Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


மார்க்கம் பகுதியில் விபத்து: நெடுஞ்சாலை 404 ஊடான போக்குவரத்துகள் துண்டிப்பு

Posted: 20 Jun 2017 10:52 AM PDT

மார்க்கம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தின் காரணமாக நெடுஞ்சாலை 404 ஊடான போக்குவரத்துகள் தடைபட்டுப் போயுள்ளன. நெடுஞ்சாலை 404இல், 16th Avenue பகுதியில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பல வாகனங்கள் தொடர்புபட்டுள்ள இந்த விபத்தின் காரணமாக, நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், 16th Avenue பகுதி ஊடான போக்குவரத்துகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ள இரண்டு கார்களும், இணைப்பு பெட்டியுடனான இன்னொரு கனரக வாகனமும், வீதியை விட்டு […]

The post மார்க்கம் பகுதியில் விபத்து: நெடுஞ்சாலை 404 ஊடான போக்குவரத்துகள் துண்டிப்பு appeared first on TamilStar.com.

மாடியில் இருந்து விழுந்த சிறுமிகள்

Posted: 20 Jun 2017 10:50 AM PDT

ஸ்காபரோவில் மாடி யன்னல் ஊடாக இரண்டு சிறுமிகள் கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளனர். கிழக்கு ஷெப்பேர்ட் அவனியூ மற்றும் நெய்ல்சன் வீதிப் பகுதியில், Burkwood Crescentஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே நேற்று இரவு 8.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு யன்னல் ஊடாக விழுந்த இரண்டு சிறுமிகளில் ஒருவருக்கு நான்கு வயது எனவும், மற்றையவருக்கு இரண்டு வயது என்றும், அவர்கள் வீட்டின் இரண்டாவது மாடி யன்னல் ஊடாக, கீழே உள்ள சீமெந்து தரை மீது விழுந்தனர் என்றும் […]

The post மாடியில் இருந்து விழுந்த சிறுமிகள் appeared first on TamilStar.com.

அவைத் தலைவர் விவகாரம் பிரச்சினையாக உருவெடுக்காது! – சிவாஜிலிங்கம்

Posted: 20 Jun 2017 10:45 AM PDT

அவைத்தலைவர் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அதிருப்தி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கான பதிலேயாகும், இது குறித்து எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ‘முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவைத்தலைவரிடமே கையளிக்கப்பட வேண்டும். எனினும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான பிரேரணையை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தாமாகவே முன்வந்து ஆளுநரிடம் கையளித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதிருப்தி […]

The post அவைத் தலைவர் விவகாரம் பிரச்சினையாக உருவெடுக்காது! – சிவாஜிலிங்கம் appeared first on TamilStar.com.

சம்பந்தன் இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கவில்லை! – ஆளுநர் ரெஜினோல்ட் குரே

Posted: 20 Jun 2017 10:42 AM PDT

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவில்லை என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தன் தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ள போதிலும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

The post சம்பந்தன் இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கவில்லை! – ஆளுநர் ரெஜினோல்ட் குரே appeared first on TamilStar.com.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மஹிந்தவின் மோசமான செயற்பாடு

Posted: 20 Jun 2017 10:40 AM PDT

அண்மையில் ஜப்பானுக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பும் போது பெருந்தொகை பொருட்களை கொண்டு வந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நிறைகளையும் விட பெருந்தொகையான பொருட்களை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் 1000 கிலோகிராம் எடை கொண்ட பொருட்களை மஹிந்த கொண்டு வந்துள்ளார். அவருடன் சென்ற ஏனையோரும் பாரிய அளவில் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக எவ்வித மேலதிக கட்டணங்களையும் […]

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் மஹிந்தவின் மோசமான செயற்பாடு appeared first on TamilStar.com.

ஹெந்தவிதாரணவிடம் இன்றும் விசாரணை!

Posted: 20 Jun 2017 10:36 AM PDT

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, 3ஆவது தடவையாக இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். வடக்கு, கிழக்கில் இயங்கிவரும் கேபிள் தொலைக்காட்சி சேவை ஒன்றிலிருந்து 3.2 மில்லியன் ரூபா பணம் பெற்றுக் கொண்டதாக, இவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்தே இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

The post ஹெந்தவிதாரணவிடம் இன்றும் விசாரணை! appeared first on TamilStar.com.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து! பலரும் தற்கொலை

Posted: 20 Jun 2017 10:34 AM PDT

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து நுண்கடன் நிதி நிறுவனங்கள் பாரிய பாய்ச்சலை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இது யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கில் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்தான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 2009ஆம் ஆண்டுக்கு பினனர் கிளிநொச்சியில் மாத்திரம் நுண்கடன் பெற்றுக்கொண்ட 7க்கும் மேற்பட்ட சிறு வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், […]

The post யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து! பலரும் தற்கொலை appeared first on TamilStar.com.

செல்போனுக்கு தடை விதித்தார் ஜனாதிபதி!

Posted: 20 Jun 2017 10:30 AM PDT

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்போன்களை எடுத்து வர வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களுக்கு இன்று அறிவித்துள்ளார். உத்தரவில்லை அறிவிப்பு மாத்திரமே எனவும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன. சில அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்தின் போது செல்போன்களில் குறுந்தகவல்களை அனுப்பும் பழக்கத்தை கொண்டிருப்பதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post செல்போனுக்கு தடை விதித்தார் ஜனாதிபதி! appeared first on TamilStar.com.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் ஊழல், மோசடி: கடும் தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி

Posted: 20 Jun 2017 10:25 AM PDT

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க தற்போதைய அரசாங்கம் நியமித்த ஜே.சீ. வெலியமுனக தலைமையிலான குழு முன்வைத்த பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை செய்துள்ள தவறுகள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோர் பணிப்பாளர் […]

The post ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் ஊழல், மோசடி: கடும் தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி appeared first on TamilStar.com.

அவைத் தலைவர் விவகாரத்தில் வெடிக்குமா புதுப் பிரச்சினை? – முதலமைச்சர் கருத்தால் நெருக்கடி

Posted: 20 Jun 2017 10:18 AM PDT

அவைத் தலைவரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது. இவ்வாறு பக்கச் சார்பாக நடந்துகொண்ட அவைத்தலைவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நிலைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் அது அவைத்தலைவரிடமே கையளிக்க வேண்டும். எனினும், என்னுடைய விடயத்தில் அவைத்தலைவரே தானாக […]

The post அவைத் தலைவர் விவகாரத்தில் வெடிக்குமா புதுப் பிரச்சினை? – முதலமைச்சர் கருத்தால் நெருக்கடி appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™