத்தை ரீமா காக்தி இயக்கி உள்ளார். எக்செல் என்டர்டைன்மென்ட் ...

ஸ்ரீதேவியுடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் : அக்ஷை கண்ணா

Posted:

நடிகர் அக்ஷை கண்ணா, சமீப காலமாக தான் நடித்துள்ள மாம் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் பேட்டி அளித்த அவர், நடிகை ஸ்ரீதேவியை வெகுவாக பாராட்டி உள்ளார்.

ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், ஸ்ரீதேவி எவ்வளவு சிறந்த நடிகை என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவரது நடிக்கும் போது ...

மோடி வேடத்தில் பரேஷ் ராவல்

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை படத்தில், மோடியின் வேடத்தில் நடிகர் அக்ஷை குமார் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் பரேஷ் ராவல், மோடியின் வேடத்தில் அக்ஷை நடிக்கவில்லை என கூறினார்.

அவர் கூறுகையில், படத்திற்கான கதை தயாரிக்கும் பணி நடந்து ...

திட்டமிட்டப்படி இன்று முதல் தியேட்டர்கள் மூடப்படும் : அபிராமி ராமநாதன்

Posted:

தியேட்டர்களில் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி..,யில் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரியும் ஜூலை 3 முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தப் ...

தியேட்டர் உரிமையாளர் சங்க ஸ்டிரைக்கிற்கு ஆதரவு அளிக்க முடியாது : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Posted:

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,

சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் ...

பிளாஷ் பேக்: கே.ஆர்.விஜயா, கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் உலக சாதனை

Posted:

நடிகை கே.ஆர்.விஜயா, பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து ஒரு உலக சாதனையை நிகழ்த்த்தினார்கள். கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அதிகம் இயக்கிய நடிகை கே.ஆர்.விஜயா. சாதனை அதுவல்ல.
கே.ஆர்.விஜயாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரது முதல் படமான கற்பகத்தை இயக்கியவர் கோபால கிருஷ்ணன். சாதாரண ரிக்கார்ட் டான்ஸ் கலைஞராக இருந்தவரை ...

தமிழ் கடவுள் முருகன்: விஜய் டி.வியில் பிரமாண்ட பக்தி தொடர்

Posted:

சின்னத்திரையில் எப்போதுமே புராண மற்றும் பக்தி தொடர்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். தற்போது சின்னத்திரை சேலனல்களில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான பக்தி மற்றும் புராண தொடர்கள் இந்தியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் டப்பிங் ஆகும். நேரடி புராண தொடர்கள், பக்தி தொடர்கள் மிகவும் குறைவே.
தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தமிழ் ...

நாடகத்தை கைவிடுகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

Posted:

கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் காற்று வெளியிடை படத்தில் இவரது காட்சிகள் கத்தரிக்கு பலியானாதாலும் படம் தோல்வி அடைந்ததாலும் எந்த பயனும் இல்லை. தற்போது அவர் இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துவிட்டார். ...

பாவனா கடத்தலில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பா? ஆன்லைன் நிறுவனத்தில் அதிரடி சோதனை

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் நடிகர் திலீப் என்றும் அதை செயல்படுத்தியதுதான் பல்சர் சுனில் கூட்டாளிகளும் என்கிற கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கொச்சியில் செயல்பட்டு வரும் நடிகை காவ்யா ...

பா.ரஞ்சித் நடத்திய நாடகம்

Posted:

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் காலா படத்தை இயக்கி வருகிறார். ரஞ்சித் நீலம் புரொடக்ஷன் என்ற நிறுவனம் நடத்துகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள், குறும்படங்கள், நாடகங்கள் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் ஜெய்பீம் என்ற அமைப்புடன் இணைந்து மஞ்சள் என்ற நாடகத்தை சென்னை ...

ஹீரோவானார் மயில்சாமி மகன்

Posted:

இது வாரிசுகளின் காலம். காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் ஹீரோவாகியுள்ள அதாகப்பட்டது மகாஜனங்களே படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியும் ஹீரோவாகிறார்.
திரிபுரம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.பிருந்தா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக ...

கஞ்சா வியாபாரிகளின் வாழ்க்கையை சொல்லும் சூறாவளி

Posted:

மலையாளத்தில் 'கொட்டாரத்தில் குட்டி பூதம்', 'முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் , பி.ஓ ஆகிய படங்களை இயக்கியுள்ளவர் குமார் நந்தா. அகதி' எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக 'சூறாவளி' என்கிற படத்தை இயக்கவுள்ளார் . கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் ...

புரோட்டா சூரியுடன் காமெடி குஸ்தி போடும் ஜாங்கிரி மதுமிதா

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தினால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஜாங்கிரி மதுமிதா. முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நடிகையான அவர், அதையடுத்து சில படங்களில் சந்தானத்துடன் நடித்தார். என்றாலும், தான் ஹீரோவான பிறகு மதுமிதாவை மறந்து விட்டார் சந்தானம். அதனால் அதற் கடுத்தபடியாக முன்னணி காமெடியனான சூரியுடன் நடிப்பதற்காக கடும் ...

ரஜினியைத் தொடர்ந்து விஜய் பட சார்ட்டிலைட் உரிமையை கைப்பற்றிய டிவி நிறுவனம்

Posted:

சமீபகாலமாக பிரபலமில்லாத நடிகர்களின் படங்களை வாங்க டிவி சேனல்கள் முன்வருவதில்லை. அதேசமயம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை வாங்க சில பிரபல சேனல்கள் போட்டி போடுகின்றன. அதுவும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே முந்திக்கொள்கின்றன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தை விஜய் டிவி ...

கொடிவீரன் படத்திற்காக தலையில் மொட்டை அடித்து நடிக்கிறார் பூர்ணா

Posted:

கொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வரும் படம் கொடிவீரன். வழக்கம்போல் கிராமத்து கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் நாயகியாக சாட்டை, குற்றம் 23 படங்களில் நடித்த மகிமா நம்பியார் நாயகியாக நடிக்க, ரேணிகுண்டா சனுஜா தங்கை வேடத்தில் நடிக்கிறார். காதல், செண்டி மென்ட், ஆக்சன் கலந்த கதையில் இந்த படம் தயாராகிக் ...

மார்க்கெட் சரிந்தபோதும் இறங்கி வராத ஹன்சிகா

Posted:

போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதனால் மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க கமிட்டான ஹன்சிகா, தெலுங்கிலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி தன்னை தக்க வைத்துக்கொண்டார். அதோடு தமிழில் கொடிவீரன் படத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் அவர்கள் சொன்ன சம்பளம் மிகக்குறைவாக ...

திரிஷா இடத்தை பிடித்த கயல் ஆனந்தி

Posted:

சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை திரிஷா சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்கள் குறித்தும் அவரது அம்மா உமா கிருஷ்ணனே முடிவெடுத்து வந்தார். கதை கேட்டாலும், சரி, சம்பளம் பேசினாலும் சரி எந்த பிரச்சினையையும் தான் எதிர்கொள்ளாமல் அம்மாவையே கை காட்டி விட்டு வந்தார் திரிஷா.

ஆனால் அப்படி இருந்தவர், ராணாவுடனான காதல் ...

மூன்றாவது முறையாக பிரபுதேவா படத்தில் பிரபாஸ்

Posted:

இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவாவுக்கு சில படங்கள் அதிர்ச்சி தோல்வி கொடுக்கவே அங்கிருந்து இடம்பெயர்ந்து மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்து நடிகராகி விட்டார். அந்த வகையில், தேவி படத்திற்கு பிறகு யங் மங் சங், மெர்லின், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக விஷால், கார்த்தியை நாயகர்களாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™