Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பனிச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

Posted: 08 Feb 2017 09:18 AM PST

பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கும் அல்பேட்டாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலையான டிரான்ஸ் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பகுதியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதனை மத்திய காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த இந்த பனிச்சரிவானது பிரிட்டிஸ் கொலம்பியாவின் எல்லையினுள், அல்பேட்டாவின் லேக் லூயிஸ் இன் மேற்கே உள்ள யோஹோ தேசியப் பூங்கா பகுதியில் நேர்ந்துள்ளதாக விபரிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து பிரிட்டிஸ் கொலம்பியாவின் பீல்ட் பகுதிக்கும், அல்பேட்டாவின் எல்லைப் பகுதிக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையின் இரண்டு பக்க […]

The post பனிச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது appeared first on TamilStar.com.

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் கனேடிய அமைச்சர்கள் பேச்சு

Posted: 08 Feb 2017 09:05 AM PST

அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் கனடாவின் முக்கிய அமைச்சர்கள் இந்த வாரத்தில் சந்திப்புக்களை நடாத்தி பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மற்ரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். அதனை அடுத்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் இரண்டுநாள் பயணமாக நேற்று செவ்வாய்கிழமை அமெரிக்கா சென்றுள்ளதுடன், அமெரிக்காவின் […]

The post அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் கனேடிய அமைச்சர்கள் பேச்சு appeared first on TamilStar.com.

வாள்வெட்டுகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அதிகபட்ச தண்டனை! – யாழ். மேல் நீதிமன்றம் எச்சரிக்கை

Posted: 08 Feb 2017 09:00 AM PST

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். ஒன்பது மாதங்களுக்கு முன்பு யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை இன்று யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்போது குறித்த பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில், பிணை […]

The post வாள்வெட்டுகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அதிகபட்ச தண்டனை! – யாழ். மேல் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on TamilStar.com.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

Posted: 08 Feb 2017 08:56 AM PST

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, கடந்தாண்டில் 9.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14.5 மில்லியன் விமான பயணிகள், விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும், வருடத்திற்கு 15 மில்லியன் வரையில் பயணிகளின் வருகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் […]

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! appeared first on TamilStar.com.

மருத்துவப் பட்டத்திற்காக தனியான சட்டத்தை கொண்டு வந்த கோத்தபாய

Posted: 08 Feb 2017 08:51 AM PST

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனியான சட்டமூலத்தின் ஊடாக கொத்தலாவல பாதுகாப்பு கல்வியல் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தை வழங்க ஆரம்பித்த போது இலங்கை மருத்துவச் சபையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்புகளை வெளியிடாது அமைதியாக இருந்ததாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு கல்வியல் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தை வழங்குவதை பல்கலைக்கழக மானியங்கள் […]

The post மருத்துவப் பட்டத்திற்காக தனியான சட்டத்தை கொண்டு வந்த கோத்தபாய appeared first on TamilStar.com.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் சதியே கேப்பாப்பிலவு போராட்டம்! – பாதுகாப்பு செயலாளர்

Posted: 08 Feb 2017 08:41 AM PST

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன், அரசியல் பின்புலத்துடன் கேப்பாப்பிலவு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதெனவும் கூறியுள்ளார். இராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 9 தினங்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]

The post வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் சதியே கேப்பாப்பிலவு போராட்டம்! – பாதுகாப்பு செயலாளர் appeared first on TamilStar.com.

இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி! தகவலை வெளியிட்ட பேராசிரியர்

Posted: 08 Feb 2017 08:36 AM PST

இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கருத்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் சதிகாரர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனினும் ஜனநாயக ரீதியாக நாடாளுமன்றத்தினூடாக நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. இதேவேளை சைட்டம் விவகாரத்தை பூதாகரப்படுத்தி இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை […]

The post இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி! தகவலை வெளியிட்ட பேராசிரியர் appeared first on TamilStar.com.

போர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் தேவையாம்!

Posted: 08 Feb 2017 08:31 AM PST

போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் காலஅவகாசம் தேவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில், இது தொடர்பில் காலஅவகாசம் கோரவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

The post போர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் தேவையாம்! appeared first on TamilStar.com.

கொலைக் குற்றச்சாட்டில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

Posted: 08 Feb 2017 08:24 AM PST

மஹிந்த ராஜபக்ஷவை கொலைக்குற்றச்சாட்டில் இருந்து தானே காப்பாற்றினேன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். "மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு கொலைகளை செய்தார் என்றும், ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்து கேள்விப்பட்டதும் எனது நண்பரான அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்தேன். இதன்போது, தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை என கூறிய மஹிந்த, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட 10 நிமிடங்களுக்கு முன்பதாகவே தான் […]

The post கொலைக் குற்றச்சாட்டில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்! appeared first on TamilStar.com.

சீனாவுடனான உறவை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டது! – நாமல்

Posted: 08 Feb 2017 08:14 AM PST

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் நிலவிய உறவு தொடர்பில் இந்தியா தவறான புரிந்துணர்வுடன் இருந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள்ள உறவு குறித்து இந்தியா அமைதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே நாமல் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ‘தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு சொந்தமான வளங்களை பிற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் […]

The post சீனாவுடனான உறவை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டது! – நாமல் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™