Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


மார்க்கம் பகுதியில் வீடு தீக்கிரை

Posted: 06 Feb 2017 11:16 AM PST

மார்க்கம் பகுதியில் Berczy Villageஇல் நேற்று இரவு ஏற்பட்ட தீ பரவலில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. தீக்கிரையான அந்த வீடு 16th Avenue மற்றும் Kennedy வீதிப் பகுதியில், Beckett Avenueவில் அமைந்துள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீடுட்டில் தீப்பரவல் ஏற்பட்டதான தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்த போது, வீட்டுப் பகுதி கடுமையான கரும்புகையினால் சூழ்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் வீட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக தப்பித்துள்ளதாகவும், இந்தச் சம்பவத்தில் எவரும் […]

The post மார்க்கம் பகுதியில் வீடு தீக்கிரை appeared first on TamilStar.com.

ரொரன்ரோ – சிறப்பு வானிலை எச்சரிக்கை

Posted: 06 Feb 2017 11:10 AM PST

ரொரன்ரோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பகுதிகளுக்கு இந்த வாரத்தின் அடுத்து வரும் சில நாட்களுக்களில் நிலவக்கூடிய கடுமையான குளிர் தொடர்பில் சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடா சுற்றுக் சூழல் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அந்த சிறப்பு வானிலை எச்சரிக்கையில், அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்தான தாழ் அமுக்க நிலைமை வடகிழக்காக தெற்கு ஒன்ராறியோவை தாக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செவ்வாய்கிழமை தெற்கு ஒன்ராறியோவில் குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதனால் பனிப்பொழிவு, உறைபனி மழை […]

The post ரொரன்ரோ – சிறப்பு வானிலை எச்சரிக்கை appeared first on TamilStar.com.

கனடா வாழ் ஈழத் தமிழ் கவிஞர் சேரனுக்கு கிடைத்த சர்வதேச விருது!

Posted: 06 Feb 2017 08:37 AM PST

கனடாவில் வாழும் கவிஞர் கலாநிதி சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு ONV அறக்கட்டளை மூலம் கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார். இந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனடா வாழ் ஈழத் தமிழ் கவிஞர் சேரனுக்கு கிடைத்த சர்வதேச விருது! appeared first on TamilStar.com.

சமாதானம் கேட்டவர்களை சுட்டதாக மகிந்த – இறந்தவர்கள் தோற்றவர்கள் அல்ல என மைத்திரி

Posted: 06 Feb 2017 08:30 AM PST

கடந்த கால ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும், மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையேயும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. அண்மையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை இதனை தெளிவு படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரி அண்மைய சுதந்திரத் தின நிகழ்வில் ஆற்றிய உரையில் கூறியதாவது, கடந்த 30 வருடத்திற்கும் மேல் தொடர்ந்து வந்த யுத்தம் காரணமாக பலர் அங்கவீனம் அடைந்தார்கள் அப்பாவி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இராணுவத்தரப்பிலும் […]

The post சமாதானம் கேட்டவர்களை சுட்டதாக மகிந்த – இறந்தவர்கள் தோற்றவர்கள் அல்ல என மைத்திரி appeared first on TamilStar.com.

கேப்பாப்புலவு மக்களின் நிலைகுறித்து பாதுகாப்பு அமைச்சு எந்த பதிலும் தரவில்லை : சம்பந்தன்

Posted: 06 Feb 2017 08:27 AM PST

கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு இதுவரை எந்த விதமான பதிலையும் வழங்கவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் விடுக்க வேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பந்தன், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து […]

The post கேப்பாப்புலவு மக்களின் நிலைகுறித்து பாதுகாப்பு அமைச்சு எந்த பதிலும் தரவில்லை : சம்பந்தன் appeared first on TamilStar.com.

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஜே.வி.பியின் ஆசிர்வாதமும் உள்ளது

Posted: 06 Feb 2017 08:23 AM PST

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பாவை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரதமரின் கைப்பாவையான நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் முழுமையான ஆசிர்வாதம் இருக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கணக்காய்வு அறிக்கை மூலம் முக்கிய அமைச்சர்களின் கொள்ளையடிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிதி மோசடி விசாரணைப் […]

The post நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஜே.வி.பியின் ஆசிர்வாதமும் உள்ளது appeared first on TamilStar.com.

ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு நேர்ந்த நிலை நல்லாட்சிக்கு நேரலாம் – முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

Posted: 06 Feb 2017 08:20 AM PST

நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நிதி மோசடி உட்பட முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவற்றை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காது போனால், ஊழல், மோசடிகளில் தற்போதைய அரசாங்கமும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் நிலைமைக்கு சென்று விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் திருடர்கள், மோசடியாளர் பற்றி தகவல் வெளியிடும் முன்னார் தற்போதைய அரசாங்கத்தின் திருடர்கள் பற்றி பேச நேர்ந்துள்ளது எனவும் அவர் […]

The post ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு நேர்ந்த நிலை நல்லாட்சிக்கு நேரலாம் – முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை appeared first on TamilStar.com.

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு கோருகிறார் விக்னேஸ்வரன்!

Posted: 06 Feb 2017 08:07 AM PST

மட்டக்களப்பில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தமது அழைப்பு கட்சி, மதம், இனம் சார்ந்ததோ அல்ல எனத் தெரிவித்த முதலமைச்சர் தமது அழைப்பு தமிழ்மொழி சார்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து எழுக தமிழ் பேரணி ஆரம்பித்து நாவற்குடா விவேகானந்தா மைதானத்தில் எழுக தமிழ் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எழுக […]

The post எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு கோருகிறார் விக்னேஸ்வரன்! appeared first on TamilStar.com.

அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது

Posted: 06 Feb 2017 06:53 AM PST

அடுத்த சில தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அமைச்சரவை மாற்றம் சில மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசேட பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்திருந்தார். இந்த […]

The post அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது appeared first on TamilStar.com.

சுமந்திரனுக்கே இந்த நிலை, மஹிந்தவை விடுவார்களா? – பதறுகிறார் கம்மன்பில

Posted: 06 Feb 2017 06:43 AM PST

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளமையால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை மீள வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். சுமந்திரனைக் கொலை செய்ய அவர்கள் முயற்சி செய்வார்களாயின், மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து நினைத்துப் பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். 2017ம் ஆண்டு ஜனவரி 13ம் திகதி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிளைப்பில் கிளிநொச்சியில் வைத்து மூன்று புலிப் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் […]

The post சுமந்திரனுக்கே இந்த நிலை, மஹிந்தவை விடுவார்களா? – பதறுகிறார் கம்மன்பில appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™