Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மல்லையாவுக்கு என்ன தண்டனை?ஐதராபாத் கோர்ட் 9ல் தீர்ப்பு!

Posted: 05 May 2016 09:39 AM PDT

ஐதராபாத்,:தெலுங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. தலைநகர் ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தை, ஜி.எம்.ஆர்., ஐதராபாத் சர்வதேச விமான நிறுவனம் பராமரித்து வருகிறது.

விஜய் மல்லையாவின், கிங்பிஷர் நிறுவனத்தின் விமானங்கள், ஐதராபாத் விமான நிலையத்தை பயன்படுத்திய வகையில், ஜி.எம்.ஆர்., நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்டியிருந்தது. இதற்காக, தலா 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு, 'செக்'குகளை, ஜி.எம்.ஆர்.,நிறுவனத்துக்கு, விஜய் மல்லையா வழங்கி இருந்தார். ஆனால், இவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டன. ...

தங்க நகை மீதான கலால் வரியை ரத்து செய்ய...மறுப்பு லோக்சபாவில் நிதியமைச்சர் திட்டவட்டம்

Posted: 05 May 2016 09:48 AM PDT

புதுடில்லி,: ''தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள, 1 சதவீத கலால் வரியை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை; இந்த வரியை கண்டிப்பாக செலுத்த வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தங்க நகைகளுக்கு, 1 சதவீத கலால் வரியை விதித்து, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு தங்க நகைக் கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; நாடு முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவசேனா வலியுறுத்தல்இந்த வரியை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரி வந்தன. ...

தண்ணீர் ரயில் வேண்டாம்: திருப்பி அனுப்பியது உ.பி., அரசு

Posted: 05 May 2016 10:02 AM PDT

லக்னோ,: வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, பந்தல்கண்ட் பகுதிக்கு ரயில்வே அமைச்சகம் அனுப்பிய தண்ணீர் ரயிலை ஏற்க, உத்தர பிரதேச அரசு மறுத்துவிட்டது.

உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள பந்தல்கண்ட் பகுதி, கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. 'போர்வெல்' குழாய்களில் தண்ணீர் வறண்டு விட்டது. இந்தப் பகுதியில், 40க்கும் அதிகமான கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது.மஹாராஷ்டிர மாநிலத்தில், கடும் வறட்சியால் சிக்கித் தவிக்கும் மராத்வாடா பகுதிக்கு, ரயில் ...

தி.மு.க., - காங்., அணியை விரட்டி அடியுங்கள்: பெருந்துறை பிரசாரத்தில் ஜெ., ஆவேசம்

Posted: 05 May 2016 10:15 AM PDT

சேலம்,: ''தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்,'' என, பெருந்துறையில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

விலை உயர்வு : ஈரோடு, திருப்பூர் மாவட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: 'அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது' என, கருணாநிதி பொய் பிரசாரம் செய்கிறார். அகில இந்திய அளவிலான விலைவாசி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் உள்ளிட்டவைகளால், நாடு முழுவதும் விலை உயர்வு ஏற்படுகிறது. இந்த கொள்கைகள் அனைத்தும், மத்திய ...

அ.தி.மு.க., - பா.ஜ., ரகசிய உடன்பாடு சென்னை பிரசாரத்தில் சோனியா ஆவேசம்

Posted: 05 May 2016 10:19 AM PDT

''அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் ரகசிய உடன்படிக்கை இருக்கிறது,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம் சாட்டினார்.

சென்னை தீவுத்திடலில், நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் சோனியா பேசியதாவது: வரலாறு காணாத வகையில், சென்னையில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்ட போது வீடுகளையும், உடைமைகளையும் பலர் இழந்தனர். பெரு வெள்ளத்தில் சிக்கி, நுாற்றுக் கணக்கான மக்கள் இறந்தனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அ.தி.மு.க., அரசு உதவி செய்ய முன்வரவில்லை. மக்களுக்கு மக்களே உதவி செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடன் பிரச்னையால், விவசாயிகள் தற்கொலைக்கு ...

தமிழகத்தை குட்டிச்சுவராக்கியது ஜெ., ஆட்சி: கருணாநிதி காட்டம்

Posted: 05 May 2016 10:21 AM PDT

''தமிழகத்தை சீரழித்ததோடு, குட்டிச்சுவராக்கிய ஜெ., மீண்டும் வெற்றி பெறுவோம் என்றால் என்ன நியாயம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நேற்று இரவு சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பேச்சு, தமிழக ஆட்சியின் நிலையை படம் பிடித்து காட்டியுள்ளது. 1980 தேர்தலின் போது, காங்கிரஸ் - தி.மு.க., இடையே கூட்டணி ஏற்பட்டது.அப்போது ...

கருணாநிதியின் மதுவிலக்கு முடிவுக்கு 'வாட்ஸ் ஆப்' : ஸ்டாலின் புது விளக்கம்

Posted: 05 May 2016 10:56 AM PDT

ராஜபாளையம்,:"குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுப்பது 'வாட்ஸ்ஆப்' மூலம் பரவ, இது கலாசார கேடு என கருதி, ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்ககூடாது என கருணாநிதி முடிவு செய்தார்," என தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் புது விளக்கம் அளித்துள்ளார் .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா, இதுவரை இந்த தொகுதிக்கு வந்து உள்ளாரா? இன்று சென்னை உட்பட பல இடங்களில் மதுவிலக்கு கோரி போராட்டம் நடந்து உள்ளது. இதில் ஈடுபட்ட பெண்களை போலீஸ் அடித்து ...

தேர்தல் அறிக்கையில்சலுகை மழை...ரூ.1.14 லட்சம் கோடி!

Posted: 05 May 2016 11:09 AM PDT

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, முன்னறிவிப்பின்றி வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடந்த, அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில், 2016 சட்டசபைதேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இலவச மின்சாரம், ஸ்கூட்டர் மானியம், விவசாய கடன் தள்ளுபடி என, 1.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகை மழை பொழியும் அந்த அறிக்கையில், பெண்களை கவரும் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளன.தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்* ...

ம.ந.கூட்டணிக்கு 160ல் வெற்றி சொல்கிறார் விஜயகாந்த்

Posted: 05 May 2016 11:10 AM PDT

திருவாரூர்: ''மத்திய உளவுத் துறை கருத்துக் கணிப்பு, தே.மு.தி.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு, 160 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது,'' என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், அவர் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர். ஜெயலலிதா அண்ட புளுகு என்றால், கருணாநிதி ஆகாச புளுகு. காமராஜர்படிக்கச் சொன்னார். ஜெயலலிதா, மக்களை குடிக்கச் சொல்கிறார். விஜயகாந்த் அடிக்கிறார் என்று கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கட்சிக்காரர்கள் தவறு செய்யும்போது, அதை ...

ஹரிஷ் ராவத்துக்கு சி.பி.ஐ., சம்மன்

Posted: 05 May 2016 01:13 PM PDT

டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தில் பதவியிழந்த முதல்வர் ஹரிஷ் ராவத், ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற புகார் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவருக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையில், காங்., அரசு நடந்தது. அரசுக்கு எதிராக, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் திடீரென போர்க் கொடி துாக்கியதால், அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முன்னதாக, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, ராவத்துக்கு, கவர்னர் உத்தரவிட்டார். அப்போது, சட்டசபையில் ஆதரவாக ஓட்டளிக்க, அதிருப்தி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™