Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'கறுப்பு பண தகவல் ரகசியம் காக்கப்படும்'

Posted: 19 Sep 2016 11:02 AM PDT

புதுடில்லி: 'கறுப்பு பணம் குறித்து தாமாகவே முன்வந்து தகவல் தெரிவிக்கும் திட்டத்துக்கு, மேலும், 11 நாட்களே அவகாசம் உள்ளது; கறுப்பு பணம் குறித்த தகவல்களின் ரகசியம் காக்கப்படும்' என, வருமான வரித்துறை, எஸ்.எம்.எஸ்., மூலம் பிரசாரம் செய்து வருகிறது.
கறுப்பு பணத்தை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டில் பதுக்கியுள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை, சம்பந்தபட்டவர்கள், தாங்களாகவே முன்வந்து தெரிவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை கணக்கில் காட்டாத சொத்துக்கள், முதலீடுகள் குறித்து தெரிவித்து, ...

ரூ.39 கோடி வரி பாக்கி செலுத்த திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு

Posted: 19 Sep 2016 02:26 PM PDT

திருப்பதி: திருப்பதி நகராட்சிக்கு, 39 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்த, தேவஸ்தானம் மறுத்துள்ளது.
திருப்பதியில், தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ சத்திரங்கள் உள்ளன. இவற்றுக்காக, திருப்பதி நகராட்சிக்கு, தேவஸ்தானம் ஆண்டுதோறும் சொத்துவரி செலுத்த வேண்டும்; 12 ஆண்டுகளாக, தேவஸ்தானம் வரி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி, 39 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
'தேவஸ்தானம், பக்தர்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்பதால் சொத்து வரி செலுத்த தேவையில்லை' என, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். அதனால், ...

2 லட்சம் வீடுகள் விற்பனை நீதிமன்ற தடையால் முடக்கம்

Posted: 19 Sep 2016 09:23 AM PDT

அங்கீகாரமற்ற மனை பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையால், தமிழகம் முழுவதும், இரண்டு லட்சம் வீடுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடையை மீறி : விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்கக் கோரிய வழக்கில், அங்கீகாரமற்ற மனை விற்பனை பதிவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது; தடையை மீறி, சில இடங்களில் பத்திரப்பதிவு நடந்தது குறித்து, பதிவுத் துறையிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவில், அங்கீகாரம் இல்லாத மனைகள், அதில் x
மனைகளில், புதிதாக உள்ளாட்சி அனுமதியுடன், சிறிய அபார்ட்மென்ட்கள் கட்டப்பட்டு உள்ளன.இத்தகைய கட்டடங்களில், ...

'தனிமைப்படுத்துங்கள்!' இந்தியாவைத் தொடர்ந்து தாக்கும் பாகிஸ்தானை... ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் வலியுறுத்த மோடி ஆலோசனை ஜம்மு - காஷ்மீரில் இந்திய படை மீதான தாக்குதலால் கடுங்கோபம்

Posted: 19 Sep 2016 09:39 AM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடுங்கோபமடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் உட்பட, சர்வதேச அரங்கில், அதன் முகத்திரையை கிழிக்கும் விதமாக, ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தினர்; இதில், 17 ராணுவ வீரர்கள் ...

உளவு விமான தொழில்நுட்பத்தால் ஆந்திராவில்...புரட்சி ! மக்களுக்கு துரித சேவை வழங்க சந்திரபாபு அதிரடி

Posted: 19 Sep 2016 09:44 AM PDT

தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வமிக்க, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பல துறைகளில், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவரான இவர், தெலுங்கானா பகுதிகள் சேர்ந்த, ஒன்றுபட்ட மாநிலமாக, ஆந்திரா இருந்தபோது, ஐதராபாத் நகரில், ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை, தொழில் துவங்கச் செய்தார்.
தொழில்நுட்ப புரட்சி
அதனால், தகவல், தொழில்நுட்பத் துறையில், ...

'காவிரி குடும்பம்' அமைப்பை மீண்டும் உருவாக்க திட்டம்

Posted: 19 Sep 2016 09:55 AM PDT

பெங்களூரு: காவிரி பிரச்னைக்கு தீர்வு காண, அரசியல் கட்சிகள் தொடர்பற்ற, தமிழக- - கர்நாடக விவசாயிகள் ஒருங்கிணைந்து, 2003ல் துவங்கிய, 'காவிரி குடும்பம்' அமைப்பை மீண்டும் உருவாக்க, கர்நாடக விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
காவிரி நீர் விவகாரத்தில், அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த, தமிழக- - கர்நாடக விவசாயிகள், 2003ல், பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரை, இரு மாநிலங்களிலுமிருந்து தேர்வு செய்து, 'காவிரி குடும்பம்' என்ற அமைப்பை உருவாக்கினர். காவிரி பிரச்னைக்கு தீர்வு காண
, இவர்களே அணைகளுக்கு ...

தினமும் 3,000 கன அடி தண்ணீர்: கர்நாடகாவுக்கு கண்காணிப்பு குழு உத்தரவு

Posted: 19 Sep 2016 10:05 AM PDT

'நாளை முதல் இம்மாத இறுதி வரை, தினமும், வினாடிக்கு, 3,௦௦௦ கன அடி வீதம், அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்' என, கர்நாடகா அரசுக்கு, காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கடந்த வாரம், காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நடந்தது; இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கண்காணிப்புக் குழுவின் அடுத்த கூட்டம், டில்லியில் உள்ள மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில் நேற்று நடந்தது.குழுவின் தலைவரும், நீர்ப்பாசனத்துறை செயலருமான, சசி சேகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ...

ராம்குமார் தற்கொலை விவகாரம் புழல் சிறையில் நீதிபதி விசாரணை

Posted: 19 Sep 2016 10:15 AM PDT

புழல்: மத்திய சிறையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, திருவள்ளூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, நேற்று, மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்.

சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள, 'டிஸ்பென்சரி' பிளாக்கில், சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் அடைக்கப்பட்டிருந்தான். இன்று, அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ராம்குமார், மின் இணைப்பு ஒயரை கடித்து, உடலில் மின்சாரம் பாய செய்து, தற்கொலை செய்து கொண்டான்; இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்று மணி நேரம் விசாரணை ...

உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., தயார்

Posted: 19 Sep 2016 10:26 AM PDT

சென்னை,:'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்; பூர்த்தி செய்த மனுக்களை, 30ம் தேதி வரை வழங்கலாம்' என, தே.மு.தி.க., அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவி விருப்ப மனுக்கள், சென்னை, கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளன. மற்ற இடங்களுக்கான மனுக்கள், அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் வழங்கப்படும். மாநகராட்சி கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், 3,000 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் ...

உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு தி.மு.க., - காங்., பேச்சில் சிக்கல்

Posted: 19 Sep 2016 10:32 AM PDT

தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் பங்கீடு குறித்து, இருவரும் பேசி உள்ளனர்; ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த, காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதன்பின், கருணாநிதியை, திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.அப்போது நடந்த பேச்சு குறித்து, காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது:சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; அதில், எட்டு ...

மின் வாரியத்தில் 'நத்தம்' செய்த முறைகேடு தனிக்குழு அமைத்து விசாரிக்க வலியுறுத்தல்

Posted: 19 Sep 2016 10:35 AM PDT

மின் துறை அமைச்சராக, நத்தம் விஸ்வநாதன் பதவி வகித்த போது, மின் வாரியத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தனிக்குழு அமைத்து, முதல்வர் விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின் துறை அமைச்சராக இருந்தவர், நத்தம் விஸ்வநாதன். மின் துறையின் கீழ் இயங்கும் மின் வாரியம், தனியாரிடம் இருந்து மின்சாரம், உபகரணம், நிலக்கரி கொள்முதல் செய்கிறது. புது துணை மின் நிலையங்கள் அமைப்பது மற்றும் வழித்தடங்கள் உள்ளிட்ட, கட்டுமான பணிகளையும் மேற்கொள்கிறது. இதற்காக ஆண்டுதோறும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது.நத்தம் விஸ்வநாதன் ...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு

Posted: 19 Sep 2016 11:32 AM PDT

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின் அங்கிருந்து தப்பித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.
உரி தாக்குதல் அரங்கேறிய அடுத்த நாளே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உரி ...

முலாயமிற்கு எதிரான மனு தள்ளுபடி

Posted: 19 Sep 2016 12:17 PM PDT

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் முலாயம் சிங் யாதவ்விற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 2003 - 2007ல், அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது, அவரும், அவரது குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக, 100 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து, வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி, 2007ல், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று, சி.பி.ஐ., விசாரணை ...

வயதானவர்களின் ஆரோக்கியத்தை காக்கும் சிரிப்பு பயிற்சி: அமெரிக்க மருத்துவர்கள் தகவல்

Posted: 19 Sep 2016 01:33 PM PDT

அட்லான்டா: வயதானவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு சிரிப்பு பயிற்சி மருந்தாக இருக்கும் என அமெரிக்காவின் ஜியோர்கியா மாகாண பல்கலை மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக மனிதர்கள் 50 வயதினை தாண்டும் போது அவர்களது ஆரோக்கியம் பல வகையான நோய்களால் பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. நீரிழிவு, ஆஸ்துமா, நரம்புதளர்ச்சி, மூட்டுவலி போன்ற நோய்கள் வயதான காலத்தில் வருகின்றன.
இந்த நோய்களின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வயதானவர்கள் உட்பட எந்த வயதினராக இருந்தாலும் மருத்துகளை மட்டும் நம்பாமல் சில இயற்கையான வழிமுறைகளையும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™