Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


குதிக்காலை உயர்த்தும் காலணிகள் அவசியம் இல்லை : பிரிட்டிஸ் கொலம்பியா

Posted: 09 Apr 2017 11:05 AM PDT

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் அதிகாரபூர்வ உடையின் அங்கமாக விளங்கிவந்த குதிக்காலை உயர்த்தும் காலணிகளை (high heels) பெண் ஊழியர்கள் அணியவேண்டும் என்ற உடைக் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு பாரபட்சமானது என்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பார்த்தால் உயரமான இந்த குதிக்காலை உயர்த்தும் காலணிகள் ஆபத்தானவை என்ற காரணங்களால் இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டிஸ் கொலம்பியா தெரிவித்துள்ளது. காலணிகளில் பாலின பாகுபாடு இருப்பதை தடுக்கும் நோக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சட்டமன்றத்தில் மார்ச் மாதம் […]

The post குதிக்காலை உயர்த்தும் காலணிகள் அவசியம் இல்லை : பிரிட்டிஸ் கொலம்பியா appeared first on TamilStar.com.

9 மாத கர்ப்பிணி கொலை: கணவர் கைது

Posted: 09 Apr 2017 11:04 AM PDT

பிக்கறிங் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாடு ஒன்றை அடுத்து வெள்ளிக்கிழம இரவு 9.45 மணியளவில் புரோக் வீதி மற்றும் தூன்சன் வீதிப் பகுதியில், வின்வில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு சென்றிருந்த காவல்த்துறையினர், அங்கிருந்து இந்த பெணின் சடலத்தை மீட்டனர். அத்துடன் 9மாதக் கர்ப்பிணியான அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழுந்தையும் உயிரிழந்து விட்டதாக காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேவேளை […]

The post 9 மாத கர்ப்பிணி கொலை: கணவர் கைது appeared first on TamilStar.com.

தமிழர்கள் இராவணனின் வம்சாவளியினர்’ மஹிந்த ஒரு பௌத்தனே அல்ல! சீமானின் காரசாரமான உரை

Posted: 09 Apr 2017 10:58 AM PDT

ஈழத்தில் இந்துக்கள் செத்து மடிந்தனர். அப்போதைய காலகட்டத்தில் யாரும் இதை கேட்கவில்லை. காரணம் செத்தவர்கள் இந்துக்கள், அடித்தவன் சிங்களவன். என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஆர்.கே நகரில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே சீமான் இதை குறிப்பிட்டுள்ளார். இதில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக தனது உரையை சீமான் நிகழ்த்தினார். இலங்கைத்தமிழர் விவகாரம், ஐ.நா கூட்டத்தொடர் குறித்தும் உரையாற்றியுள்ளார். தொடர்ந்து தனது உரையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஐ.நா தீர்மானத்தை […]

The post தமிழர்கள் இராவணனின் வம்சாவளியினர்’ மஹிந்த ஒரு பௌத்தனே அல்ல! சீமானின் காரசாரமான உரை appeared first on TamilStar.com.

சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்துக்கு எதிராகச் செயற்படமாட்டோம்! – மாவை சேனாதிராசா

Posted: 09 Apr 2017 10:55 AM PDT

சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்திற்கு எதிராக செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை வைத்து நாம் செயற்பட்டிருக்கின்றோம். இன்னும் நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை. நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த அரசு எம்மை ஏமாற்றுமாயின் எங்களது அடுத்தகட்ட முடிவுகளை சர்வதேசம் ஆதரிக்கும். நாம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்துடன் […]

The post சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்துக்கு எதிராகச் செயற்படமாட்டோம்! – மாவை சேனாதிராசா appeared first on TamilStar.com.

மகிந்த போட்டியிட்ட மாவட்டத்திற்கு 11 புதிய அமைப்பாளர்களை நியமித்தார் ஜனாதிபதி

Posted: 09 Apr 2017 10:52 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். மேலும் 7 தொகுதி அமைப்பாளர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். குருணாகல் மாவட்ட தலைவராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மே தினத்தை இலக்கு வைத்து இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கட்டுகம்பளை தொகுதி அமைப்பாளர்- அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா யாப்பஹூவ தொகுதி அமைப்பாளர் […]

The post மகிந்த போட்டியிட்ட மாவட்டத்திற்கு 11 புதிய அமைப்பாளர்களை நியமித்தார் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

வடக்கு, கிழக்கிற்கு விசேட அதிகாரங்களாம்!

Posted: 09 Apr 2017 10:49 AM PDT

புதிய அரசியலமைப்பில், வடக்கு, கிழக்குக்கு சிறப்பு அதிகாரங்கள் பகிரப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு மாத்திரமே அனுமதிப்போம் என்றும் புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவளிக்க தயாரில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கருத்துகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நிலைப்பாடு முட்டாள்தனமானதென தெரிவித்துள்ள அமைச்சர், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென மேலும் தெரிவித்தார். இதேவேளை, […]

The post வடக்கு, கிழக்கிற்கு விசேட அதிகாரங்களாம்! appeared first on TamilStar.com.

கடந்த ஆட்சியாளர்களின் மனித கொலைகளை அம்பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

Posted: 09 Apr 2017 10:46 AM PDT

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித கொலைகள், ஊழல் மற்றும் மோசடி அனைத்து தகவல்களும் விரைவில் வெளிப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் ஓர் இரு மாதங்களில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கெபத்திகொல்லாவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்கள் வெளியாகியதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் ஆயுள் நிறைவடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி காலி […]

The post கடந்த ஆட்சியாளர்களின் மனித கொலைகளை அம்பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை appeared first on TamilStar.com.

2020 வரை அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது! – மஹிந்த

Posted: 09 Apr 2017 10:41 AM PDT

அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்ற போதிலும், 2020ஆம் ஆண்டு வரை அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல முருதவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

The post 2020 வரை அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது! – மஹிந்த appeared first on TamilStar.com.

அரசாங்கத்திடம் சுமந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Posted: 09 Apr 2017 10:39 AM PDT

வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம், புதிய கேள்விப்பத்திர கோரலை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. ஏற்கனவே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்மொழிந்திருந்த 65 ஆயிரம் பொருத்து வீடுகள் திட்டத்துக்கு பாரிய எதிர்ப்புகள் வெளிக்காப்பட்டப்பட்டு வருகின்றன இதனையடுத்து அரசாங்கம் இந்த திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது இந்தநிலையில் புதிய கேள்விப்பத்திர கோரல் மேற்கொள்ளப்பட்டு குறைந்த செலவில் நிறைவான […]

The post அரசாங்கத்திடம் சுமந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை appeared first on TamilStar.com.

வடக்கு, கிழக்கில் வீடமைப்புத் திட்டத்துக்கு புதிய கேள்விப்பத்திரங்களை கோர வேண்டும்! – கூட்டமைப்பு

Posted: 09 Apr 2017 10:37 AM PDT

வடக்கு கிழக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், ஏற்கனவே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்மொழிந்திருந்த 65 ஆயிரம் பொருத்து வீடுகள் திட்டத்துக்கு பாரிய எதிர்ப்புகள் வெளிக்காப்பட்டப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அரசாங்கம் இந்த திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் புதிய கேள்விப்பத்திர கோரல் மேற்கொள்ளப்பட்டு குறைந்த செலவில் நிறைவான வீடுகள் அமைக்கப்பட […]

The post வடக்கு, கிழக்கில் வீடமைப்புத் திட்டத்துக்கு புதிய கேள்விப்பத்திரங்களை கோர வேண்டும்! – கூட்டமைப்பு appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™