Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


Malware Attackபாதுகாப்பற்றது

Posted: 05 May 2016 10:15 AM PDT

[color=#FF0000]Malware Attack [/color] பாதுகாப்பற்றது

ஈகரை தளம் பாதுகாப்பானது இல்லை என்று ஒவ்வொரு முறை தளம் திறக்கும் போது வருகிறது
பயமூர்த்தும் சிவப்பு நிற அறிக்கை , மூன்று நாட்களாக !
தைரியமாக நுழைந்து உள்ளேன் .
இந்த பயம் அநேகர் மனதில் இருக்கலாம் .
தலைமை இதில் கவனம் செலுத்தலாமா ?
சந்தேகங்களை போக்கவும்

ரமணியன்

பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்

Posted: 05 May 2016 08:37 AM PDT

1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். 2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். 3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். 4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். 5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். 6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். 7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். 8. ...

பிளஸ்-2 தேர்வு முடிவு

Posted: 05 May 2016 08:15 AM PDT

சென்னை, பிளஸ்--2 தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 23-ந்தேதி வரை நடந்தது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவு செய் யும் பணி நடந்த வருகிறது. சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள டேட்டா சென் டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. இரவு - பகலாக நடைப் ...

படித்ததில் பிடித்தது :) -...ஓட்டை விற்க, கூட்டம் நடத்தலாமா?

Posted: 05 May 2016 04:03 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

புதுக்கவிதை

Posted: 05 May 2016 01:34 AM PDT

பொறுப்பு…!! * இன்று விடிந்ததிலிருந்தே வெளுத்தப்படியே இருக்கிறது மேகங்களற்ற வெப்ப வானம். இன்று விடிந்ததிலிருந்தே தகிக்கும் வெப்பம் மனிதர்களையும் பறவைகளையும் வெளியில் போக வேண்டாமென அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள். இன்று விடிந்ததிலிருந்தே எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ? எந்தத் திசைவழியாயும் சென்றும் திரும்புகின்றது வெப்பக் காற்று. இப்பவே இப்படியென்றால், இன்னும் கத்திரித் தொடங்கினால் எப்படி அனல் பறக்குமோ? வெயில் என்றாலே மனிதர்களுக்கு நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு நெருப்பு. அதுவும் ...

பிறந்த நாள் காணும் த்ரிஷா: ரசிகர்கள் வாழ்த்து

Posted: 05 May 2016 01:08 AM PDT

- - - தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. அழகு பதுமையாக மாடலிங் துறையில் நுழைந்து 1999-ல் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். ஒல்லி தேகமும் கவர்ந்து இழுக்கும் சிரிப்பும் தமிழ் பட வாய்ப்பு கிடைக்க அவருக்கு வழிவகுத்தது. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக வலம் வந்த அவர் அதன் பின் மௌனம் பேசியதே படத்தில் நாயகியாக அறிமுகமானர். சாமி, அயியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, கில்லி உள்ளிட்ட படங்களில் அவரின் அற்புத நடிப்பால் இளம் காளைகளை அவரது ...

குருவருள் பெறுவோம்!

Posted: 05 May 2016 01:06 AM PDT

மே, 2 – திருநாவுக்கரசர் குருபூஜை - - – இறந்தவரை உயிர் பெறச் செய்வது சாமான்யமான விஷயமா? அதையே செய்து சாதனை படைத்தவர் திருநாவுக்கரசர். அந்த மாபெரும் மகான் வாழ்ந்த பூமி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள, திருவாமூர். இங்கு, புகழனார் – மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் மருள்நீக்கியார். இவரின் சகோதரி திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர், பெற்றோர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்டார் கலிப்பகையார். இந்நிலையில், ...

‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து…

Posted: 05 May 2016 12:50 AM PDT

பெண் சிசு கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து வரும் காலம் இது. கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை! ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது, . அதிலிருந்து சில பகுதிகள்: இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட் பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு ...

கடலூர் – ஓர் அறிமுகம்!

Posted: 05 May 2016 12:49 AM PDT

– முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. – பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. – இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை ...

‘கபாலி’ டீஸர் 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை

Posted: 05 May 2016 12:47 AM PDT

- ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கபாலி' படத்தின் டீஸர், 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது. – ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பிற்கு இருக்கின்றன. படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. – மே 1ம் தேதி இப்படத்தின் டீஸர் யூ-டியுப் தளத்தில் ...

நூற்றாண்டு விழா நாயகன் – பி.யு. சின்னப்பா

Posted: 05 May 2016 12:40 AM PDT

- மே 6, 1916ல் பிறந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. – அன்று, புதுக்கோட்டையில் உள்ள சாமியார் மடத்தின் வாசலில், கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து, கோட்டும், சூட்டுமாக ஒரு மனிதர் இறங்கினார். அவர் தேடி வந்த சாமியார், மூலையில் மவுனமாக அமர்ந்திருந்தார். அவர் கையை பிடித்து, 'சின்னசாமி… நீ இருக்க வேண்டிய இடம் இந்த சாமியார் மடம் இல்ல; கலை உலகம். – மேன் இன் த அயர்ன் மாஸ்க் என்ற கதைய தழுவி, உத்தம புத்திரன்ங்கிற படத்தை எடுக்கப் போறேன். ...

ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி

Posted: 05 May 2016 12:38 AM PDT

- கோல்கட்டா: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் முரளி விஜய் பவுலிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணிக்கு உத்தப்பா (74), கேப்டன் காம்பிர் (54) அரை சதம் கடந்தனர். ரசல் 16 ரன்களில் அவுட்டாக, கோல்கட்டா அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. ...

3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!

Posted: 05 May 2016 12:36 AM PDT

- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படங்கள் பிலிம் சுருள் மூலமாகத்தான் திரையிடப்பட்டன. அப்போது, வெட்டப்பட்ட பிலிம் துண்டுகளில் உள்ள படங்களை சிறுவர்கள் லென்ஸ் உதவியால் உருப்பெருக்கம் செய்து பார்த்து, விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் பிலிம்களைச் செருகி அதிலுள்ள படங்களை பெரிய அளவில் பார்ப்பதற்கு ஏற்ப விளையாட்டு கருவிகளும் விற்பனைக்குக் கிடைத்தன. தற்போது அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப, இதுபோன்ற கருவிகள் தரம் உயர்ந்து செல்போன்களில் உள்ள வீடியோ காட்சிகளைக் காணும் வகையில் ...

சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்

Posted: 05 May 2016 12:33 AM PDT

சமையல் எரிவாயு மானியம் நேரடியாக ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாலும், போலி சமையல் எரிவாயு இணைப்புகள் நீக்கப்பட்டதாலும் ரூ.21ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் சமையல் எரிவாயு மானியம் தொடர்பான கருத்தரங்கம் புதன்கிழமை நடை பெற்றது. இதில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், சமையல் எரிவாயு மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு ...

மக்களவைக்கு வராத அமைச்சர்கள்: மன்னிப்புக் கேட்டது மத்திய அரசு

Posted: 05 May 2016 12:32 AM PDT

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வராத காரணத்தால், மக்களவையில் கேள்விநேரத்தின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதை தொடர்ந்து, மத்திய அரசு மன்னிப்புக் கேட்டது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க சம்பந்தப் பட்ட ரயில்வே துறை அமைச்சர் மக்களவைக்கு வராத காரணத்தால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். அதையடுத்து, மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மன்னிப்பு கேட்டார். மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் புதன்கிழமை கூடியது. ...

தெரிஞ்சுக்கோங்க!.......'சம்மர் டிப்ஸ்!

Posted: 05 May 2016 12:23 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 04 May 2016 11:17 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - சென்னை? !

Posted: 04 May 2016 11:04 PM PDT

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' என்று விவேக் சொல்வது போல சொல்லுமோ சென்னை? புன்னகை



எல்லோரும் பார்க்கவே இதை தனி பதிவாக மீண்டும் போட்டிருக்கேன் புன்னகை

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

Posted: 04 May 2016 09:38 PM PDT

1)சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2)தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். 3)மாத்திரைகள் ...

நவீன கம்ப்யூட்டர் ஜோசியம்…..

Posted: 04 May 2016 09:36 PM PDT

- காலிக்குடங்களுடன் சாலை மறியல் நீரை பீய்ச்சி அடித்து துரத்தியது அரசு…… – நவீனத்திற்கு மாறியது மூடத்தனம் கம்ப்யூட்டர் ஜோசியம்….. – வெள்ளையனானார் காந்தி காகம் போட்ட எச்சத்தில்….. – பசியால் இறந்தவனுக்கு பத்து நாள் விருந்து – பாலுக்கு வழியன்றி அழுதது குழந்தை பக்கத்து கோவிலில் பாலாபிஷேகம்….. – கள்ள நோட்டிலும் கபடமற்ற சிரிப்பு காந்தி தாத்தா…. – ——————————- by arun bharathi

மழை வர நடந்தது கழுதைக் கல்யாணம்…

Posted: 04 May 2016 09:32 PM PDT

- மழை வர நடந்தது கழுதைக் கல்யாணம் வந்தது கழுதைக் குட்டி…. – "யார் என்னைத் தத்தெடுப்பார்கள்" ஏக்கத்தில் என் கவிக்குழந்தைகள் மரணப்படுக்கையில் நான்…. – சோதனைக்குழாய் குழந்தை பிறப்பதை விசித்திரமாய் பார்த்தது அநாதை இல்லக் குழந்தை…. – யாரிடம் கடன் வாங்க? என் மனதில் கற்பனைப் பஞ்சம்…. – வேட்டையாடப்பட்டது பறவைகள் அநாதையானது மரம்……. – அருண்பாரதி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™