Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது – கனடா

Posted: 08 Apr 2017 09:00 AM PDT

சிரியாவில் இரசாயனத் தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படும் தாக்குதல் சம்பவம் ஒன்று இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளதை அடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் கனேடியப் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு சிரியாவின் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கப்பட இருப்பது தொடர்பில் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். வியாழக்கிழமை அமெரிக்காவால் சிரியா மீது ஏவுகணைத் தாககுதல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அது தொடர்பில் அமெரிக்கா விளக்கமளித்திருந்ததாகவும், அமெரிக்க பாதுகாப்புச் […]

The post அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது – கனடா appeared first on TamilStar.com.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 12பேர் கைது

Posted: 08 Apr 2017 08:58 AM PDT

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் ஒன்ராறியோவைச் சேர்நத 12 பேர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச ரீதியிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கடந்த ஓர் ஆண்டாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. வர்த்தக சரக்கு ஊர்திகள் மூலம் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு கொக்கெய்ன் போதைப் பொருட்கள் எடுத்து வரப்படுவதாகவும், ஒன்ராறியோவின் வோட்டலுவைச் சேர்ந்த குழு ஒன்று இந்த நடவடிக்கையை ஒழுங்கு படுத்துவதாகவும் கூறப்பட்ட நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக […]

The post போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 12பேர் கைது appeared first on TamilStar.com.

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

Posted: 08 Apr 2017 08:53 AM PDT

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும் அனைத்துலக பேரவைக்கூட்டமும் 2017 ஆவணி மாதம் 5ம் 6ம் நாள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (2048 திருவள்ளுவராண்டு) இலங்கையின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற உள்ளது. உலகத் தமிழ் இனத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்கும் உயர் நோக்குடனும் இலங்கை இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்னும் குறிக்கோளுடனும் அரசியற்சார்பற்று […]

The post இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு appeared first on TamilStar.com.

காட்டில் கிடைக்கும் எழும்புக் கூடுகள் : விடுதலைப் புலிகள் தாக்கப்போகின்றார்கள் என எச்சரிக்கும் இராணுவம்?

Posted: 08 Apr 2017 08:49 AM PDT

யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்தோடிவிட்ட நிலையிலும் இன்றும் (சிங்கள) மக்களிடையே அதனை நினைவு படுத்தும் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. யுத்த காலத்தில் எப்படி விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்பது குறித்து இராணுவத்தினர் மக்களிடையே விபரிக்கும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. குறித்த காணொளியில் யுத்தம் பற்றியும், இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இராணுவ வீரர் ஒருவர் விபரிக்கின்றார். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும் மேலும் அவர் அதில் கூறியுள்ளதாவது, ஆணையிறவு தாக்குதலின் போது 2800 இற்கும் அதிகமான […]

The post காட்டில் கிடைக்கும் எழும்புக் கூடுகள் : விடுதலைப் புலிகள் தாக்கப்போகின்றார்கள் என எச்சரிக்கும் இராணுவம்? appeared first on TamilStar.com.

புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசியல் வேலைத்திட்டம் – ஜனாதிபதி

Posted: 08 Apr 2017 08:47 AM PDT

புத்தாண்டுக்கு பின்னர், குறைகள், தாமதங்களை போக்கி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பிரதான தேவையென கருதி அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அமைச்சரவை மாற்றம் மட்டும் போதுமானதல்ல என்பதால், மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்கள் […]

The post புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசியல் வேலைத்திட்டம் – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

நாட்டை ஆட்சி செய்வது யார்..? மஹிந்த ராஜபக்ச கேள்வி

Posted: 08 Apr 2017 08:44 AM PDT

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் நாட்டை ஆட்சி செய்வது யார்..? என்பது தெரியாமல் இருக்கின்றது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஒருவருக்கு எதிராக நீதிச் சேவை கட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் […]

The post நாட்டை ஆட்சி செய்வது யார்..? மஹிந்த ராஜபக்ச கேள்வி appeared first on TamilStar.com.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து!

Posted: 08 Apr 2017 08:40 AM PDT

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யு கல்கிசை நீதிவான் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போதே கல்கிசை நீதிமன்றம் பிணை உத்தரவை இரத்துச் செய்து மேல் […]

The post இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து! appeared first on TamilStar.com.

மக்கள் சிறந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்

Posted: 08 Apr 2017 08:36 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக அதனை பயன்படுத்த வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஊருபொக்க, கின்னெலிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முதிர்ச்சியான அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்படுவார்களேயானால், நாடாளுமன்றத்தில் தற்போது காணப்படும் பிரச்சினை இருக்காது. இதனால், மக்கள் சிறந்த, சேவை மனப்பான்மை கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் லக்ஷ்மன் […]

The post மக்கள் சிறந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் appeared first on TamilStar.com.

ஜனாதிபதியை சந்தித்த கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்

Posted: 08 Apr 2017 08:31 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது மாகாணங்களுக்கான நிதி தொடர்பிலும், வேறு சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக விமலவீர திஸாநாயக்க கூறியுள்ளார்.

The post ஜனாதிபதியை சந்தித்த கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் appeared first on TamilStar.com.

விமலின் சதுரங்க ஆட்டத்தின் இயக்குனர் யார்? வெளிவரும் உண்மைகள்!

Posted: 08 Apr 2017 08:23 AM PDT

நீண்ட நாட்களின் பின்னர் பிணை கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் வழக்கு மற்றும் பிணை போன்றன முன்னுக்கு பின் முரண்பட்ட விடயமாக மாறியுள்ளது. தொடர்ந்தும் 87 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விமலுக்கு பிணை மறுக்கப்பட்டு வந்தது. உண்ணாவிரதம், உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் என பல தரப்பட்ட விடயங்களின் பின்னர் நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது. "நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது". என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

The post விமலின் சதுரங்க ஆட்டத்தின் இயக்குனர் யார்? வெளிவரும் உண்மைகள்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™