Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


காயமடைந்த தீயணைப்புபடை வீரர் உயிரிழப்பு

Posted: 17 Jul 2016 09:18 PM PDT

y

yAmherstview பகுதியின் அடுக்குமாடிக் கட்டம் ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையின் போது மோசமான காயங்களுக்கு உள்ளான தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் உயிரிழப்பிற்கு Loyalist Township தீயணைப்பு திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த வீரர் 45 வயதான Patrick Pidgeon என அந்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

குடும்பத் தலைவரும், தந்தையுமான இவர் கனேடிய படையின் போர் வீரராக இருந்து பாதுகாப்புக் கடமைகளுக்காக ஆப்கானிஸ்தானுக்கு இரண்டுமுறை சென்று வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.y

இதேவேளை அந்த கட்டத்தில் ஏற்பட்ட தீயினால் வேறு எவரும் காயமடையவில்லை என்றும், கட்டத்தில் தீ ஏற்பட்டமைக்காக காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் காவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post காயமடைந்த தீயணைப்புபடை வீரர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரஸ்யாவை முற்றாக தடை செய்யுமாறு கோரிக்கை

Posted: 17 Jul 2016 07:19 AM PDT

lk

lkஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரஸ்யாவை முற்றாக தடை செய்யுமாறான கோரிக்கையை கனடாவும் ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் றியோ டீ ஜெனீரோவில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரஸ்யாவை முற்றாக தடை செய்யுமாறு குறிப்பிட்ட எண்ணிக்கையான நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஸ்யாவை தடைசெய்யுமாறான கோரிக்கையை விடுக்கும் நாடுகளில் அமெரிக்காவும், கனடாவுமே முன்னணியில் திகழ்வதாக ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பட் ஹிக்கி(Pat Hickey) தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விதிமுறைகள் சிலவற்றை ரஷ்யா மீறியுள்ளதாக தெரிவித்து, ஒட்டுமொத்த ஒலிம்பிக் போட்டியில் இருந்தே ரஷ்யாவை தடை செய்யவேண்டும் என இந்த நாடுகள் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.lk

சில விதி மீறல்கள் காரணமாக ரஷ்யாவுக்கு ஏற்கனவே விளையாட்டுத்துறை தடைகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பட் ஹிக்கி, அதேவேளை குறித்த இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவை முற்றுமுழுதாக தடைசெய்யக் கோரும் அமெரிக்கா மற்றும் கனடாவின் முனைப்பு தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் றியோ டீ ஜெனீரோவில் விரைவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து ரஷ்யாவை தடைசெய்யக் கோரும் இந்த முனைப்புக்கு யேர்மனி, நியூசிலாந்து, யப்பான், பிரான்ஸ், டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் விளையாட்டுத் துறையினரின் ஆதரவும் பலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

The post ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரஸ்யாவை முற்றாக தடை செய்யுமாறு கோரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க் பகுதி விபத்தில் 50 வயது பெண் படுகாயம்

Posted: 17 Jul 2016 07:14 AM PDT

iu

iuநேற்று இரவு நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உயிராபத்தான நிலையில் உள்ளதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த வழியே வந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

Bestview Drive மற்றும் Steeles Avenue East பகுதியில் நேற்று இரவு 9.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், அந்த விபத்தில் காயமடைந்த பெண் 50 வயது மதிக்கத் தக்கவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த பெண் படுகாயமடைந்த நிலையில் ரொரன்ரோ சணிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.iu

விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகின்ற போதிலும், அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இந்த விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

விபத்துத் தொடர்பில் காவல்த்துறையினரின் விசாரணைகள் தொடர்வதாக கூறப்படுகிறது.

The post நோர்த் யோர்க் பகுதி விபத்தில் 50 வயது பெண் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™