Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கனடாவுக்கு பயணிக்கும் விமானங்களில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள்

Posted: 13 Apr 2017 06:52 PM PDT

கனடாவுக்கான பயணங்களை மேற்கொள்ளும் சில பயணிகள் விமானங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் சிலவற்றை கனேடிய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற் கொண்டு இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், அது குறித்த மேலதிக விளக்கங்களை தெரிவிக்கவில்லை. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இது தொடர்பில் தகவல் வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து கனடாவுக்கு வரும் விமானங்களின் பாதுகாப்பினை கூடுதலாக […]

The post கனடாவுக்கு பயணிக்கும் விமானங்களில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் appeared first on TamilStar.com.

கனடாவிலும் கள்ள நோட்டு: காவல்த்துறை எச்சரிக்கை

Posted: 13 Apr 2017 06:49 PM PDT

50 மற்றும் 100 டொலர் பெறுமதியான போலி கனேடிய டொலர் தாள்கள் தொடர்பில் காவல்த்துறையினர் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த போலிப் பணத்தாள்கள் தற்போது புழக்கத்தில் ஊலாவுவதாகவும், ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் இவ்வாறான நாணயத் தாள்களின் புழக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த போலி நாணயத் தாள்கள் 1969ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அச்சிடப்பட்ட கனேடிய நாணயத் தாள்களை ஒத்தவையாக காணப்படுவதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாள்களில் […]

The post கனடாவிலும் கள்ள நோட்டு: காவல்த்துறை எச்சரிக்கை appeared first on TamilStar.com.

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட இலங்கைப் படையினர்!

Posted: 13 Apr 2017 06:46 PM PDT

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டில் இருந்து கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படையினர், மீது 2000 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெய்டியில் மாத்திரம், இலங்கை உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த படையினர், […]

The post பாலியல் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட இலங்கைப் படையினர்! appeared first on TamilStar.com.

தமிழ் மக்களின் சோகம், ஏக்கப் பெருமூச்சுக்கு மத்தியில் பிறக்கிறது புத்தாண்டு! – முதலமைச்சர்

Posted: 13 Apr 2017 08:48 AM PDT

உறவுகளைத் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், வீடுகள் மற்றும் காணிகளை இழந்தவர்களின் சோகத்தின் மத்தியில், வேலையற்ற பட்டதாரிகளின் ஏக்கப் பெருமூச்சின் மத்தியில் ஏவிளம்பி புத்தாண்டு பிறப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு பிறக்கவிருக்கும் ஏவிளிம்பி புத்தாண்டை முன்னிட்டு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். வருடங்கள் பல கடந்து போனாலும் தமிழ் மக்களின் நிலை என்றுமே கேள்விக்குறியாகவே எஞ்சியுள்ளது. பிறக்கவிருக்கும் புத்தாண்டில் மக்களின் துன்ப துயரங்கள் அகழவும் […]

The post தமிழ் மக்களின் சோகம், ஏக்கப் பெருமூச்சுக்கு மத்தியில் பிறக்கிறது புத்தாண்டு! – முதலமைச்சர் appeared first on TamilStar.com.

தமிழர்களின் துன்பியலைப் போக்க புலம்பெயர் சமூகங்கள் முன்வர வேண்டும்: எஸ்.வியாளேந்திரன்

Posted: 13 Apr 2017 08:46 AM PDT

கடந்த வருடத்தில் இருந்த நிலமையை விட ஏவிளம்பி சித்திரை புதுவருடத்திலாவது புலம்பெயர் சமூகம் எமது தமிழ் மக்களின் முழுமையான அபிவிருத்திக்காக முன்வரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார். கடந்த ஆட்சியாளர்களை விட தற்பொழுதுள்ள நல்லாட்சி என்கின்ற ஆட்சியில் ஓரளவு ஊடக சுதந்திரம், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை முன் நின்று கேட்கக்கூடிய சுதந்திரம் உள்ள நிலையில் பெருமளவான மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டனவா என்றால் கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது. ஆட்சி மாற்றத்தினால் மக்களின் கோரிக்கைகள் ஏமாற்றபட்ட நிலையில் காணப்படுகின்ற […]

The post தமிழர்களின் துன்பியலைப் போக்க புலம்பெயர் சமூகங்கள் முன்வர வேண்டும்: எஸ்.வியாளேந்திரன் appeared first on TamilStar.com.

மகிந்த அரசின் கடன் விபரங்கள் நாடாளுமன்றத்திற்கு

Posted: 13 Apr 2017 08:43 AM PDT

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொடர்பான விபரங்களை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானித்துள்ளார். நாட்டின் உண்மையான கடன் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிக்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் பெற்ற கடன் அல்ல எனவும் கடந்த அரசாங்கம் பெற்ற கடன் மற்றும் வட்டி […]

The post மகிந்த அரசின் கடன் விபரங்கள் நாடாளுமன்றத்திற்கு appeared first on TamilStar.com.

யாழ், கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இன்புளுவன்சா வைரஸ் பாதிப்பு அதிகம்!

Posted: 13 Apr 2017 08:41 AM PDT

இன்புளுவன்சா வைரஸ் நோயின் தாக்கம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. இதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீ பவானந்த ராஐா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் H1,N1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட […]

The post யாழ், கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இன்புளுவன்சா வைரஸ் பாதிப்பு அதிகம்! appeared first on TamilStar.com.

சிங்கள தமிழ் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் : புத்தாண்டு வாழ்த்து செய்தியில் சம்பந்தன்

Posted: 13 Apr 2017 08:39 AM PDT

சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் நல்லுறவு சகஜ நிலையும் தோன்றி, இன நல்லிணக்கம் ஏற்பட இந்த புத்தாண்டு வழிசமைத்து கொடுக்கட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி, பகுதிகளில் வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எம்மோடு இணைந்து புத்தாண்டினை கொண்டாடும் சிங்கள சகோதரர்களுக்கு இனிய புத்தாண்டு […]

The post சிங்கள தமிழ் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் : புத்தாண்டு வாழ்த்து செய்தியில் சம்பந்தன் appeared first on TamilStar.com.

ஜப்பான்- இலங்கை இடையே மூன்று உடன்பாடுகள் கையெழுத்து!

Posted: 13 Apr 2017 08:37 AM PDT

ஜப்பான் – இலங்கைக்கு இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கைகளில் கையொப்பமிடப்பட்டுள்ளன. கிராமப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம், களுகங்கை நீர் விநியோகத்தை விரிவுபடுத்தல் மற்றும் துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல் போன்று மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதேவேளை இலங்கையில் தேசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை […]

The post ஜப்பான்- இலங்கை இடையே மூன்று உடன்பாடுகள் கையெழுத்து! appeared first on TamilStar.com.

புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றம்- ஜனாதிபதி திட்டம்

Posted: 13 Apr 2017 08:34 AM PDT

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றங்கள் சிலவற்றை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் பதவிகளிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாகவும், ஜனாதிபதி தற்போது அது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றத்தின் போது இரண்டு முக்கிய அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றம்- ஜனாதிபதி திட்டம் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™