Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஃபோர்ட் மக்முர்றி மக்களுக்கு நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள்

Posted: 11 May 2016 10:28 AM PDT

oui

ouiஅல்பேர்ட்டாவின் வீடமைப்பு நிறுவனம் ஒன்று இடம்பெயர்ந்த ஃபோர்ட் மக்முர்றி மக்களுக்கு நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகளை தற்காலிகமாக வழங்குகின்றது.

எட்மண்டன், கல்கரி மற்றும் சாஸ்கட்டூன் ஆகிய பகுதிகளிலேயே குறித்த குடியிருப்பு வீடுகளை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

அந்த குடியிருப்பு வீடுகளில் இடம்பெயர்ந்த ஃபோர்ட் மக்முர்றி மக்கள் 3மாதங்களுக்கு வாடகை செலுத்தாது தங்க முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு நாள் ஆவதற்குள்ளேயே பெரும்பாலான குடியிருப்புகள் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி விட்டதாக அந்த வீடமைப்பு நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.oui

கடந்த வாரம் ஃபோர்ட் மக்முர்றி பகுதியை சூழ்ந்த காட்டுத் தீயினால் அங்கிருந்த 80,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியிருந்தனர்.

அத்துடன் அந்த நகரில் இருந்த 25,000 கட்டிடங்களில், வீடுகள் உட்பட சுமார் 2,400 கட்டிடங்கள் அழிந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஃபோர்ட் மக்முர்றி மக்களுக்கு நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிற்ரோபா மற்றும் ஒன்ராறியோ எல்லைப் பகுதியிலும் காட்டுத் தீ

Posted: 11 May 2016 10:25 AM PDT

j

jமனிற்ரோபா மற்றும் ஒன்ராறியோ எல்லைப் பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளதாகவும், தற்போது அது பரந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாய்கிழமை மனிற்ரோபா அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் Caddy Lake இல் ஏற்பட்ட தீ 51 சதுர கிரோமீற்றர் பரப்பாக இரட்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்ராரியோ தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.j

Beresford Lake பகுதி காட்டு தீயும் மேலும் பரவி ஒன்ராரியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக 560 கிலோமீற்றர் சதுரப் பரப்பை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் மனிற்ரோபா தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Nopiming Provincial Park இன் ஒரு பகுதியில் இருந்த விடுதிகள் தங்குமிடங்களில் இருந்தவர்கள் இந்த வாரத்தின் அரம்பத்தின் போதே அங்கிருந்து வெளியேற்றப்ப்டிருந்தனர்.

The post மனிற்ரோபா மற்றும் ஒன்ராறியோ எல்லைப் பகுதியிலும் காட்டுத் தீ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™