Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோவில் மோசமான தீ பரவல்

Posted: 07 Apr 2017 08:59 AM PDT

ஸ்காபரோவின் வடகிழக்கு பகுதியில் Steeles Avenue Eastற்கு தெற்கே, Sewells வீதியில் அமைந்துள்ள வாகனத் திருத்துமிடத்தில் நேற்று வியாழக்கிழமை பாரிய தீ விபத்து சம்பவித்துள்ளது. இந்த தீ விபத்துத் தொடர்பில் தகவல் வெளியிட்ட ரொரன்ரோ தீயணைப்பு படையினர், அங்கிருந்த எண்ணெய்த் தாங்கி ஒன்றில் பற்றிக்கொண்ட தீயானது அந்த வளாகத்தில் இருந்த ஏனைய கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியதாக கூறியுள்ளனர். எண்ணெய் சேமிக்க்பபட்ட இடத்தில் இந்த தீ பரவியதாலும், அங்கு வீசிய வேகமான காற்றின் காரணமாகவும் தீப்பரவலை கட்டுப்படுத்துவதில் கடுமையான […]

The post ஸ்காபரோவில் மோசமான தீ பரவல் appeared first on TamilStar.com.

வாகனம் மோதி பாதசாரி பலி

Posted: 07 Apr 2017 08:53 AM PDT

பிரம்ரன் பகுதியில் வாகனம் ஒன்று மோதியத்தில் பாதசாரி ஒருவர் பலியானார். நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. Bramalea மற்றும் Drew வீதிகள் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த அந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மீட்பப் பணியாளர்கள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது விபத்தில் சிக்கிக்கொண்ட குறித்த நபர் அந்த வாகனத்தின் கீழ் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர்கள் […]

The post வாகனம் மோதி பாதசாரி பலி appeared first on TamilStar.com.

பிரதமரிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை : விமலை விடுவித்தது யார்?

Posted: 07 Apr 2017 08:48 AM PDT

பிரதமரிடம் பிச்சையெடுத்து விடுதலையாக வேண்டிய நிலையில் நான் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். இன்று பிணை கிடைக்கப்பெற்ற விமல், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே எனக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எவருடைய பரிந்துரையின் பேரில் விடுதலை பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பிரதமரிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ பிச்சை எடுத்து கையேந்தி பிணை வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. […]

The post பிரதமரிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை : விமலை விடுவித்தது யார்? appeared first on TamilStar.com.

மகிந்தவுடன் தாமரை மொட்டு சின்னத்தில் தேர்தலில் களம் இறங்கும் காமினி லொக்குகே

Posted: 07 Apr 2017 08:39 AM PDT

இரண்டு வருடங்களாக தொடர்ந்தும் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் மகிந்த ராஜபக்ச தலைமையில் தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடாக தேர்தலில் போட்டியிட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பாக விளக்கமளிக்குக்கும் கூட்டம் இன்று அபயராம விகாரையில் நடைபெற்றது. அதில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே காமினி லொக்குகே இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்ச […]

The post மகிந்தவுடன் தாமரை மொட்டு சின்னத்தில் தேர்தலில் களம் இறங்கும் காமினி லொக்குகே appeared first on TamilStar.com.

போதனா வைத்தியசாலையாக மாறும் மாலபே சையிட்டம் தனியார் மருத்துவமனை

Posted: 07 Apr 2017 08:35 AM PDT

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலையை தொடர்ந்தும் போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலபே சையிட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சையிட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் சம்பந்தமாக முக்கிய தீர்மானங்கள் […]

The post போதனா வைத்தியசாலையாக மாறும் மாலபே சையிட்டம் தனியார் மருத்துவமனை appeared first on TamilStar.com.

வடக்கில் அகதிகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் : முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted: 07 Apr 2017 08:31 AM PDT

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலைமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் யாழ்.மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர் அகதிகள் குறித்து […]

The post வடக்கில் அகதிகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் : முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

ஒரு வழியாக விமலுக்குக் கிடைத்தது பிணை!

Posted: 07 Apr 2017 08:27 AM PDT

91 மில்லியன் ரூபா அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை, கொழும்பு கோட்டை நீதிவான் இன்று பிணையில் விடுவித்தார். 50,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல, கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, இன்று உத்தரவிட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விமல் வீரவன்ச அம்பியூலன்ஸில், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து […]

The post ஒரு வழியாக விமலுக்குக் கிடைத்தது பிணை! appeared first on TamilStar.com.

தனித்து போட்டியிட்டாலும் ஒன்றாக ஆட்சி நடத்துவோம்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Posted: 07 Apr 2017 08:21 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஒன்றாக ஆட்சி நடத்துவது எப்படி என்பதை எதிர்வரும் தேர்தல்களில் நாட்டுக்கு எடுத்துக்காட்டவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மீரிகம வாராந்த சந்தை மற்றும் பொது விளையாட்டு அரங்கை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பௌர்ணமி தினங்களில் அரசாங்கத்தை மாற்ற போவதாக யார் கூறினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் இந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு […]

The post தனித்து போட்டியிட்டாலும் ஒன்றாக ஆட்சி நடத்துவோம்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க appeared first on TamilStar.com.

ஜப்பான் செல்கிறார் ரணில்!

Posted: 07 Apr 2017 08:17 AM PDT

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 10ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபேயை சந்திக்கவுள்ள பிரதமர் ரணில், மேலும் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். பிரதமர் உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினரை, அன்புடன் வரவேற்பதாகவும் இந்த விஜயத்தின் மூலம், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுமெனவும் எதிர்ப்பார்ப்பதாக, ஜப்பான் அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தில், விசேட பணிப்பொறுப்புகள் அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, […]

The post ஜப்பான் செல்கிறார் ரணில்! appeared first on TamilStar.com.

ஜனாதிபதி மைத்திரிக்கு சிவப்பு எச்சரிக்கை..!

Posted: 07 Apr 2017 08:14 AM PDT

மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி அதிகாரத்தினை உரிய வேளையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலில் தோற்று மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் அவமதிப்பினை பெற அவர் தனது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை சர்வாதிகார போக்கில் […]

The post ஜனாதிபதி மைத்திரிக்கு சிவப்பு எச்சரிக்கை..! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™