Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'நெட்டிசன்'களிடம் வறுபடும் பள்ளிக்கல்வி அமைச்சர்

Posted: 13 Mar 2017 09:27 AM PDT

கோவை: 'டிவி' கேமராமேன்களுடன், மாணவியர் பொதுத் தேர்வு எழுதும் அரங்குக்குள் சென்ற,

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை, 'நெட்டிசன்'கள் வறுத்தெடுக்கின்றனர்.
தமிழகம் முழுக்க, மார்ச் 2ல், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. சென்னை, எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் முதல் தாள் தேர்வு பணிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அப்போதைய செயலர் சபிதா ஆகிய இருவரும்
சென்றனர்.
கடும் விமர்சனங்கள்
கூடவே, அனைத்து, 'டிவி' கேமராமேன்களும் அழைத்துச்செல்லப்பட்டனர்.
தேர்வு அறைக்குள் ...

தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு! மறைமுகமாக உயர்த்தியது பழனிசாமி அரசு

Posted: 13 Mar 2017 09:41 AM PDT

சென்னை,:தமிழகத்தில், பஸ் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை, மறைமுக கட்டண உயர்வை, பழனிசாமி அரசு அமல்படுத்தி உள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

டீசல் மீதான, 'வாட்' வரி உயர்வால், போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை சரிக்கட்டவே, இந்த கட்டண உயர்வு என, அரசு தரப்பில் சமாளிக்கப்படுகிறது.
முன்னறிவிப்பின்றி
தமிழக அரசு, கடந்த வாரம், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' என்ற, மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியது. அதனால், பெட்ரோல் விலை
லிட்டருக்கு, 3.78 ...

பா.ஜ., வேட்பாளர் ஜனாதிபதியாவது உறுதி...! தேர்தல் வெற்றியால் பலம் அதிகரிப்பு

Posted: 13 Mar 2017 09:47 AM PDT

புதுடில்லி,:உ.பி., - உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றியால், ஜூலையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதனால், பா.ஜ., மேலிட தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலையுடன் முடிவடைகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு, தேர்தல் நடக்கவுள்ளது. உ.பி., சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, 325 தொகுதிகள் கிடைத்துள்ளன. உத்தரகண்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 57 பேரும், மணிப்பூரில், 21 பேரும் வெற்றி ...

'மக்களை பற்றிய கவலை பினாமி அரசுக்கு இல்லை!'

Posted: 13 Mar 2017 09:54 AM PDT

சென்னை,:'ஏழை மக்களை பற்றி, சிறிதும் கவலைப்படாத அரசாக, பினாமி தமிழக அரசு உள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:

சமீப காலமாக, ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்நிலைமையை கண்டு, மிகவும் வேதனை அடைகிறேன்.
பினாமி அரசு
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதாக நம்பியிருக்கும், ரேஷன் கடைகள் சரியாக இயங்கவில்லை; அத்தியாவசியப் பொருட்கள் சரிவர கிடைக்கவில்லை என, பாதிக்கப்பட்ட மக்கள்புகார் கூறி வருகின்றனர். ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்களை ...

முதல்வராக பரீக்கர் இன்று பதவியேற்பு கோவாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி

Posted: 13 Mar 2017 09:54 AM PDT

பனாஜி,:எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத கோவாவில், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முதல்வராக, மனோகர் பரீக்கர், இன்று மாலை பதவியேற்கிறார். இதற்காக, ராணுவ அமைச்சர் பதவியை, அவர் நேற்று ராஜினாமா செய்தார்.

முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவா உட்பட, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், 40 தொகுதிகள் உடைய கோவாவில், 17 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்., தனிப் பெரும் கட்சியாக இருந்தது. அதே நேரத்தில், 13 தொகுதிகளில் வென்ற, பா.ஜ., மற்ற சிறு கட்சிகள் மற்றும் ...

பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு தளர்வு! வங்கி, ஏ.டி.எம்.,களில் தடை நீங்கியது

Posted: 13 Mar 2017 10:03 AM PDT

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுப்பதற்கு, நான்கரை மாதமாக விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை, இந்திய ரிசர்வ் வங்கி, நேற்று தளர்த்தியது. இதனால், வங்கிகளில் பணம் எடுப்பதில், எந்த தடையும் இருக்காது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், பதுக்கலைத் தடுக்கவும், 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவம்பர், 8ல், பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகளில் தினசரி, 4,500 ரூபாய்க்கு மிகாமல், செல்லாத நோட்டுகளை கொடுத்து, செல்லத்தகுந்த ரூபாய் நோட்டுகளை பெறவும், ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் வரை பணம் எடுக்கவும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
பொதுமக்கள் ...

ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., எம்.ஜி.ஆர்., உறவினர்கள்

Posted: 13 Mar 2017 10:23 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர்.

சேவல் சின்னம் கேட்கிறார் தீபாஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார்.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,
ஜெ., அண்ணன் மகள் தீபா, ...

டி.எஸ்.பி., பணியிடம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்?

Posted: 13 Mar 2017 10:54 AM PDT

சேலம் மாநகர போலீசில், தெற்கு உதவி கமிஷனர் பணியிடத்திற்கு, 25 லட்சம் ரூபாய்க்கு, அதிகாரிகள் மறைமுக டெண்டர் விட்டுள்ளதால், டி.எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரிகள் வர தயக்கம் காட்டுகின்றனர்.

சேலம் மாநகர போலீசில், ஆறு ஸ்டேஷன்களை உள்ளடக்கியது, தெற்கு சரகம். இதன் உதவி கமிஷனராக இருந்த ரவீந்திரன், இரு மாதங்களுக்கு முன், தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அப்பணியிடம் காலியாக உள்ளது.
மாமூல் மழையில் நனையலாம்
இதை பெற, சேலத்தில் பணிபுரிந்து, பதவி உயர்வு மூலம், டி.எஸ்.பி., அந்தஸ்தை பெற்று, வெளி மாவட்டங்கள், மாநகரங்களில் பணிபுரியும் போலீஸ் ...

பன்னீர் பக்கம் செல்லும் சசிகலா அணியினர்

Posted: 13 Mar 2017 11:33 AM PDT

முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வில்வநாதன், நேற்று முன் தினம்(மார்ச் 12), காவேரிப்பாக்கத்தில் இறந்து போனார். சசிகலா ஆதரவு அ.தி.மு.க., அணியில் இருந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மரணத்துக்கு செல்லவில்லை. இதனால், கட்சியினர் பலருக்கும் தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மரணம்
முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வில்வநாதன், நேற்று முன் தினம், காவேரிப்பாக்கத்தில் இறந்து போனார். இவர் கடந்த 2001-06 காலகட்டத்தில், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும், பல ஆண்டு காலம் கட்சியின் மாவட்டச்செயலாளராகவும் இருந்துள்ளார்.
துக்கத்துக்கு ...

தி.மு.க., ஆர்ப்பாட்டம் 88 ஆயிரம் பேர் கைது

Posted: 13 Mar 2017 12:02 PM PDT

சென்னை :ரேஷன் கடைகள் முன், தி.மு.க., நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியை சேர்ந்த, 88 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்தனர்.

பினாமி' ஆட்சிசென்னை, கொளத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், மூன்று மாதங்களாக, பருப்பு, பாமாயில் சப்ளை செய்யவில்லை; மற்றபொருட்களையும், முழு அளவில் வழங்கவில்லை. தற்போது, அமைச்சர்கள் முதல், முதல்வர் வரை செயல்பட முடியாதவர்களாக உள்ளனர்.இந்த, 'பினாமி' ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு, தி.மு.க., இன்னும் பல ...

ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி

Posted: 13 Mar 2017 12:38 PM PDT

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஒரு பொறுப்பான பிரஜையாக, அந்த சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டும் என, உள்ளத்தில் குமைந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு, விடையளிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததால், அவருக்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து, அவர் பின்னால் நின்று அரசியல் செய்ய ஆசைப்பட்டு, அவர் தலைமையை ஏற்று செயல்பட முடிவெடுத்தேன் என்று, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி ...

வங்கிக்கு ரூ.114 கோடி இழப்பு; நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு

Posted: 13 Mar 2017 01:41 PM PDT

சென்னை: வங்கிக்கு, 114 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், கைதான தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு, ஜாமின் வழங்க, சென்னை சி.பி.ஐ., நீதிமன்றம்
மறுத்து விட்டது.
சென்னையில், 'ஷைலாக்' என்ற பெயரில் நிறுவனம் இயங்கி வருகிறது. பல மாநிலங்களில், 504 மொபைல் போன் கோபுரங்கள் அமைப்பதற்காக, ஆந்திர வங்கி கிளையில், கோடிக்கணக்கில் கடன் பெற்றது. ஆனால், 391 கோபுரங்கள் மட்டுமே அமைத்தது.
அதன்மூலம் வங்கிக்கு, 114 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. ராமானுஜம் சேஷரத்னம், ...

பிரட்டும், கேக்கும் வாங்க இனி ஜெயிலுக்கு போங்க!

Posted: 13 Mar 2017 02:51 PM PDT

மதுரை: மதுரை மத்திய சிறையில், தண்டனை கைதிகளால், தயாரிக்கப்படும், பிரட், கேக் ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில் விற்க, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சிறையில், 1,500 கைதிகள் உள்ளனர். இதில், 600க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். இவர்கள் தண்டனை முடித்து வெளியில் சென்று, சுய தொழில் புரியும் வகையில், பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதில் அவர்களுக்கு, கணிசமான தொகை மாத வருவாயாக கிடைக்கிறது.
சிறையில் அலுவலக கவர்கள், மழை கோட், இனிப்பு வகைகள், உற்பத்தி செய்யப்பட்டு, அரசு நிறுவனங்கள் மற்றும், 'பிரிசன் ...

ஆர்.கே.நகர் தேர்தல்: பா.ஜ., புறக்கணிப்பு?

Posted: 13 Mar 2017 03:12 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிடுவதா, வேண்டாமா என, இரட்டை மனநிலையில், தமிழக பா.ஜ., உள்ளது.
குழப்பம்:
ஆர்.கே.நகர் தொகுதியில், 2015ல் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், ஜெயலிலதாவிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல் தேர்தலை புறக்கணித்தன. 'தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் போட்டியிடவில்லை' என, அக்கட்சிகள் விளக்கம் அளித்தன. முதல்வராக இருந்த, ஜெ., மறைவால், ஏப்., 12ல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில், பங்கேற்பதா, வேண்டாமா என, பா.ஜ., குழப்பத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™