Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அவதூறு வழக்கில் பதிலளிக்க ஜெயலலிதாவுக்கு அவகாசம்

Posted: 21 Sep 2016 09:33 AM PDT

அவதுாறு வழக்குகளை எதிர்த்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தொடர்ந்துள்ள வழக்கில் பதிலளிக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு, சுப்ரீம் கோர்ட், இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக, தங்கள் மீது பல்வேறு அவதுாறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளதை எதிர்த்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம், 24ல், இந்த வழக்கின் விசாரணை யின் போது, 'அரசியல் காரணங் களுக்காக அவதுாறு வழக்கை தொடரக்கூடாது; விமர்சனங் களை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் தேவை. தனிப்பட்ட ...

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க ஒப்புதல்!: மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Posted: 21 Sep 2016 09:33 AM PDT

கடந்த, 92 ஆண்டுகளாக பின்பற்றப்படும் மரபில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் நிகழ்வாக, பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை ஒருங்கிணைக்க, மத்திய அரசு நேற்று முடிவு செய்துள்ளது.

பொது பட்ஜெட்டை, ஜனவரி, 25க்குள் தாக்கல் செய்வதற்கான, முதற்கட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. நாடு சுதந்திரம் அடையும் முன், பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1921ல், ரயில்வே துறைக் கென தனி பட்ஜெட் சமர்ப்பிக்க, 'அவ்கோர்த் கமிட்டி' பரிந்துரைத்தது; அதன் அடிப்படையில், 1924 முதல், ரயில்வே பட்ஜெட் தனியாக சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ...

'மோடி தூண்டுதலால் வழக்கு': டில்லி முதல்வர் அலறல்

Posted: 21 Sep 2016 09:41 AM PDT

புதுடில்லி: ''டில்லி பெண்கள் ஆணைய நியமனங்களில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில்,பிரதமர் மோடியின் துாண்டுதலால் என் மீதும், எப்.ஐ.ஆர்., எனப் படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. டில்லி பெண்கள் ஆணையத்தில் நடந்த பல்வேறு நியமனங்களில் மோசடி நடந்ததாக, அதன் தலைவர் ஸ்வாதி மலிவால் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் ...

நாடு முழுவதும் மதுவிலக்கு? : 30ம் தேதி முடிவு தெரியும்

Posted: 21 Sep 2016 09:45 AM PDT

நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, வரும், 30ல், விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகரு மான அஸ்வினி குமார் உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியுள்ளதாவது:
அரசுகளின் கடமை
அரசியலமைப்பு சட்டத்தின்படி, பொதுமக்களின்
ஆரோக்கியம், உடல்நலத்தை பாதுகாக்க வேண்டி யது, மாநில அரசுகளின் கடமை. உடல் நலத்துக் கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக் கக் கூடிய மதுபானங்கள் உள்ளிட்ட போதையை ஏற்படுத்தும் ...

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கர்ப்பிணியை சுமந்து சென்ற கணவர்

Posted: 21 Sep 2016 09:50 AM PDT

ராய்கர்: உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராத தால், பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி மனைவியை, அவரது கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம்,ஒடிசாவில் அரங்கேறி உள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கல்யாண்சிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர், சம்பாரு பிராஸ்கா; இவரது மனைவி பங்காரி. கர்ப்பிணியான பங்காரிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது கணவர், '108' ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்தார். பலமுறை போன் செய்தும் ஆம்புலன்ஸ் வராத தால், பிரசவ வலியால் துடித்த பங்காரியை, அவரது கணவர், தன் தோளில் சுமந்து, 1 ...

ஜம்மு - காஷ்மீர் எல்லை பயங்கரவாதிகளை வலிமையாக 'தாக்குங்கள்!': இந்திய பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி உத்தரவு: 'மென்மையான போக்கு வேண்டாம்' என்றும் கட்டளை

Posted: 21 Sep 2016 10:17 AM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, 'எல்லை தாண்டி அத்துமீறி நுழைய முயற்சிக்கும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கர வாதிகள் மீது, மிகவும் வலிமையான தாக்குதல் நடத்த வேண்டும்' என, பாதுகாப்புப் படையின ருக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள் ளார்.

முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப் பட்டான். அதைத் தொடர்ந்து, அங்கு, இரண்டு மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது.'பாகிஸ்தான் ஆதரவு ...

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது கர்நாடக அரசு அறிவிப்பு

Posted: 21 Sep 2016 10:26 AM PDT

பெங்களூரில் நேற்று நடந்த கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில், 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்துக்கு, காவிரியில் இருந்து, 6,000 கனஅடி நீர் திறந்து விட, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகா முதல் வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா தலைமையில், பெங்களூரு வில், மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது.இதில், காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க, வரும், 24ல், சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து, மாலையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை, ...

தனி உதவியாளர் மாற்றத்தை எதிர்த்து: ஐகோர்ட்டில் ஸ்டாலின் மனு

Posted: 21 Sep 2016 10:46 AM PDT

சென்னை:சிறப்பு தனி உதவியாளரை, தலைமை செயலக பணிக்கு மாற்றியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை, வரும், 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின், தாக்கல் செய்த மனு:
தனி உதவியாளர் பதவியை, சிறப்பு தனி உதவியாளராக உயர்த்தி, ஆதிசேஷன் என்பவரை, அதில், நியமித்தனர். சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பின், சிறப்பு தனி உதவியாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. 2016, ஜூன், 17ல், சிறப்பு தனி உதவியாளராக பணியாற்ற துவங்கினார். சட்டசபையில் இருந்து, ...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: தி.மு.க.,வினர் தயக்கம் ஏன்?

Posted: 21 Sep 2016 10:51 AM PDT

இட ஒதுக்கீடு மற்றும் கூட்டணி குழப்பம் காரணமாக, வரும் உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட, அக்கட்சியினர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆளும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்கட்சி யாகி விட்டது. இதனால், 'மக்கள் செல்வாக்கு தனக்கு கொஞ்ச மும் குறைய வில்லை' என, ஜெயலலிதாவும்; 'மக்கள் செல்வாக்கு எங்களுக்கு தான் உள்ளது' என கருணாநிதியும், உள்ளாட்சி தேர்தல் மூலம்நிரூபிக்கும் முயற்சி யில் இறங்கி உள்ளனர்.இதற்காக, எப்படியும் வெற்றி பெறும் முயற்சி யில் ...

ஐ.நா.,வில் பர்ஹான் வானிக்கு ஆதரவாக பேசிய நவாஸ்; பதிலடி தந்தது இந்தியா

Posted: 21 Sep 2016 11:44 AM PDT

புதுடில்லி: ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பயங்கரவாதி பர்ஹான் வானியை புகழ்ந்து பேசிய பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்ததாவது: ஐ.நா.,வில் பேசிய பாக்., பிரதமர் நவாஸ் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. பர்ஹான் வானி ஒரு பயங்கரவாதி. வானி பெயரை ஐ.நா.,வில் எழுப்பிய நவாஸ், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரையில், பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரே ஒரு நிபந்தனைதான் விதிக்கிறது. அது, பயங்கரவாதத்தை தூண்டிவிடாமல், ...

கர்நாடகாவில் மொழி உணர்வை தூண்டுகிறது காங்., : பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 21 Sep 2016 01:07 PM PDT

சென்னை : மொழி உணர்வை தூண்டி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்., நினைக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: பா.ஜ., கட்சி அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி செயல்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்., மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். எனவே தான் மொழி உணர்வை தூண்டி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்., நினைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ...

யூரி பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாக்., ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து

Posted: 21 Sep 2016 02:26 PM PDT

இஸ்லாமாபாத்: யூரி ராணுவமுகாம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் தனது விமானங்கள் பலவற்றை ரத்து செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள யூரி ராணுவ முகாம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 18க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதி வழியாக செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ரத்து ...

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் நாடு திரும்பினார்

Posted: 21 Sep 2016 03:09 PM PDT

புதுடில்லி : பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தாயகம் திரும்பினார். டில்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான 15வது பாராலிம்பிக் போட்டியில், 159 நாடுகளை சேர்ந்த மொத்தம் 4,342 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற 19 வீரர்கள் 4 பேர் பதக்கம் வென்றனர். இதில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 43வது இடம் பிடித்தது.
தமிழக வீரர் மாரியப்பன், உயரம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™