Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


10வயதிற்கும் குறைந்த பிள்ளைகளுக்கு புகலிடம்: திருப்பி அனுப்பப்பட்ட தாய்

Posted: 17 Mar 2017 05:03 AM PDT

தாய் ஒருவர் தமது 10வயதுக்கும் குறைவான மூன்று பிள்ளைகளுடன் கிழக்கு ஆபிரிக்க நாடான புரூண்டியில் இருந்து விருந்தினர் நுளைவு அனுமதியில் அமெரிக்காவுக்கு தப்பி வந்துள்ள நிலையில், கனடாவில் புகலிடம் கோரியுள்ளார். குறித்த அந்த பெண்ணும் அவரின் பிள்ளைகளும் புகலிடம் நாடி குடிநுளைவுச் சாவடி ஊடாக கனடாவுக்குள் நுளைய முயன்ற வேளையில், மூன்று பிள்ளைகளும் கனடாவுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டதுடன், அந்த பெண் மாத்திரம் மீண்டும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் காரணமாகவே அவர் […]

The post 10வயதிற்கும் குறைந்த பிள்ளைகளுக்கு புகலிடம்: திருப்பி அனுப்பப்பட்ட தாய் appeared first on TamilStar.com.

தமிழர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய்உள்ளா மார்க்கம் – தோர்ண்ஹில் மத்திய இடைத் தேர்தல்:

Posted: 17 Mar 2017 05:01 AM PDT

தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரிலுள்ள மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3 ம் திகதி மத்திய பாராளுமன்றத்துக்கான இடைத் தேர்தல் நடபெறவிருக்கிறது. நீண்ட காலமாக இத் தொகுதியைப் பிரதி நிதித்துவப் படுத்தி வந்த லிபரல் கட்சியின் உறுப்பினர் ஜோன் மக்கலம் அவர்கள் பதவி துறந்ததைத் தொடர்ந்து இத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் இம் முறை ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் தமிழ் சமூகத்திலிருந்து ராகவன் பரம்சோதி எனப்படும் ஒரே ஒரு தமிழர் […]

The post தமிழர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய்உள்ளா மார்க்கம் – தோர்ண்ஹில் மத்திய இடைத் தேர்தல்: appeared first on TamilStar.com.

ஜனாதிபதியும் பிரதமரும் இரகசிய பேச்சுவார்த்தையில்…

Posted: 17 Mar 2017 04:59 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரகசிய பேச்சுவார்த்தையானது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நடப்பதாக வதந்திகள் பரவியுள்ளன. இந்த இரகசிய பேச்சுவார்த்தையில் தற்போது அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த லக்ஷ்மன் யாப்பா தெற்கு […]

The post ஜனாதிபதியும் பிரதமரும் இரகசிய பேச்சுவார்த்தையில்… appeared first on TamilStar.com.

தடைகள் இருப்பின் அதனை நீக்க வேண்டும்..! மங்களவின் கருத்துக்கு கூட்டமைப்பு பதிலடி

Posted: 17 Mar 2017 04:56 AM PDT

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைப் பொறிமுறையே வேண்டும். இந்த விடயத்தில் ஒரு போதும் மாற்றுக்கருத்து கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை நீதித்துறை பொறிமுறை தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை நியமிக்குமாறு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய […]

The post தடைகள் இருப்பின் அதனை நீக்க வேண்டும்..! மங்களவின் கருத்துக்கு கூட்டமைப்பு பதிலடி appeared first on TamilStar.com.

விபத்துக்குள்ளான நிதி அமைச்சரின் அதி சொகுசு வாகனம் – குடிபோதையால் அனர்த்தம்

Posted: 17 Mar 2017 04:53 AM PDT

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அதி சொகுசு நிஸான் பெட்ரோல் வீ8 ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிதியமைச்சர் ஹொங்கொங் விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நிதி அமைச்சில், அமைச்சருக்கு நெருக்கமான ஊழியர்கள் சிலர் அந்த ஜீப் வண்டியில் மதுபானம் அருந்த சென்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான மோட்டார் வாகனங்கள் மூன்று மாத்திரமே இலங்கையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருப்பது KY – 8306 என்ற இலக்கத்திலான மோட்டார் வாகனமாகும். எப்படியிருப்பினும் குறித்த […]

The post விபத்துக்குள்ளான நிதி அமைச்சரின் அதி சொகுசு வாகனம் – குடிபோதையால் அனர்த்தம் appeared first on TamilStar.com.

கூட்டணியின் உடன்பாடில்லாமல் அரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாது : அமைச்சர் உறுதி

Posted: 17 Mar 2017 04:49 AM PDT

தமிழ் முற்போக்கு கூட்டணியுடனான பேச்சுகள் முடிவுக்கு வந்து உடன்பாடு ஏற்படாமல், அரச பெருந்தோட்ட காணிகள் வெளியாருக்கும், ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் பகிர்ந்து அளிக்கப்படாது என அமைச்சர் கபீர் ஹாஷிம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மற்றும் அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய […]

The post கூட்டணியின் உடன்பாடில்லாமல் அரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாது : அமைச்சர் உறுதி appeared first on TamilStar.com.

காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார் மங்கள சமரவீர!

Posted: 17 Mar 2017 04:47 AM PDT

காணாமல் போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போனவர்களாக கருதப்படும் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காணாமல் போனோரின் பிரச்சினைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள, […]

The post காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார் மங்கள சமரவீர! appeared first on TamilStar.com.

கடற்கொள்ளையர்களிடமிருந்து எவ்வாறு இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டார்கள்..?

Posted: 17 Mar 2017 04:44 AM PDT

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை மீட்டு, அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் எட்டு பேரையும் எவ்வாறு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , வெளிவிவகார பிரதி அமைச்சராகிய நான், வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு கடத்தப்பட்ட கப்பலை […]

The post கடற்கொள்ளையர்களிடமிருந்து எவ்வாறு இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டார்கள்..? appeared first on TamilStar.com.

ஐ.நா கண்காணிப்பைக் கோரும் உரிமை கூட்டமைப்புக்கு உள்ளது! – மங்கள சமரவீர

Posted: 17 Mar 2017 04:41 AM PDT

ஐ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை ஐ.நா கண்காணிக்க வேண்டும் என்று கோருவதற்கான முழு உரிமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தீர்மான அமுலாக்கத்திற்கு ஐ.நா கண்காணிப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறித்து வினவிய போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா கண்காணிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு கோருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முழுமையான உரிமை உள்ளது. அவ்வாறு கோரிக்கை விடுக்க […]

The post ஐ.நா கண்காணிப்பைக் கோரும் உரிமை கூட்டமைப்புக்கு உள்ளது! – மங்கள சமரவீர appeared first on TamilStar.com.

ஜாலிய விக்ரமசூரிய நீதிமன்றில் முன்னிலை

Posted: 17 Mar 2017 04:39 AM PDT

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய,இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஜாலியவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விக்ரமசூரிய,நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜாலிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post ஜாலிய விக்ரமசூரிய நீதிமன்றில் முன்னிலை appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™