Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் அமளி நிச்சயம்

Posted: 13 Jun 2017 09:19 AM PDT

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில், புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியின், கூவத்துார் பேரம் தொடர்பாக, பிரச்னையை கிளப்ப, தி.மு.க., முடிவு செய்திருப்பதால், அமளி நிச்சயம். நாள்தோறும், ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதால், இன்னும், 24 நாட்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதற்கிடையில், ஜி.எஸ்.டி., உட்பட, முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழக அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், மார்ச், 16ல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் ...

ஜி.எஸ்.டி., அமலால் மருந்துகளின் விலை...உயரும்...! 2.29 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு

Posted: 13 Jun 2017 09:24 AM PDT

புதுடில்லி, : வரும் ஜூலையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் போது, பெரும்பாலான, அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை, 2.29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றியது. மாநில, ஜி.எஸ்.டி., மசோதாக்களை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், சட்டசபைகளில் நிறைவேற்றி வருகின்றன. ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி.,யை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து ...

புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் புழக்கத்தில் உள்ளதும் செல்லும்

Posted: 13 Jun 2017 09:36 AM PDT

புதுடில்லி, :புதிய வரிசை உடைய, 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016, நவ., 8ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
வித்தியாசம் கிடையாது
இந்நிலையில், புதிய வரிசை கொண்ட, 500 ரூபாய்நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி, நேற்று அறிவித்தது.இது குறித்து ரிசர்வ் வங்கி ...

இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டுக்கு போகிறார் ராகுல்!

Posted: 13 Jun 2017 09:42 AM PDT

புதுடில்லி, தீவிர அரசியலில் இருந்து, சிறு விடுமுறை எடுத்துக் கொண்டு, இத்தாலியில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்கிறார், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், வரும், 19ல், தன், 47வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.
பாட்டி வீட்டுக்கு போறேன்
இந்நிலையில், தன் பாட்டி வீட்டுக்கு போக உள்ளதாக, ராகுல், 'டுவிட்டர்' சமூகதளத்தில் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார்.'என் பாட்டி மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக, சில ...

வீடியோவில் இருப்பது நான் தான்; ஆனால், குரல் என்னுடையது அல்ல!'

Posted: 13 Jun 2017 09:48 AM PDT

''வீடியோவில் உள்ளது நான் தான். ஆனால், குரல் என்னுடையது அல்ல,'' என, பன்னீர் அணி எம்.எல்.ஏ., சரவணன் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். அப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோடிக்கணக்கில் ரொக்கமாகவும், ஒரு கிலோ தங்கமும் வழங்கப்பட்டதாக, தகவல் வெளியானது.அதை உறுதிப்படுத்தும் வகையில், சில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேசும் வீடியோ காட்சிகள், நேற்று முன்தினம், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பானது.
பரபரப்பு
பன்னீர் அணியில் உள்ள, மதுரை தெற்கு எம்.எல்.ஏ., சரவணன் பேசும் வீடியோ ...

சேகர் ரெட்டியிடம் சிக்கிய 50 கிலோ தங்கம் முடக்கம்

Posted: 13 Jun 2017 10:15 AM PDT

சென்னை,:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் நண்பரும், மணல் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான, 14 கோடி ரூபாய் மதிப்புள்ள, 50 கிலோ தங்கக் கட்டிகளை, அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

மத்திய அரசு, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதனால், கறுப்புப் பண முதலைகள், சட்ட விரோதமாக பணம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
34 கோடி ரூபாய் முடக்கம்
இந்நிலையில், டிச., 7ல், சென்னை, பசுல்லா சாலையில் உள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிய, 2,000 ரூபாய் ...

கூவத்தூர் பேரம் விவகாரம் ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு

Posted: 13 Jun 2017 10:19 AM PDT

சென்னை: நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோடிக்கணக்கில் பண பேரம் நடந்ததாக கூறப்படுவது குறித்து, சி.பி.ஐ., மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் முறையிடப்பட்டது.

முதல்வராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டசபையில், நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் அமளியால், சபையில் இருந்து, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.அதைத் தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில், நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக, ...

பத்திரப்பதிவு அலுவலகங்களில் விரைவில் வருமான வரி 'ரெய்டு'

Posted: 13 Jun 2017 10:30 AM PDT

தமிழகத்தில், சில இடங்களில், உயர் மதிப்பு சொத்து பரிவர்த்தனைகள் மறைக்கப்படுவது தெரிய வந்துள்ளதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில், 'ரெய்டு' நடத்த, வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.

இது குறித்து, தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குனர், ஆர்.வி.ரெட்டி கூறியதாவது:
பான்' எண் வாங்க வேண்டும்
வருமான வரிச் சட்டம், '50 சி' பிரிவுப்படி, பத்திரப்பதிவு அலுவலகங்களில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து, வருமான வரித்துறைக்கு, சார் - பதிவாளர்கள் தகவல் ...

'எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை மத்திய அரசு முடிவு செய்யும்'

Posted: 13 Jun 2017 10:47 AM PDT

சென்னை, ''எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், பேச முடியாத, செவித்திறன் இழந்த, 200 குழந்தைகளுக்கு, காது நுண் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை நடந்தது. இவர்களுக்கு, செவித்திறன் செயல்பாட்டை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவங்கி வைத்தார்.உள்நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்ததுடன், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தையும், அவர் பார்வையிட்டார்.
மத்திய அரசு முடிவு செய்யும்
பின், முதல்வர்பழனிசாமி கூறுகையில், ''அனைத்து ...

திறந்தவெளி கழிப்பறைக்கு தீர்வு: உ.பி., மாநிலத்தில் அசத்தல் திட்டம்

Posted: 13 Jun 2017 11:41 AM PDT

கோண்டா: உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில், மக்கள் வழிபடும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது.
துாய்மை இந்தியா:
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்குள்ள கோண்டா, மிகவும் பின்தங்கிய பகுதி. நாட்டின் சுத்தமான நகரங்கள் பட்டியலில், 434வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில், மக்கள் பெரும்பாலும், திறந்த வெளிகளில் மலம் கழித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான, 'துாய்மை இந்தியா' ...

மல்லையாவுக்கு டிச.,4 வரை ஜாமின்

Posted: 13 Jun 2017 01:00 PM PDT

லண்டன்: நாடு கடத்த வேண்டும் என, மத்திய அரசின் சார்பில், பிரிட்டன் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, டிச., 4 வரை, ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது.

பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, 2016 மார்ச்சில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. 'இந்த வழக்குகளில் ஆஜர்படுத்தும் வகையில், மல்லையாவை நாடு கடத்த வேண்டும்' என, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ...

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

Posted: 13 Jun 2017 01:47 PM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்க இன்று காங்.தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசிக்கின்றனர்.ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளது. இதற்கு போட்டியாக காங்.தலைமையில் எதிர் கட்சிகளும் ஒன்று இணைந்து வேட்பாளரை நிறுத்த உள்ளனர். இக்கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்படுகிறது.இதுதொடர்பாக ஆலோசிக்க காங். தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றனர். முன்னதாக காங்.சார்பில் குழு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™