Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


அமெரிக்காவுக்கான சுற்றுலாக்களை நிறுத்தியது ரொரன்ரோ பாடசாலைகள் சபை

Posted: 27 Mar 2017 09:02 AM PDT

ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை அமெரிக்காவுக்கான கல்விச் சுற்றுலாத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம் அறிவித்துள்ள அண்மைய பயணத் தடையின் நிச்சயமற்றத் தன்மை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. ரொரன்ரோ பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரினதும் அமெரிக்க பயணங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரையில் அமெரிக்காவுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான புதிய திட்டங்கள் எவையும் […]

The post அமெரிக்காவுக்கான சுற்றுலாக்களை நிறுத்தியது ரொரன்ரோ பாடசாலைகள் சபை appeared first on TamilStar.com.

ஸ்காபரோ உணவகத்தில் கத்திக்குத்து

Posted: 27 Mar 2017 08:59 AM PDT

ஸ்காபரோவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளை கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எக்ளிங்டன் அவனியூ மற்றும அயன்வியூ வீதிப் பகுதியில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் காவல்த்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற வார்ய்த்தர்க்கத்தின் போது ஒருவர் மற்றவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கத்திக்குத்தை அடுத்து சந்தேக நபர் சம்பவ […]

The post ஸ்காபரோ உணவகத்தில் கத்திக்குத்து appeared first on TamilStar.com.

தலைவர் பிரபாகரன் காலத்தில் தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் : சிறீதரன் எம்.பி

Posted: 27 Mar 2017 08:56 AM PDT

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். விழுதுகள் நிறுவனத்தினரால் இன்று நடாத்தப்பட்ட "செங்கோலோச்ச விழையும் பெண்களுக்கோர் பாராட்டுவிழா"வில் விருந்தினராக கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் பெண்களுக்கு தனியான ஒரு இடம் இருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள், பலர் தோல்வியுற்று இருக்கிறார்கள். ஆனால் விடுதலைப் போராட்டம் […]

The post தலைவர் பிரபாகரன் காலத்தில் தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் : சிறீதரன் எம்.பி appeared first on TamilStar.com.

குற்றவாளிகளை உருவாக்கும் சமூக முரண்பாடுகளை அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

Posted: 27 Mar 2017 08:48 AM PDT

பிள்ளைகள் பரீட்சைகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் ஒழுக்க ரீதியில் சீர்கெட்டு போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பேர்கசன் உயர் பெண்கள் பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒருவர் சிறப்பாக வெற்றிப் பெறவும் மற்றுமொரு பிள்ளை பெரிய குற்றவாளியாக மாறவும் காரணமாக அமைந்துள்ள சமூக முரண்பாடுகளை நாம் தெளிவாக அடையாளம் காண வேண்டும். ஞாயிறு பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கம் எனக்கு நினைவுக்கு வருகிறது. […]

The post குற்றவாளிகளை உருவாக்கும் சமூக முரண்பாடுகளை அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

கையொப்பமிடுமாறு வற்புறுத்தல் செய்யப்படும் பசில்

Posted: 27 Mar 2017 08:44 AM PDT

இந்த அரசு செய்ய வேண்டிய அனைத்து முட்டாள் தனமான செயற்பாடுகளையும் செய்து வருகின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொடிகாவத்தையில் நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், இப்போதைய அரசு நாட்டிற்கு செய்ய வேண்டிய அனைத்து ஊழல் திருட்டு உட்பட முறையற்ற செயற்பாடுகள் என அனைத்து முட்டாள் தனமான காரியங்களையும் செய்து வருகின்றது. இது நாட்டு […]

The post கையொப்பமிடுமாறு வற்புறுத்தல் செய்யப்படும் பசில் appeared first on TamilStar.com.

சம்பந்தனை தலைமைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – சுரேஸ் போர்க்கொடி

Posted: 27 Mar 2017 08:41 AM PDT

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ஆர்.சம்பந்தனை நீக்க வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்,அவர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாது தற்போதைய அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

The post சம்பந்தனை தலைமைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – சுரேஸ் போர்க்கொடி appeared first on TamilStar.com.

தமிழக அரசியல்வாதிகள் மஹிந்த அணியினரைப் போல செயற்படுகின்றனர்! – சாடுகிறார் மனோ கணேசன்

Posted: 27 Mar 2017 07:08 AM PDT

தமிழக அரசியல்வாதிகள், இலங்கையின் கூட்டு எதிரணியினரைப் போன்று தீவிரப் போக்குடையவர்களே என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உதவி நிறுவனமொன்றால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்கி வைப்பதற்காக இலங்கைக்கு வரவிருந்த இந்திய நடிகர் ரஜினிகாந்த் நிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக, டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் எம்.பி, "தமிழ்நாடு அரசியல்வாதிகளின் உண்மையான தன்மை, […]

The post தமிழக அரசியல்வாதிகள் மஹிந்த அணியினரைப் போல செயற்படுகின்றனர்! – சாடுகிறார் மனோ கணேசன் appeared first on TamilStar.com.

அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை!

Posted: 27 Mar 2017 07:05 AM PDT

அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைத்தால், 1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹர்த்தாலை விட மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை நடத்த எண்ணியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பாரிய போராட்டத்தை நடத்துவதற்காக நாட்டை தயார்படுத்தி வருவதாகவும் அதனை நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்தே ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட நடவடிக்கை கடந்த சனிக்கிழமை ஹபராதுவ […]

The post அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை! appeared first on TamilStar.com.

ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள பௌத்தர்கள்; நாட்டை காட்டிக் கொடுக்கமாட்டார்கள்! – லக்ஸ்மன் கிரியெல்ல

Posted: 27 Mar 2017 07:04 AM PDT

ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள பௌத்தர்கள் என்பதால் நாட்டை காட்டிக்கொடுக்கமாட்டார்கள் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்று ஐக்கிய தேசிய கட்சி தமிழ், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும். அது தொடர்பில் நாம் பெருமைப்பட வேண்டும். பெரும்பான்மை சிறுபான்மை என பார்ததால் தான் நாடு பின்னடைவான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு எதிரான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

The post ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள பௌத்தர்கள்; நாட்டை காட்டிக் கொடுக்கமாட்டார்கள்! – லக்ஸ்மன் கிரியெல்ல appeared first on TamilStar.com.

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் விமல்!

Posted: 27 Mar 2017 06:48 AM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை, இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். விமலின் உடல் நிலை குறித்து வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொகமட் முஸம்மில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காகவே விமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவரது உடல்நிலை காரணமாக அவரால் […]

The post நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் விமல்! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™